பள்ளிகளில் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லீம் மாணவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது” என்று முஸ்லிம் சட்ட வாரியம் கூறியுள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 30,000 கல்வி நிறுவனங்களில் உள்ள 3 லட்சம் மாணவர்கள் அமிர்த மஹோத்சவ் கொண்டாட்டத்தினை முன்னிட்டு மூவர்ணக் கொடிக்கு முன்பாக சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று டிசம்பர் 29 அன்று பல்கலைக்கழக மானியக் குழு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்தின் பொது செயலாளர் மௌலானா காலித் ரஹ்மானி “பெரும்பான்மையினரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மற்றவர்கள் மீது திணிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறியுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் “உடல் நலத்துடன் தொடர்புடைய யோகாவுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்து இந்தியாவின் பெருமைஉயர்ந்துள்ளது.மத்திய கிழக்கில் உள்ள அனைத்து முஸ்லீம் நாடுகள் உட்பட முழு உலகமும் யோகாவையும் அதன் அங்கமான சூரிய நமஸ்காரத்தையும் அங்கீகரித்துள்ளது. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்த விஷயத்தை அரசியலாக்க முனைகிறது” என்று கூறியுள்ளார்.”
Home Breaking News முஸ்லிம் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது-இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியம்