தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு அஸ்ஸாம் அரசின் உயரிய விருதான “அசோம் பைபவ்” விருதை அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா வழங்கினார். ரத்தன் டாடா, அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சை துறையில் மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். அசாமில் மாநிலத் துறையுடன் இணைந்து 20 புற்றுநோய் சிகிச்சை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை டாடா டிரஸ்ட் அமைத்து சேவை ஆற்றி வருகிறது. இதற்காக ரத்தன் டாட்டாவுக்கு “அசோம் பைபவ்” விருது வழங்கப்பட்டுள்ளது.