தமிழக காவல்துறைக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி

0
224

தமிழக போலீஸ் துறைக்கு மிக உயிரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது.
விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு , சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெங்கையா நாயுடுவை, டிஜிபி, கமிஷனர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.இந்த கொடியை, இதுவரை இந்தியாவில் 10 மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட வெங்கையா நாயுடுவுக்கு சதுரங்க அட்டையை தமிழக முதல்வர் பரிசாக வழங்கினார்.
தமிழக போலீஸ் நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது. முன்னோடி மட்டுமல்ல முன்னணியிலும் உள்ளது. ஜனாதிபதியின் விருது பெற்றது தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பெருமை. உயிரை பொருட்படுத்தாமல் தமிழக காவல் துறை சேவைக்கான அங்கீகாரம். ஜாதி மத கலவரங்கள் துப்பாக்கிச்சூடுகள் இல்லை. போலீஸ் ஸ்டேசனில் மரணங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது. டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு முதல் காவலர் பதக்கங்கள் வழங்கப்படும். இவ்வாறு தமிழக முதல்வர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here