நாகப்பட்டினம்-நாட்டிலேயே முதன்முதலாக, நாகையில் அத்தி மரத்தில், 32 அடி உயர விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.

0
327

நாகையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் சிலை வீதியுலா நடத்தப்படுவது வழக்கம்.விநாயகர் வீதிஉலா துவக்கப்பட்டு, 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, விஸ்வரூப விநாயகர் குழு சார்பில், 1 கோடி ரூபாய் செலவில் அத்தி மரத்தில் விநாயகர்சிலை செய்யப்பட்டு உள்ளது.திருவாரூர் மாவட்டம், ஆண்டிப்பந்தலைச் சேர்ந்த திருநாவுக்கரசு ஸ்தபதி தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர், எட்டு மாதங்களாக பணியாற்றி இந்த சிலையை செய்துள்ளனர்.மொத்தம், 16 டன் எடையுடைய அத்தி மரத்திலான விநாயகர் சிலை, 32 அடி உயரத்திலும், 18 அடி அகலத்திலும் உள்ளது. இந்த சிலை நேற்று பொதுமக்கள் பார்வைக்காக உலா வந்தது.நாகையில் உள்ள நீலாயதாட்சி அம்மன் கோவில் வாசலில் இருந்து புறப்பட்டு, நான்கு வீதிகளில் வலம் வந்த வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here