1. ஐராவதம் மகாதேவன் அக்டோபர் 2, 1930 இல் திருச்சிராப்பள்ளியில் உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்தார்.
2. சிந்து எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் (குறிப்பாக தமிழ் பிராமி எழுத்துக்கள்) மீதான ஆர்வம் அவரைக் கல்வெட்டு எழுத்தியலின் மீது ஈர்த்தது.
3. முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த மகாதேவன், பின்னர் கல்வெட்டு எழுத்துக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.
4. கரூர் அருகே புகலூரில் காணப்பட்ட குகையெழுத்துகளில் கூறப்பட்டிருந்த செய்தியை (அரசர்களின் பெயர்கள்) வெளிக்கொணர்ந்ததை ஒட்டி அவர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
5. 1966 ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் மகாதேவன் கலந்து கொண்டார்.
6. பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.