பாகிஸ்தானில் உள்ள சிந்துவில் வசிக்கும் பாகிஸ்தானிய ஹிந்து சமூகத்தினர் தீபாவளி கொண்டாட அனுமதிக்கப்படவில்லை. மிக முக்கியமான இந்த ஹிந்துப் பண்டிகையைக் கொண்டாட அவர்கள் வெளியே வருவதைத் தடுக்க, துப்பாக்கி ஏந்திய அங்குள்ள முஸ்ளிம் பயங்கரவாதிகள் ஹிந்து வீடுகளை நோக்கி மிரட்டும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாகிஸ்தானில் பல இடங்களில் இத்தகைய மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. ஆன்லைன் செய்தி நிறுவனமான என்.என் நிருபரால் முகநூலில் வெளியிடட ஒரு வீடியோவில், அங்கு வசிக்கும் ஹிந்துக்கள், பாகிஸ்தானில், ஹிந்துக்களாகிய எங்களால் தீபாவளியைக் கொண்டாட முடியாது, ஹோலியைக் கொண்டாட முடியாது. நேற்றிரவு அவர்கள் எங்கள் வீடுகளில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தயவுசெய்து எங்களை பாரதத்துக்குகு அனுப்புங்கள், அல்லது எங்களை சாக விடுங்கள். நாங்கள் நீதி கேட்கிறோம். எங்கள் கல்லறைகள்கூட சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, நாங்கள் வாழவோ இறக்கவோகூட இங்கு அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தானில், சிந்தி ஹிந்துக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள்” என் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும், 1,000 முதல் 5,000 ஹிந்துக்கள், பாகிஸ்தானில் தாங்கள் எதிர்கொள்ளும் கொடூரமான துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க பாரதத்தில் தஞ்சம் அடைகின்றனர். பாகிஸ்தானில் சிறுபான்மைச் சமூகமமாக உள்ள ஹிந்துக்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான மனித உரிமை மீறலாக மைனர் ஹிந்துப் பெண்களைக் கடத்துதல், கற்பழித்தல், கட்டாய மதமாற்றம், ஹிந்துக்கள் அவர்களது வழிபாட்டுத் தலங்கள் மீதான வன்முறைகள், பாகுபாடுகள் ஆகியவை அங்கு அதிகரித்து வருகின்றன. இவர்களை போன்றவர்களை காப்பாற்றவே கடந்த 2019ல் பாரத் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தாக்கல் செய்தது. இந்த மனிதாபிமான சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அண்டை முஸ்லிம் நாடுகளின் மிகவும் துன்புறுத்தப்படும் ஹிந்து, சீக்கியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு ஓரளவு நிவாரணம் அளித்திருக்கும். ஆனால், இதனை தடுக்க பாரதத்தில் உள்ள சக்திவாய்ந்த இஸ்லாமிய, இடதுசாரி, தாராளவாத அமைப்பினர், தங்களுக்கு ஆதரவான கட்சிகளுடன் இணைந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். சி.ஏ.ஏ என்பது பாரத முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டம்’ என்று சித்தரிக்க முயன்றனர். பல முக்கிய ஊடகங்களால் இந்த பொய்கள் பரப்பப்பட்டன. மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்களும் சிந்தனைக் குழுக்களும் இத்தகைய பொய்களை பரப்புவதற்கு ஊக்கம் அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.