யோகேன் சங்மா மேகாலயா காரோ இன வனவாசி இளைஞர். காரோ மலைப்பகுதி களில் ஆங்கிலேய ஆட்சி அமைவதை எதிர்த்து காரோ இன மக்களை ஒருங்கி ணைத்துப் போராடிய வீரன்.
காரோ இன மக்களின் ஆதரவுடன் ஆங்கிலேயப் படைகள் மீது தொடர்ந்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தவர். ஒரு தாக்குதலின் போது ஆங்கிலேயப் படை தாக்கியதில் கொல்லப்பட்டார்.
யோகேன் சங்மாவின் வீர மரணம் காரோ இன மக்களிடமும், காரோ மலைப்பகுதி களிலும் பெரும் எழுச்சியைத் தோற்றுவித் தது.
ஆங்கிலேயர்கள் மீது கோபம் கொண்ட காரோ வனவாசி மக்கள் மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்திட யோகேனின் தியாகம் பெரும் உந்து சக்தியாக இருந்தது.
தியாகிகளின் வீர மரணம் என்றும் வீண் போவதில்லை என்பதற்கு யோகேன் சங்மாவின் வாழ்க்கை நல்லதொரு முன்மாதிரியாகும்.
Home Breaking News ஆங்கிலேய அடக்குமுறையை எதிர்த்துப் போராடி பலிதானமாகிய மேகாலயாவின் யோகேன் சங்மா (1872):