18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து ; டி.ஜி.சி.ஐ. அதிரடி நடவடிக்கை

0
120

நாட்டில் போலி மருந்து உற்பத்தி விவகாரத்தில் 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் (டி.ஜி.சி.ஐ.) சார்பில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது. போலி மருந்துகளை தயாரித்ததற்காக 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இவற்றில் மிக அதிக அளவாக, இமாசல பிரதேசத்தில் 70 நிறுவனங்கள், உத்தரகாண்டில் 45 நிறுவனங்கள் மற்றும் மத்திய பிரதேசத்தில் 23 நிறுவனங்கள் மீது போலி மருந்துகள் தொடர்புடைய அரசின் அதிரடி சோதனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது .நாட்டில் போலி மருந்துகள் தயாரிப்புடன் தொடர்புடைய மருந்து நிறுவனங்களில் இதுபோன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here