இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலமாக மிசோரம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக ஹரியானா மாநிலம் குருகிராமில் செயல்படும் நிர்வாக மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராஜேஷ் கே பில்லானியா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குடும்ப உறவுமுறைகள், வேலை சார்ந்த பிரச்னை, சமூக பிரச்னை மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்தல், மதம், மகிழ்ச்சியில் கோவிட் ஏற்படுத்திய தாக்கம், உடல் மற்றும் மன நலம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.