DRDO மற்றும் இந்திய கடற்படையினர்  ‘ADC-150’ இன் முதல் சோதனை வெற்றி

0
168

DRDO மற்றும் இந்திய கடற்படையினர் ஒடிசா கடற்கரையில் IL 38SD விமானத்தில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏர் டிராப்பபிள் கன்டெய்னரான ‘ADC-150’ இன் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளனர்.150 கிலோ சுமக்கும் திறன் கொண்டது இந்த கன்டெய்னர்.கடலோரப் பகுதியிலிருந்து 2,000 கிமீ தொலைவில் நிறுத்தப்பட்டுள்ள போர்க்கப்பல்களுக்கு (ஆபத்தான நிலையில்) முக்கியமான பொறியியல் தேவையைப் பூர்த்தி செய்ய மற்றும் விரைவாக பொருட்களை வழங்குவதன் மூலம் கடற்படை செயல்பாட்டுத் தளவாடத் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது.இதன் மூலம் உதிரிபாகங்கள் மற்றும் அத்தியாவச பொருட்களை பெற கடற்கரைக்கு அருகில் வர வேண்டிய கப்பல்களின் தேவையை குறைக்கிறது.ADC-150ஐ வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக விஞ்ஞானிகளுக்கும் இந்திய கடற்படைக்கும் பாதுகாப்பு துறையின் செயலாளர் மற்றும் DRDO தலைவர்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here