இந்தியாவின் P-75I எனப்படும் Project 75 India திட்டத்தின் கீழ் அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளை வாங்குவதற்கான திட்டத்திற்கு ஜெர்மனி தனது மேம்படுத்தப்பட்ட Type 209 ரக நீர்மூழ்கிகளை தர முன்வந்த நிலையில் தற்போது தென்கொரியா தனது KSS 3 தொகுதி 2 ரக நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படைக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சோனார் மற்றும் தாக்குதல் கட்டுபாட்டு அமைப்புகள் உள்ளன.தென்கொரிய நீர்மூழ்கி கப்பல்கள் தான் இந்திய கடற்படையின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கின்றன மேலும் இவற்றில் உள்ள VLS அமைப்புகள் காரணமாக SLCM க்ரூஸ் ஏவுகணைகளையும் ஏவி தாக்குதல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.