பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள தார்கி கிராமத்தில், ஹிந்து சிறுபான்மையின மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள லீலா ராம் என்ற வர்த்தகருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களை, மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று, முஸ்லிம் மதத்திற்கு மாற்றியதுடன், கட்டாய திருமணமும் செய்தனர். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஹிந்துப் பெண்களை குறிவைத்து இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல், பாகிஸ்தானில் உள்ள இரண்டு ஹிந்து கோவில்கள் மீதும் சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.