ஓப்பன்ஹைமர்: பகவத் கீதை காட்சியை நீக்க உத்தரவு

0
208

புதுடில்லி-சமீபத்தில் வெளியான, ஓப்பன்ஹைமர் என்ற, ‘ஹாலிவுட்’ திரைப்படத்தில், பகவத் கீதையை அவமதிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளதற்கு, மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை அமைச்சர் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜப்பான் மீது உலகின் முதல் அணுகுண்டு, 1945ல் வீசப்பட்டது. அதை தயாரித்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் வாழ்க்கை வரலாறு, தற்போது திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், ஓப்பன்ஹைமர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் ஒரு காட்சியில், ஓப்பன்ஹைமராக நடித்துள்ள நடிகர் கில்லியன் மர்பி உடன், பெண் ஒருவர் உடலுறவில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அப்போது, கில்லியன் மர்பி, பகவத் கீதை புத்தகத்தை கையில் வைத்து, அதை உரக்கப் படிப்பதை போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன; படத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி வருகின்றன.சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்கும்படியும், இந்த விவகாரத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், சென்சார் போர்டுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here