தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்களில் முதன்மையானவர்.தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை, பற்றற்றிருக்கும் ஆன்மீக வாழ்க்கை என அனைத்திற்கும் முன்னுதாரணமானவர். எளிமை, நேர்மை, யாருக்கும் தீங்கு செய்யாமல் நேர்மையாக இருத்தல், நிர்வாகத் திறன், தொலைநோக்குப் பார்வை, அயராத உழைப்பு, பதவியை கிரீடமாக கருதாமல் நல்லது செய்ய தரப்பட்ட கருவியாக பார்த்த பண்பு, நாற்காலிக்காக எதையும் செய்யத் தயங்காதோர் மத்தியில் அது தேடிவந்த போதும் ஏற்க மறுத்த மாண்பு ஆகிய குணங்கள் கொண்ட அப்பழுக்கற்ற அரசியல்வாதி.பிள்ளைகள் பசியாற பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று சொன்ன தலைவன். மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தவர்.நெய்வேலி நிலக்கரி திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, திருச்சி பாரதி ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்,மேட்டூர் காகிதத் தொழிற்சாலை ஆகியவை போன்று ஊர் தோறும் தொழிற்சாலைகளை நிறுவி பாமர மக்களின் வறுமையைப் போக்கியதோடு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் கரம் பிடித்துத் தூக்கிவிட்டார்.மேட்டூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை, காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், தொட்டில் பாலம் என தமிழ்நாட்டின் அனைத்து நதி நீர் திட்டங்கள் இவரால் உருவாக்கப்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரம் காத்தன.1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரி திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார். இதலனாலேயே “கிங் மேக்கர் காமராசர்” என்று போற்றப்படுகிறார்.தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்டவர். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே.1976 ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது.தமிழகத்தின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்கியவர். இவரைப் போல் ஒரு தலைவரை நாடு பார்த்ததுண்டா?