ஆத்மானந்தா என்ற பேரில் அறியப்பட்ட க சுவாமி ஆத்மானந்தர் டிசம்பர் 8 1883 ஆம் ஆண்டு கேரளத்தில் திருவல்லா பகுதியில் பெரிங்ஙரா என்ற சிற்றூரில் பிறந்தார். படிப்பின்மீது கிருஷ்ணமேனனுக்கு அபாரமான ஈடுபாடு இருந்தது. மிகப்பெரிய குடும்பத்தில் அக்காலத்தில் படிப்புக்கான வருமானம் இருக்கவில்லை. கிருஷ்ணமேனன் தனியார்பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி பணம் மிச்சம் செய்து சென்னை பல்கலையில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார். இளங்கலை பட்டம் பெற்ற பின் திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை பார்த்தார். இக்கால கட்டத்தில் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். ஒரு நாள் துறவி யோகானந்தாவைச் சந்திக்க நேர்ந்தது.
கிருஷ்ணமேனன் தன் அனைத்து அறிவையும் தர்க்கத்திறனையும் கொண்டு யோகானந்தாவை மோதி உடைக்க முயன்றார். மெல்ல மெல்ல அவர் யோகானந்தாவின் குரலைக்கேட்டுக்கொண்டே இருக்க ஆரம்பித்தார். விடியற்காலையில் கோழி கூவி கோட்டைக்காவல் மாற்றப்பட்ட ஒலிகள் எழுந்தபோது அவர் யோகானந்தாவின் சீடராக வெளியே வந்தார். இவரது எண்ணம் ஆன்மீகத்தை நாடிச் சென்றது. கிருஷ்ணனின் வடிவில் பிரம்மத்தை உணர்ந்து ராதையாக தன்னை நிறுத்திச் செய்யும் ராதாமாதவ பாவனா என்ற முறையை மேற்கொண்டார். இவரது வீட்டில் நிகழும் வேதாந்த வகுப்புகள் சர்வதேசப் புகழ்பெற்றவை. ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஜூலியன் ஹக்ஸ்லி, பால் பிரண்டன் போன்ற பலர் இவரது மாணவர்கள்