வரும் 2024 ஜன. 22ஆம் தேதி, அயோத்தி, ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமனின் சிலை ‘பிராணப் பிரதிஷ்டை’ செய்யப்படுகிறது. ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையால் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான கோயிலின் கர்ப்பகிருஹத்தில் பாலராமன் பிரவேசிக்க இருக்கிறான். சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமன் தனக்குரிய இடத்தை அடைந்திருக்கிறான்.
ஆனால், இந்த வெற்றி எளிதில் அடையப்படவில்லை. இதற்காக எண்ணற்ற ராம பக்தர்கள் போராடி இருக்கின்றனர். இந்த ராமகாரியத்தில் லட்சக் கணக்கானோர் தமது இன்னுயிர் ஈந்துள்ளனர்; கோடிக் கணக்கானோர் தங்கள் கடும் உழைப்பை நல்கி இருக்கின்றனர். இவை வருங்காலத் தலைமுறைக்குக் கூறப்படுவது அவசியம். இந்த வெற்றிச் சரித்திரத்தை முழுமையான ஆவணமாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், எழுத்தாளர் திரு. சேக்கிழான் இந்நூலை எழுதி இருக்கிறார்.
1. அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதையின் கால வரிசைப் பட்டியல்,
2. மாபெரும் மக்கள் இயக்கத்தின் தொடர் போராட்டங்கள்,
3. நீதிமன்றங்களில் நடத்திய சட்டப் போராட்டங்கள்,
4. தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகள்,
5. இந்தப் போராட்டத்தின் கதாநாயகர்கள்,
6. சரித்திர நிகழ்வின் புகைப்படப் பதிவுகள்,
7. அயோத்தி ராமர் ஆலயத்தின் சிறப்புகள்
-போன்றவை இந்நூலில் தெளிவுபடத் தொகுக்கப்பட்டுள்ளன.
விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் திரு. ஆர்.பி.வி.எஸ். மணியன் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். ஓவியர் திரு. வே.ஜீவானந்தத்தின் அழகிய ஓவியம் முன் அட்டையை அலங்கரிக்கிறது. 128 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை: ரூ. 125-
ஹனுமத் ஜெயந்தியன்று மாலை (ஜன. 11, 2024, வியாழன்) சென்னை புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் அரங்கில் (F 64) இந்நூல் வெளியிடப்பட உள்ளது. ராம பக்தர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் இது.
அனைவரும் வருக! ஸ்ரீ இராமரின் அருளாசி பெறுக!!