சுனில் ஷெட்டி பிரபலமான திரைப்பட நடிகர். சினிமாவில் ஆபத்தில் சிக்கிய பெண்களைக் காப்பாற்றுவது போல் நடிப்பார்கள். நடிகர் சுனில் ஷெட்டியோ மும்பைக்கு கடத்திவரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நேபாளப் பெண்கள் 128 பேரை மீட்டு அந்நாட்டிற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைத்துள்ளார். சம்பவம் நடந்த வருடம் 1996. நேபாள அரசு அப்பெண்களை திருப்பி அழைத்துச் செல்ல முன் வரவில்லை. இந்நிலையில் சுனில் ஷெட்டியே 128 பெண்கள் அனைவருக்கும் விமானப் பயணச் சீட்டு வாங்கி பாதுகாப்பாக காத்மாண்டிற்கு (நேபாளம்) அனுப்பி வைத்துள்ளார். சுனில் ஷெட்டி இதை எவரிடமும் சொல்ல வில்லை. 24 வருடங்கள் சென்றபின் அவரால் காப்பாற்றப்பட்ட பெண் ஒருவர் இச்சம்பவத்தை தெரிவித்துள்ளார். நடிகர் சுனில் ஷெட்டியிடம் இதைப் பற்றி கேட்ட போது “அச்சம்பவம் பற்றி ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட் டுள்ளது” என்று தெரிவித்தார். பாலியல் தொழிலுக்காக கடத்தி வரப்பட்ட பெண்களை மீட்டு நேபாளத்திற்கு திருப்பி அனுப்பியதில் முழு பங்கும் எனக்குரியது அல்ல. பலரது கடுமையான உழைப்பு உதவியினால் அது நடைபெற்றது என்று கூறுகிறார். நடிகர் சுனில் ஷெட்டியின் மாபெரும் சேவை போற்றுதலுக்குரியது.
Home Breaking News 128 நேபாளப் பெண்களைக் காப்பாற்றி அந்நாட்டிற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பிய நடிகர்