கடந்த 1970 இல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.12 +ஆயில் 13 பைசா சேர்த்து ரூ.3.25. தற்போதய விலை ரூ.100/- கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகம்.
அன்று டீ விலை 20 பைசா, இன்று ரூ.10/- இது 50 மடங்கு அதிகம், அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஒரு மாதத்திற்கான கட்டணம் ரூ 5.70 இன்று ரூ 240/- இது 42 மடங்கு அதிகம், அன்று வெஜ் மீல்ஸ் ரூ.3 இன்று ரூ.120/- இது 40 மடங்கு அதிகம்,
அன்று சினிமா டிக்கெட் ரூ.2.50, இன்று ரூ.120/- இது 48 மடங்கு அதிகம், அன்று மினிமம் பஸ் கட்டணம் 10 பைசா, இன்று ரூ.4/- இது 40 மடங்கு அதிகம், அன்று சிறிய கூடை பூ 25 பைசா, இன்று அது ரூ.25/- இது 80 மடங்கு அதிகம், அன்று தங்கம் ஒரு கிராம் ரூ.30, இன்று அது ரூ.4500/- இது 150 மடங்கு அதிகம், அன்று மத்திய அரசு ஊழியரின் சம்பளம் ரூ.250/- இன்று அது ரூ.25,000/- இது 100 மடங்கு அதிகம், அன்று சென்னை பெசன்ட் நகரில் ஒரு பிளாட் விலை ரூ.30,000/- மட்டுமே. ஆனால் அதே பிளாட் இன்றைய விலை ரூ.1.5 கோடி. இது கிட்டத்தட்ட 500 மடங்கு அதிகம்.
இதையெல்லாம் பற்றி எவனும் பேசாமல், வெறும் 30 மடங்கு மட்டுமே பெட்ரோல் விலை ஏறியதைப் பற்றி மட்டும் தற்போது விவாதம் செய்வது ஏன்? அதிலும் மத்திய அரசு GSTக்குள் கொண்டு வந்து பெட்ரோல் விலையை பாதியாக குறைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களை பற்றி எதுவும் பேசாமல் இருப்பது ஏனோ?