ஒலிம்பிக் போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து இந்தியா ஹாக்கி அணி வெற்றி.

1
253

ஒலிம்பிக் தொடரில் இன்று நடந்த இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான ஹாக்கி போட்டியில், இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று அசத்தியது.


டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நேற்று (ஜுலை.23) கோலாகலமாக தொடங்கியது. இதில், இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. எனினும், சீன-தைபே இணையை அடித்து துவைத்த இந்திய அணி – வில்வித்தையில் காலிறுதிக்கு தகுதி இந்தியா வெற்றி அதே சமயம், வில்வித்தை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ் – தீபிகா குமாரி இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று காலை நடைபெற்ற இப்போட்டியில் சீன தைபே அணியை – இந்திய அணி எதிர்கொண்டது. இதில், 5-3 என்ற கணக்கில் வென்று இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது.

மேலும் இந்தியா vs நியூசிலாந்து இந்நிலையில், இன்று காலை நடந்த ஹாக்கி போட்டி, ஆண்கள் பிரிவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் ஃபெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய நியூசிலாந்து, முதல் கோல் அடித்து 1-0 என்று முன்னிலை பெற்றது. இதையடுத்து, பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை பயன்படுத்திய இந்தியாவின் ரூபிந்தர் சிங் அதனை கோலாக மாற்ற, ஆட்டம் 1- 1 என்ற சமநிலை அடைந்தது. மீண்டு வந்து வெற்றி இதையடுத்து முதல் பாதி ஆட்டம் முடிய சில நொடிகளே இருந்த நிலையில், ஹர்மன்ப்ரீத் சிங் அபாரமான கோல் ஒன்றை அடிக்க, இந்திய அணி 2-1 என்று முன்னிலை பெற்றது. இதனால், 2ம் பாதியில் ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. நியூசிலாந்து வீரர்கள் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும், ஃபெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய ஹர்மன்ப்ரீத் இரண்டாவது கோல் அடிக்க, இந்தியாவுக்கு மூன்றாவது கோல் கிடைத்து, 3 – 1 என்று லீடிங் பெற்றது. இறுதியில் ஆட்டம் முடியும் தருவாயில் நியூசிலாந்துக்கு மற்றொரு கோல் கிடைக்க 3-2 என்று ஆட்டம் மேலும் பரபரப்பானது. எனினும், மேற்கொண்டு நியூசிலாந்து கோல் அடிக்காமல் பார்த்துக் கொண்ட இந்திய அணி, 3-2 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here