ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்களால் அங்குள்ள, பெண்கள் நிலை குறித்த அச்சம் உலக அளவில் எழுந்துள்ளது. ஆனால், இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்ற நிலையில், தலிபான்களை தைரியமாக எதிர்த்தும், சம உரிமை கோரியும் பெண்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். ஆப்கனில் தலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசியலில் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு, அதிகாரம் வேண்டும் எனக் கோரி காபூலில் போராடிய பெண்கள் மீது, தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது ஒரு பெண் தலிபான் பயங்கரவாதியின் துப்பாக்கியை நேருக்கு நேர் எதிர்த்து நின்றார். இந்த காட்சியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.