நுகர்வோர் விழிப்புணர்வுக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு அமைப்பான அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து அமைப்பு (ஏ.பி.ஜி.பி), கடந்த ஞாயிறு (03.10.2021) அன்று ஒருநாள் நுகர்வோர் பயிலரங்கம் ஒன்றை சென்னை தி.நகரில் உள்ள ஸ்டெனோகிராப்பர்ஸ் கில்ட் வளாகத்தில் நடத்தியது. அதில், உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படங்கள், அதனை கண்டறியும் முறை, தரமான மருத்துவ சிகிச்சையை பெரும் வழிமுறைகள், தங்க நகைகள் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம், அதன் பயன்கள், பொருட்கள் வாங்கும் முன், வாங்கிய பின் செய்ய வேண்டியவை போன்ற பல்வேறு தலைப்புகளில் நுகர்வோருக்கு பயனுள்ள விழிப்புணர்வுத் தகவல்களை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதாசிவம், உணவில் கலப்படம் கண்டறிவது குறித்து செய்முறை பரிசோதனைகளை செய்து காண்பித்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு ஏ.பி.ஜி.பியின் தமிழக, கேரள ஒருங்கிணைப்பாளர் எம்.என். சுந்தர், தேசியக்குழு உறுப்பினர் விவேகானந்தன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.