சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ 40,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது, தமிழகத்திற்கு இதில் ரூ 2,036.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை எதிர்கொள்வதற்காக இவ்வருடம் மொத்தம் ரூ. 1,15,000 கோடி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. செஸ் வரி வசூலில் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கு கூடுதலாக மேற்கண்ட தொகை வழங்கப்பட்டுள்ளது. இழப்பீட்டை எதிர்கொள்வதற்கான நிதியை கடன் வசதியின் மூலம் வழங்கும் ஏற்பாடுகளுக்கு அனைத்து மாநிலங்களும் யுனியன் பிரதேசங்களும் ஒப்புக்கொண்டுள்ளன.