sanjari – VSKDTN News https://vskdtn.org Mon, 14 Mar 2022 07:29:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ம.பி.,யில் பயங்கரவாதிகள் 4 பேர் கைது https://vskdtn.org/2022/03/14/terrorists-in-ma-b-4-p/ https://vskdtn.org/2022/03/14/terrorists-in-ma-b-4-p/#respond Mon, 14 Mar 2022 07:29:19 +0000 https://vskdtn.org/?p=13027 மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் போபாலில்,வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு உளவுத்துறை தெரிவித்தது.பயங்கரவாத தடுப்பு படை போலீசார், போபாலில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். போபாலில் இரண்டு வீடுகளில் வங்கதேசத்தைச் சேர்ந்த நான்கு பேர் தங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்., நேற்று முன்தினம் இரவு அந்த வீடுகளுக்குள் அதிரடியாக நுழைந்து நான்கு பேரையும் கைது செய்தனர். அந்த வீடுகளில் இருந்த வெடிகுண்டுகள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.விசாரணையில் அவர்கள் நான்கு பேரும், வங்க தேசத்தில் செயல்படும் ஜே.எம்.பி., எனப்படும், ‘ஜமாயத் உல் பங்களாதேஷ்’ என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://vskdtn.org/2022/03/14/terrorists-in-ma-b-4-p/feed/ 0
இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் இருவர் கைது https://vskdtn.org/2022/03/14/pakistanis-trying-to-infiltrate-the-indian-border/ https://vskdtn.org/2022/03/14/pakistanis-trying-to-infiltrate-the-indian-border/#respond Mon, 14 Mar 2022 07:12:11 +0000 https://vskdtn.org/?p=13024 பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் செக்டாரில் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானுக்குள் இருந்து கோதுமைப் பயிர்களுக்குள் மறைந்து ஊர்ந்து வந்த இரண்டு பேரை, பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். எல்லையை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்த இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://vskdtn.org/2022/03/14/pakistanis-trying-to-infiltrate-the-indian-border/feed/ 0
மசூதியை அகற்ற கோரிய மனு: நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு https://vskdtn.org/2022/03/14/petition-to-remove-the-mosque/ https://vskdtn.org/2022/03/14/petition-to-remove-the-mosque/#respond Mon, 14 Mar 2022 07:03:08 +0000 https://vskdtn.org/?p=13021 உத்தர பிரதேச மாநிலம் மதுராவில், ஷாஹி இத்காஹ் மசூதி உள்ளது. இங்குள்ள கத்ரா கேஷவ் தேவ் கோவில் தான், பகவான் கிருஷ்ணனின் ஜன்ம பூமியாக கருதப்படுகிறது.கிருஷ்ண ஜன்ம பூமி வளாகத்தை ஆக்கிரமித்து, ௧௭ம் நுாற்றாண்டில், ஷாஹி இத்காஹ் மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மசூதியை அகற்ற கோரி, மதுரா நீதிமன்றத்தில் ஒரு குழுவினர், ௨௦௨௦ம் ஆண்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை, மதுரா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதே கோரிக்கையை வலியுறுத்தி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு ஜனவரியில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். மனுவை வழக்கறிஞர் வழியாக தாக்கல் செய்யாமல், தானே நேரடியாக வந்து தாக்கல் செய்தார்.
இதையடுத்து, மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.வழக்கறிஞர் வாயிலாக அதே மனுவை மனுதாரர் தாக்கல் செய்தார். இதை, தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுள்ளது.

]]>
https://vskdtn.org/2022/03/14/petition-to-remove-the-mosque/feed/ 0
கட்டணமின்றி மாணவர்கள் மீட்பு பிரதமருக்கு அண்ணாமலை நன்றி. https://vskdtn.org/2022/03/14/free-students-m/ https://vskdtn.org/2022/03/14/free-students-m/#respond Mon, 14 Mar 2022 06:57:24 +0000 https://vskdtn.org/?p=13018 உக்ரைன் மீதான போர் துவங்கும் முன் மத்திய அரசு, ‘ஆப்பரேஷன் கங்கா’ திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த துவங்கி விட்டது. உக்ரைனில் உள்ள மாணவர்கள் அனைவரும் தாயகம் திரும்பும்படி சுற்றறிக்கை அனுப்பியது. அவர்களை இலவச விமானங்கள் வாயிலாக, கட்டணமின்றி மத்திய அரசு மீட்டு விட்டது.கடமை உணர்வுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் செயல்பட்டு, சாதித்துக் காட்டிய பிரதமர் மோடிக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறோம்.

]]>
https://vskdtn.org/2022/03/14/free-students-m/feed/ 0
இதுதான் உலக அதிசயங்கள் 7 https://vskdtn.org/2022/03/14/this-is-world-wonders-7/ https://vskdtn.org/2022/03/14/this-is-world-wonders-7/#respond Mon, 14 Mar 2022 06:47:35 +0000 https://vskdtn.org/?p=13015 படித்ததில் பிடித்தது

இதுதான்
உலக அதிசயங்கள் 7:

ஒரு வகுப்பில் ஆசிரியர் பிள்ளைகளை உலகின் சிறந்த ஏழு அதிசயங்களைப் பட்டியலிடச் சொன்னார்.

பிள்ளைகள் அனைவரும்
எழுதிக் கொடுத்துவிட்டனர்.

ஒரே ஒரு குழந்தை மட்டும்
இன்னும் முடிக்கவில்லை;யோசித்து யோசித்து எழுதிக் கொண்டிருந்தாள்.
ஆசிரியர் அருகில் சென்றார்

” சாரு! என்ன ஆயிற்று ஏன் இன்னும் முடிக்கவில்லை?

“என்ன சார் செய்வேன்? ஆண்டவனின் படைப்பில் அதிசயங்களுக்குப் பஞ்சமேயில்லை. அவற்றில் எனக்கு அதிசயமாகத் தோன்றியவைகளைப் பட்டியலிட்டு விட்டேன். சரிதானா எனப் பார்த்துச் சொல்லுங்கள்.” என்றாள்.

ஆசிரியர் சாருவின் பட்டியலை வாசித்தார்.

சாருவின் பட்டியல் இதோ:

என்னைப் பொருத்தவரை
இந்த ஏழும்தான் கடவுளின் படைப்பில் அதிசயங்களாகக் கருதுகிறேன்.

1. பார்க்க முடிவது (ஒருநாளைக்குக் கண்களில் கர்சீஃபைக் கட்டிக்கொண்டு பாருங்கள்)
2.கேட்க முடிவது (ஒருநாளைக்குக் காதில் பஞ்சு வைத்துப் பாருங்கள்)
3.தொட்டு உணர முடிவது ( கற்பனை செய்து பாருங்கள் உங்கள் 6 மாதக் குழந்தை உங்களைத் தொடுவதை உணரமுடியாவிட்டால் எப்படியிருக்கும் என்று)
4.சுவையை உணர முடிவது ( பிரியாணிக்கும் கம்மங்கூழுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தால் எப்படியிருக்கும்)
5.சிந்திக்க முடிவது (இதை விடாய் பெரிய தண்டனை இருக்கமுடியுமா?)
6.சிரிக்க முடிவது (எவ்வளவு சந்தோஷப்பட்டாலும் மிருகங்களால் சிரிக்க முடிவதில்லை. சிரிப்பு எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் மனிதனுக்கு?
7.அன்பு செலுத்துவது( ஒரு நாய்க்குட்டி வளர்த்துப்பாருங்கள் அன்புக்கு அர்த்தம் தெரியும்)

வகுப்பில் ஒரே அமைதி (pin-drop silence). ஆசிரியர் மெதுவாகக் கைதட்டினார். புரிந்ததும் எல்லாக் குழந்தைகளும் ஒவ்வொருவராகக் கை தட்ட ஆரம்பித்தன.

வகுப்பே கைதட்டிப் பாராட்டியது சாருவை.

எல்லோரும் யோசிப்பது போலவே
யோசிக்க வேண்டுமா என்ன?
மாற்றி யோசியுங்கள்.
புதுப் புது விஷயங்கள்புரியும்.
புதுப் புது அர்த்தங்கள் தோன்றும்.

ஶ்ரீ பக்தன்ஜி

]]>
https://vskdtn.org/2022/03/14/this-is-world-wonders-7/feed/ 0
தலித் ஹிந்துவா..கிறிஸ்துவரா? சென்னை மேயர் ப்ரியா ராஜன்., https://vskdtn.org/2022/03/13/dalit-hindu-christ/ https://vskdtn.org/2022/03/13/dalit-hindu-christ/#respond Sun, 13 Mar 2022 12:41:19 +0000 https://vskdtn.org/?p=13008 சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ப்ரியா ராஜன், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். தமிழக தேர்தல் கமிஷனுக்கு பொய் தகவலை கொடுத்துள்ளார். தலித் மக்களுக்கு அரசு வழங்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள், அவர்கள் மதம் மாறினால் கிடைக்காது என்ற நிலை இருப்பதால், மதம் மாறியவர்கள் தொடர்ந்து, ஹிந்து மதத்தில் நீடிப்பது போல காட்டி வருகின்றனர்.
பெரம்பூர் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. செங்கை சிவம், கிறிஸ்துவர். தன் அன்றாட வாழ்வில் அந்த மதத்தை பின்பற்றுபவர். ஞாயிறு தோறும் சர்ச்சுக்கு சென்று வருபவர் என்ற தகவல் தெரிய வர, அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
‘நான் கிறிஸ்துவர் அல்ல; ஹிந்து மதத்தை சேர்ந்தவன்; ஹிந்துவாக தான் இருக்கிறேன்’ என்று கூறிய செங்கை சிவம், ஆரிய சமாஜத்தில் இருந்து கடிதம் வாங்கி கொடுத்திருக்கிறார்.

]]>
https://vskdtn.org/2022/03/13/dalit-hindu-christ/feed/ 0
பிரதமருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு https://vskdtn.org/2022/03/13/with-the-prime-minister-yogi-adityana/ https://vskdtn.org/2022/03/13/with-the-prime-minister-yogi-adityana/#respond Sun, 13 Mar 2022 12:35:55 +0000 https://vskdtn.org/?p=13005 சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. யோகி ஆதித்யநாத் முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.

இன்று அவர் டில்லி வந்தார். டில்லியில் துணை ஜனாதிபதியை சந்தித்து பேசினார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசினார். அப்போது, மாநிலத்தில் அமைய உள்ள புதிய அமைச்சரவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது

]]>
https://vskdtn.org/2022/03/13/with-the-prime-minister-yogi-adityana/feed/ 0
பாதுகாப்பு நிலவரம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை https://vskdtn.org/2022/03/13/security-status-prime/ https://vskdtn.org/2022/03/13/security-status-prime/#respond Sun, 13 Mar 2022 12:31:02 +0000 https://vskdtn.org/?p=13003  இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உக்ரைன் மீதான தாக்குதலால் உலகளவில் ஏற்பட்ட சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிறிங்களா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

]]>
https://vskdtn.org/2022/03/13/security-status-prime/feed/ 0
முதுநிலை மருத்துவ படிப்பு ‘கட் – ஆப்’ மதிப்பெண் குறைப்பு: மத்திய அரசு https://vskdtn.org/2022/03/13/masters-medical-study/ https://vskdtn.org/2022/03/13/masters-medical-study/#respond Sun, 13 Mar 2022 10:15:00 +0000 https://vskdtn.org/?p=12996 நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 2022 – 23ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது,அனைத்து வகையான பிரிவினருக்கும், கட் – ஆப் மதிப்பெண் விகிதம் 15ம் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்ககம், தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு அனுப்பிஉள்ள கடிதம்:அனைத்து வகையான பிரிவினருக்கும் கட் – ஆப் மதிப்பெண் விகிதம் 15 சதவீதம் குறைக்கப்படுகிறது.

]]>
https://vskdtn.org/2022/03/13/masters-medical-study/feed/ 0
காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை https://vskdtn.org/2022/03/13/4-terrorist-in-kashmir/ https://vskdtn.org/2022/03/13/4-terrorist-in-kashmir/#respond Sun, 13 Mar 2022 10:10:49 +0000 https://vskdtn.org/?p=12993 காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள செவாக்லான் பகுதியில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகளின் பாகிஸ்தான் கமாண்டர் கமால் பாய் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.

கந்தர்பால் மாவட்டத்தின் செர்ச் பகுதி மற்றும் குப்வாரா மாவட்டம் நெச்சமா ராஜ்வார் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்; ஒருவர் கைதானார்.

]]>
https://vskdtn.org/2022/03/13/4-terrorist-in-kashmir/feed/ 0