ஊடகங்கள் மறைத்த செய்தி – VSKDTN News https://vskdtn.org Sat, 26 Mar 2022 05:45:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தொடர்கதையாகும் கோயில் இடிப்பு https://vskdtn.org/2022/03/26/the-sequel-is-temple-demolition/ https://vskdtn.org/2022/03/26/the-sequel-is-temple-demolition/#respond Sat, 26 Mar 2022 05:45:25 +0000 https://vskdtn.org/?p=13456 தமிழகத்தில் ஹிந்து கோயில்களை மட்டும் தமிழக அரசு குறிவைத்து தொடர்ந்து இடித்து வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் உடுமலை பள்ளபாளையத்தில் இருக்கும் பழங்கால கோயிலை இடிக்க, தமிழக அரசின் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். ஆனால், ஊர் மக்கள் ஒன்று திரண்டு கோயிலை இடிக்க விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி போன்ற ஹிந்து அமைப்புகளும், பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டன.. இதனால், அதிகாரிகள் செய்வதறியாது விழித்தனர். தற்போது ஊர் மக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதேபோல, தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மேலூர் பகுதியிலுள்ள 2 கோயில்களை இடிக்க அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாகவும் பொதுமக்கள் ஆதரவுடன் போராட்டம் நடத்த ஹி்ந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதுபோல தொடர்ந்து கோயில்கள் இடிக்கப்படுவது தி.மு.க ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி என்ற அடிப்படையிலேயே மக்களால் பார்க்கப்படுகிறது. திராவிட, நாத்திக, கம்யூனிச சதித் திட்டங்களால் தொடர்ந்து பல விஷயங்களில் ஏமாந்துவிட்ட ஹிந்துக்கள், தங்கள் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் காக்க கோயில்கள் விஷயத்திலாவது ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும் என்ற கருத்து தற்போது வலுப்பெற்று வருகிறது.

]]>
https://vskdtn.org/2022/03/26/the-sequel-is-temple-demolition/feed/ 0
மறக்கமுடியுமா ? https://vskdtn.org/2022/03/21/can-not-forget/ https://vskdtn.org/2022/03/21/can-not-forget/#respond Mon, 21 Mar 2022 05:06:15 +0000 https://vskdtn.org/?p=13272
காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சத்தீசிங்போராவில் 20 மார்ச் 2000 அன்று 35 சிக்ஹ் (Sikh) ஹிந்துக்கள் அமைதி மார்க்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் படு கொலை செய்யப்பட்டனர்.
நமது ராணுவ வீரர்கள் அணியும் சீருடை போன்று உடை அணிந்து வந்து இரண்டு குருத்வாராக்களில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த ஏதும் அறியாத பெண்கள், குழந்தைகளை சுட்டுக் கொன்றனர்.
அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் நமது நாட்டிற்கு வருகை புரிந்த நாளாகும். அதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த அப்பாவி மக்களின் உயிரைப் பறித்தனர்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீரில் இதுபோன்ற பல படுகொலைகள் அமைதிமார்க்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளால் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளன. நாடெங்கிலும் அனைவர் மனதிலும் இருள் சூழ்ந்த துயரத்தை அளித்தது சத்தீசிங்போரா படுகொலை.
]]>
https://vskdtn.org/2022/03/21/can-not-forget/feed/ 0
மறக்கமுடியுமா இக்கொடுமைகளை https://vskdtn.org/2022/03/16/can-these-atrocities-be-forgotten/ https://vskdtn.org/2022/03/16/can-these-atrocities-be-forgotten/#respond Wed, 16 Mar 2022 05:31:44 +0000 https://vskdtn.org/?p=13083
யாசின் மாலிக் உத்தமபுத்திரன் என்று ‘இந்தியா டுடே’ கொண்டாடியது. கொலைகாரனை இளைஞர்களின் முன்மாதிரி என்று பாராட்டியது. இந்த உத்தமபுத்திரன் செய்த கொடுமைகள் எண்ணிலடங்கா.
1989 இல் நீதிபதி நீலகண்ட கட்ஜு படுகொலையில் பங்கு. முப்தி முகமது மகள் ரூபியா சையது கடத்தல் நாடகத்தின் சூத்திரதாரி.
1990 இல் ஜம்முவில் ராணுவ வாகனத் திற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 4 பாரத வாயு சேனா (IAF) வீரர்களை பொது மக்கள் முன்பு படுகொலை செய்தது. இதில் பெண்கள் உட்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
2005 ஆம் வருடம் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திட அரசின் ஆதரவுடன் பாகிஸ்தான் சென்று வந்தது.
2006 ஆம் வருடம் பிரதமர் மன் மோகன் சிங் விருந்தினராக தனது வீட்டிற்கு இக்கொலைகாரனை அழைத்தது,
2008 ஆம் வருடம் இந்தியா டுடே பத்திரிகை ஆண்டுதோறும் நடத்தி வரும் கான்க்லேவிற்கு அழைத்து இளைஞர்களின் முன் மாதிரி என்ற பட்டம் வழங்கி பாராட்டியதை தேசியவாதிகளால் எப்படி மறக்க முடியும்.
இக்கொலைக்கார யாசின் மாலிக் தற்போது சிறையில் உள்ளான்.
The Kashmir Files படம் பார்க்க செல்பவர்களுக்கு இவைகள் தெரியுமா?
]]>
https://vskdtn.org/2022/03/16/can-these-atrocities-be-forgotten/feed/ 0
17 வயது சிறுமிக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை https://vskdtn.org/2022/03/06/17-year-old-girl-sexually-abused-by-injection/ https://vskdtn.org/2022/03/06/17-year-old-girl-sexually-abused-by-injection/#respond Sun, 06 Mar 2022 13:18:50 +0000 https://vskdtn.org/?p=12722 மதுரை மேலூர் பகுதியில் 17 வயது சிறுமி 5 முஸ்லிம்_பயங்கரவாத_இளைஞர்கள் தொடர்ந்து பல நாட்களாக போதை ஊசி ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் அகால மரணம் அடைந்து விட்டாள்

தமிழக அரசு மெத்தனமாக வழக்கை கையாள்வது எதனால்?

]]>
https://vskdtn.org/2022/03/06/17-year-old-girl-sexually-abused-by-injection/feed/ 0
திருமலை தேவஸ்தானத்தில் அரசியல். https://vskdtn.org/2021/09/23/thirumalai-thevathanthil-arasiyal/ https://vskdtn.org/2021/09/23/thirumalai-thevathanthil-arasiyal/#respond Thu, 23 Sep 2021 12:52:49 +0000 https://vskdtn.org/?p=8724 ஆந்திர மாநில அரசு, சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 24 அறங்காவலர்கள், 52 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் 4 அதிகாரப்பூர்வ உறுப்பினர்களை நியமித்துள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி சன்ரக்ஷன் சமிதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருமலை திருப்பதி அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களைச் சேர்ப்பதன் மூலம் திருமலை திருப்பதி கோயிலை அரசியலில் வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புபை வழங்கும் மையமாக ஆந்திர அரசு மாற்றிவிட்டது.

திருமலை தேவஸ்தானம் என்பது, ஆன்மிக அன்பர்கள், துறவிகள், பக்தர்களுக்கான ஒரு ஹிந்து அன்மிக கேந்திரமாகவும் தர்ம பிரச்சாரத்தின் மையமாகவும் திகழ வேண்டும். தர்ம ஆச்சார்யர்களின் வழிகாட்டுதலின்படி தர்ம விதிகளுக்கு உட்பட்டு பக்தர்களுக்கும் கடவுளுக்கும் தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். ஆனால், ஆளும் கட்சியால் அரசாங்க பதவிகள் கொடுக்க முடியாதவர்களுக்கு தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் பதவியை வழங்கி அவர்களை திருப்திப்படுத்தி வருகிறது. அரசு நியமனங்களில் ஆச்சார்யர்கள், பக்தர்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பு இல்லை.

தற்போதுள்ள பல உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பல முறை தரிசனம் செய்யலாம், நண்பர்கள், உறவினர்களுக்கு வி.ஐ.பி தரிசன வாய்ப்பளிக்கலாம் என கருதுகின்றனர். இது கோயில் ஊழியர்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும். இந்த உறுப்பினர்களில் எத்தனை பேர் உண்மையாகவே கோயிலின் தினசரி நடவடிக்கைகளை ஒழுங்காக நடத்த உதவுவார்கள், கோயில் நிர்வாகத்தில் எத்தனை அறங்காவலர்கள் நிபுணர்கள், அவர்களால் கோயிலுக்கு என்ன பயன்? தேவஸ்தான அறக்கட்டளையின் நிதி தேவஸ்தான பணிகள் அல்லாத நடவடிக்கைகளுக்கு திருப்பி விடப்படுகிறது. தேவஸ்தானம் தற்போது ஒரு மினி மாநில அரசாங்கமாக மாறிவிட்டது.

கோயில்களின் நிர்வாகப் பொறுப்பை மாநில அரசிடமிருந்து அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது அறநிலையத்துறையை துறையை ஒழிக்க வேண்டிய நேரமும் இதுதான்’ என கூறியுள்ளது.

]]>
https://vskdtn.org/2021/09/23/thirumalai-thevathanthil-arasiyal/feed/ 0
மக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசுக்கு ABGP கண்டனம். https://vskdtn.org/2021/09/21/makkalukku-ethiraka-seyalpadum/ https://vskdtn.org/2021/09/21/makkalukku-ethiraka-seyalpadum/#respond Tue, 21 Sep 2021 12:40:52 +0000 https://vskdtn.org/?p=8679 பெட்ரோல் டீசல் GSTக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசுக்கு எதிராக அகில பாரதீய கிரஹக் பஞ்சாயத்து அமைப்பு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.


அகில பாரதீய கிரஹக் பஞ்சாயத்தின் (ABGP) அமைப்பின் மாநிலக் குழு கோவையில் சந்தித்தனர்.  அதில் நுகர்வோர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் மத்திய அரசு பெட்ரோல் டீசலை GSTக்குள் கொண்டு வர இணங்கி வந்த போதும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. ஆனால் விவாத நிகழ்ச்சியில் GSTக்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என பேசி வருகின்றனர். அதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மான அறிக்கை வெளியிட்டு உள்ளது ABGP.

 

]]>
https://vskdtn.org/2021/09/21/makkalukku-ethiraka-seyalpadum/feed/ 0
தேசிய உளவு தொகுப்பு அமைப்பு https://vskdtn.org/2021/09/15/desiya-ulavu-thokuppu-amaippu/ https://vskdtn.org/2021/09/15/desiya-ulavu-thokuppu-amaippu/#respond Wed, 15 Sep 2021 11:28:06 +0000 https://vskdtn.org/?p=8608 மும்பையில் 2008ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, நமது நாட்டில் உள்ள பல்வேறு உளவு நிறுவனங்கள் தங்கள் உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக ‘நேட்கிரிட்’ அமைப்பை உருவாக்க 2010ல் முடிவு செய்யப்பட்டது. பல காலமாக, பல்வேறு காரணங்களால் செயல்படுத்தப்படாமல் இருந்த இந்த யோசனை, தற்போது பல கட்ட ஆய்வுகள், முயற்சிகளுக்குப் பிறகு செயல்பாட்டுக்கு வரவுள்ளது. சி.பி.ஐ., வருவாய் புலனாய்வுத்துறை, அமலாக்கத் துறை, மத்திய நேரடி வரிகள் ஆனையம், கேபினட் செயலகம், ஜி.எஸ்.டி., கண்காணிப்பு அமைப்பு, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு, ஐ.பி, கியு, ரா உள்ளிட்ட பல்வேறு உளவு, கண்காணிப்பு அமைப்புகள் இதில் இடம்பெறும். முதல் கட்டமாக 10 உளவு அமைப்புகளும், 21 சேவை அமைப்புகளும் நேட்கிரிட்டில் இணைக்கப்படும். இதனை செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன.

Source by; Vijayabharatham Weekly

]]>
https://vskdtn.org/2021/09/15/desiya-ulavu-thokuppu-amaippu/feed/ 0
கண்ணூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மறை(று)க்க பட்டவர்களின் வாழ்க்கை வரலாறு. https://vskdtn.org/2021/09/11/kannur-palakalikalaka-padathittathil/ https://vskdtn.org/2021/09/11/kannur-palakalikalaka-padathittathil/#respond Sat, 11 Sep 2021 10:03:51 +0000 https://vskdtn.org/?p=8586 கண்ணூர் பல்கலை பாடத்திட்டத்தில் சமுதாயத்தில் இருந்து மறைக்க பட்டவர்களான சாவர்க்கர், கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டு இருப்பதால் தகவல்.

 


கேரள மாநிலம் கண்ணூர் பல்கலையில் முதுகலை பட்டப் படிப்பிற்கான 3வது செமஸ்டர்कन्नूर यूनिवर्सिटी में पढ़ाया जाएगा वीर सावरकर और गोलवलकर का इतिहास, बौखलाई  कांग्रेस | NewsTrack Hindi 1 பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில், இந்துத்துவ சிந்தனையாளர்களான கோல்வால்கர், சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரைப் பற்றி பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு கேரளா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.

]]>
https://vskdtn.org/2021/09/11/kannur-palakalikalaka-padathittathil/feed/ 0
துர்கா பூஜை நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி சிலை; வலுக்கும் கண்டனம். https://vskdtn.org/2021/09/04/durka-poojaiyai-munnnitu-kolkattavil-vilavil/ https://vskdtn.org/2021/09/04/durka-poojaiyai-munnnitu-kolkattavil-vilavil/#respond Sat, 04 Sep 2021 06:41:03 +0000 https://vskdtn.org/?p=8326 துர்கா பூஜையை முன்னிட்டு கொல்கத்தாவில் விழாவில் மம்தா பானர்ஜி சிலையும் இடம்பெற இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு துர்கா பூஜையை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். கொல்கத்தா முழுவதும் பல்வேறு இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பிரமாண்ட துர்கை அம்மன் சிலைகளை நிறுவி வழிபடுவர்.

இந்த ஆண்டுக்கான துர்கா பூஜை அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி துர்கை அம்மன் சிலையுடன், மம்தா பானர்ஜி சிலையையும் நிறுவ, விழா குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக களி மண் சிலைகள் செய்யும் பிரபல சிற்பி மின்டு பால், மம்தாவின் சிலையை வடிவமைக்க உள்ளார்.

இது குறித்து பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறியதாவது: இது, துர்கை அம்மனை அவமானப்படுத்துவதை போல உள்ளது. ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இந்த செயலை மம்தா தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

]]>
https://vskdtn.org/2021/09/04/durka-poojaiyai-munnnitu-kolkattavil-vilavil/feed/ 0
இஸ்லாமிய பிரிவினைவாதி கிலானி மறைவு; பாகிஸ்தான் தேசியக்கொடி அரைக்கம்பத்தில். https://vskdtn.org/2021/09/03/ishlamiya-pirvathiyaana-kilani-maraivu/ https://vskdtn.org/2021/09/03/ishlamiya-pirvathiyaana-kilani-maraivu/#respond Fri, 03 Sep 2021 04:43:15 +0000 https://vskdtn.org/?p=8298 ஜம்மு காஷ்மீரின் இஸ்லாமிய பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையது அலி கிலானி நேற்றிரவு மாரடைப்பால் ஸ்ரீநகரில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாகிஸ்தான் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறப்பது அவருக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்பு என ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


சையது அலி கிலானி காஷ்மீர் பிரிவினை கொள்கையை கொண்டிருந்து. பாகிஸ்தான் உடன் காஷ்மீரை இணைக்க விரும்பினார். அதற்காக ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவாளராகவும் இருந்தார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1993-ல் ஹுரியத் மாநாட்டு கட்சியை உருவாக்கினார். இவரது பயங்கரவாத ஆதரவு போன்ற காரணங்களால் பிற தலைவர்களுடன் பிணக்கு ஏற்பட்டது. அக்கட்சியிலிருந்து பிரிந்தார். பின்னர் இவரை பல ஆண்டுகளாக வீட்டு காவலில் வைத்திருந்தனர். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த கிலானி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது கிலானியின் விருப்பம். அதற்கு அரசு அனுமதி தருவது சாத்தியமில்லை என்கின்றனர்.

இந்நிலையில் கிலானியின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். துக்க தினம் கடைப்பிடிக்கப்படும்,” என கூறியுள்ளார். வாழ்நாள் முழுக்க இஸ்லாமிய அடிப்படைவாதியாகவும், இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும் செயல்பட்டதற்கு கடந்த ஆண்டு கிலானிக்கு பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தானை அந்நாட்டு அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

]]>
https://vskdtn.org/2021/09/03/ishlamiya-pirvathiyaana-kilani-maraivu/feed/ 0