கட்டுரைகள் – VSKDTN News https://vskdtn.org Fri, 05 Apr 2024 04:12:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தீண்டாமைக்கு எதிராக போராடிய ஜெகசீவன்ராம் பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2024/04/05/jagasivanram/ https://vskdtn.org/2024/04/05/jagasivanram/#respond Fri, 05 Apr 2024 04:12:08 +0000 https://vskdtn.org/?p=27422 ஏப்ரல் 5, 1908 பீகார் மாநிலத்தில், பிறந்தவர். 1928 ஆம் ஆண்டில் வாரணாசியில் உள்ள பனாராஸ் இந்து பல்கலை கழகத்திலும், பின்னர் 1931-இல் கல்கத்தா பல்கலை கழகத்திலும் படித்து இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். பாபு என அன்பாக அழைக்கப்படும் இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி. இவர், நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். 1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர். ஜெகஜீவன் ராம் பட்டியலினத்தில் பிறந்ததால் அவருக்குத் தனியாகக் குடிநீர்ப் பானை பள்ளியில் வைக்கப்பட்டது. அதனைக் கண்டு அவர் வருத்தமும், சினமும் அடைந்தார். அந்தப் பானையை உடைத்தார். பிறசாதி மாணவர்கள் பயன்படுத்துகின்ற பானை நீரைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சாதி வேறுபாடுகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும்
என்று போராடினார். இறுதியில் வெற்றி பெற்றார். உணவு விடுதியில் பணியாளர்கள் இவர் சாப்பிட்ட உணவுத் தட்டுகளைக் கழுவ மறுத்தார்கள். அது மட்டுமல்லாமல் முடி திருத்தும் தொழிலாளிகள் முடி திருத்த மறுத்தார்கள். பட்டியல் சமுகத்தினர் கோயிலிலுள் சென்று வழிபடவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடினார். 1935 இல் அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பு உருவாவதில் பேருதவியாக இருந்தார். கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதையும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதையும் அனுமதிக்க வேண்டும் என்று போராடினார். பட்டியல் சமூகத்தவர் சார்பாக பிகார் மாகாண அரசுக் குழவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்து சமூக நீதிக் கருத்து அரசியல் சட்டத்தில் இடம் பெறக் காரணமாக இருந்தார்.

]]>
https://vskdtn.org/2024/04/05/jagasivanram/feed/ 0
இருபதாம் நூற்றாண்டில் சிறந்த இந்திய கணிதவியலாளர் சு.சி.பிள்ளை பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2024/04/05/s-c-pillai-2/ https://vskdtn.org/2024/04/05/s-c-pillai-2/#respond Thu, 04 Apr 2024 23:30:07 +0000 https://vskdtn.org/?p=27416 சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை, ஏப்ரல் 5, 1901ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில், குற்றாலத்திற்கருகிலுள்ள வல்லம் என்ற சிற்றூரில் பிறந்தார். இவர் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் கணிதவியலாளர். அவருக்கு ஒரு வயது ஆகுமுன்பே தாயார் கோமதி அம்மாள் காலமாகிவிட்டார். தந்தை சுப்பையா பிள்ளை தான் வயதான உறவினப் பெண்மணி ஒருவரின் உதவியுடன் குழந்தையை வளர்த்தார்.
செங்கோட்டை நடுத்தரப்பள்ளியில் பையன் படிக்கும்போதே சாஸ்திரியார் என்ற ஒர் ஆசிரியர் இவருடைய புத்தி வல்லமையையும் உழைப்பையும் பார்த்துப் பூரித்துப் போனார். இவருடைய பள்ளிப்படிப்பு முடிவதற்குள்ளேயே சுப்பையாபிள்ளை காலமானபோது, அவர்தான் சிவசங்கரநாராயணனின் கல்லூரிப் படிப்பிற்கு உதவிசெய்தார். இடைநிலைக் கல்வி பயின்றது நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில். திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் கல்விச் சலுகை பெற்று நன்றாக படித்து B.A. பட்டம் பெற்றார். மேற்படிப்பிற்காக சென்னைக்குச் சென்றார். சென்னை மாகாணக் கல்லூரியில் 1927 இல் ஆனந்தராவின் கீழ் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து முதல்தர ஆராய்ச்சி மாணவன் என்று பெயர் எடுத்தார். ஆனந்தராவுடன் கூட பேராசிரியர் வைத்தியநாதசுவாமியும் இவருக்கு வழிகாட்டினார். சென்னைப் பல்கலைக்கழகம் இவருடைய ஆராய்ச்சிகளைப் பாராட்டி இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் (D.Sc.) பட்டமே வழங்கியது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் (D.Sc.) பெற்றவர். எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த வாரிங் பிரச்சினையில் அவருடைய சாதனை மிகப்பெரிதாகப் பேசப்பட்டது. இந்தியா அவருடைய அகால மரணத்தினால் இன்னும் பல சாதனைகள் புரிந்து நாட்டுக்குப் புகழ் சேர்க்கக்கூடிய ஒருவரை இழந்தது.

#சான்றோர்தினம்

]]>
https://vskdtn.org/2024/04/05/s-c-pillai-2/feed/ 0
கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2024/04/04/k-m-venkataramaiah/ https://vskdtn.org/2024/04/04/k-m-venkataramaiah/#respond Thu, 04 Apr 2024 04:52:02 +0000 https://vskdtn.org/?p=27407 சென்னை பூந்தமல்லியில் ஏப்ரல் 4,1912 ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் பயின்றார். 1981-ல் தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, அரிய கையெழுத்து சுவடித் துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். சமஸ்கிருதம், இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக செயல்பட்டார். அப்போது பன்மொழி இலக்கண ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.

சைவ சமய சொற்பொழிவாளராகவும் புகழ்பெற்றார். திருமுறைகளில் புலமை பெற்றவர். இவரது பெரும்பாலான ஆய்வுகள் அதையொட்டியே இருந்தன. இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். திருப்பனந்தாள் காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியின் முதல் முதல்வராகப் பொறுப்பேற்று 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். இவர் படைத்த சிவனருள் திரட்டு நூலில் 500 பாடல்களுக்கு உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.
ஏராளமான தமிழ் அறிஞர்களை உருவாக்கியுள்ளார். இலக்கியக் கேணி, கல்லெழுத்துக்களில், சோழர்கால அரசியல் தலைவர்கள், ஆய்வுப் பேழை, நீத்தார் வழிபாடு, திருக்குறள் சமணர் உரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரிய நூல்களைப் படைத்துள்ளார். தஞ்சை மராட்டிய மன்னர்களின் வரலாற்றை அக்காலச் சமுதாய வரலாற்றுடன் சேர்த்து ஆராய்ந்து முழுமையாக வெளியிட்டார். காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதிக்கு குறிப்புரை எழுதி 1949-ல் பதிப்பித்தார். சமரசம் செய்துகொள்ளாத, கண்டிப்பான நிர்வாகத் திறன், நேர்மை, நல்லொழுக்கம், பக்தி, உதவும் பண்பு, நன்றி மறவாமை என அத்தனை நல்ல பண்புகளையும் கொண்டிருந்தார். இவரது பல நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. சிவநெறிச் செல்வர், கல்வெட்டு ஆராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றார். இறுதிவரை தமிழ்த் தொண்டு ஆற்றிவந்த கா.ம.வேங்கடராமையா 83-வது வயதில் (1994) மறைந்தார்.

]]>
https://vskdtn.org/2024/04/04/k-m-venkataramaiah/feed/ 0
தமிழ்த்தாய் வாழ்த்தை அளித்த தமிழறிஞர் பெ.சுந்தரம்பிள்ளை பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2024/04/04/p-sundarampillai/ https://vskdtn.org/2024/04/04/p-sundarampillai/#respond Thu, 04 Apr 2024 04:50:22 +0000 https://vskdtn.org/?p=27403 கேரள மாநிலம் ஆலப்புழையில் ஏப்ரல் 4,1855ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையிடம் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சமய நூல்களைக் கற்றார். 1876-ல் பி.ஏ. பட்டம் பெற்றார்.நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளை இவரது தமிழ் ஆசிரியர். இந்துக் கல்லூரியாக உயர உறுதுணையாக இருந்தார்.. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தத்துவத் துறை ஆசிரியராகச் சேர்ந்தார். எம்.ஏ. தத்துவத்தில் பட்டம் பெற்றார். மகாராஜா அரண்மனையின் வருவாய்த் துறை தனி அலுவலராக நியமிக்கப்பட்டு, இறுதிவரை அங்கு பணியாற்றினார். சிறந்த படைப்பாளி. இந்திய, மேற்கத்திய தத்துவம் தவிர, வரலாறு, தொல்பொருளியல், இலக்கியம், நவீன அறிவியல் ஆகிய துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ‘நூற்றொகை விளக்கம்’, ’திருவிதாங்கூர் பண்டைய மன்னர்கால ஆராய்ச்சி’ உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘மனோன்மணியம்’ என்ற நூலை 1891-ல் எழுதினார். கவிதை நாடக வடிவில் அமைந்த மனோன்மணியம், 4,500 வரிகள் கொண்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த’ எனத் தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு 1970-ல் அறிவித்தது. ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் (திருஞான சம்பந்தரின் காலம்)’ என்ற ஆங்கில நூலை எழுதினார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார். பத்துப்பாட்டின் 3 அங்கங்களான திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றை ‘தி டென் தமிழ் ஐடியல்ஸ்’ என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘ஜீவராசிகளின் இலக்கணமும் பிரிவும்’, ‘மரங்களின் வளர்ச்சி’, ‘புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்’ ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.
கல்வெட்டு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். திருவிதாங்கூர் அரசர்களின் மரபு பற்றி ஆராய்ந்து எழுதிய நூலை 1894-ல் வெளியிட்டார். மற்ற மொழிகளையும் இவர் ஒதுக்கியதில்லை. திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்து சமயத் தொண்டும் ஆற்றிவந்தார். ‘ராவ் பகதூர்’ உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றுள்ளபோதிலும், தான் எழுதிய நூலின் பெயரால் ‘மனோன்மணியம்’ சுந்தரம் பிள்ளை என்று போற்றப்பட்டார்.

]]>
https://vskdtn.org/2024/04/04/p-sundarampillai/feed/ 0
ஹிந்து சாம்ராஜ்யம் அமைத்த சத்ரபதி சிவாஜி நினைவுதினம் இன்று (03.04.1680). https://vskdtn.org/2024/04/03/chatrapatishivajimahara/ https://vskdtn.org/2024/04/03/chatrapatishivajimahara/#respond Wed, 03 Apr 2024 04:15:02 +0000 https://vskdtn.org/?p=27383 மிகச்சிறிய ராணுவத்தை கொண்டு கொரில்லா போரின் மூலம் மாபெரும் இஸ்லாமிய படையை எதிர்த்து வெற்றி கண்டவர்.

பாரத தேசத்தில் உள்ள மன்னர்கள் எல்லாம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த இப்போது நமக்கான எதிரி அந்நிய ஆக்கிரமிப்பாளர்களே என்று மக்களுக்கு புரியவைத்து இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்.

#chatrapatishivajimahara

]]>
https://vskdtn.org/2024/04/03/chatrapatishivajimahara/feed/ 0
பாரதத்தின் முதல் பீல்டு மார்ஷல் சாம் மானேக்சா பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2024/04/03/field-marshal-sam-maneksa/ https://vskdtn.org/2024/04/03/field-marshal-sam-maneksa/#respond Wed, 03 Apr 2024 04:14:01 +0000 https://vskdtn.org/?p=27379 சாம் மானேக்சா நான்கு தலைமுறைகளாக 40 ஆண்டுகாலம் இராணுவத்தில் பணிபுரிந்தவர். இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து, இரண்டாம் உலகப்போரிலும், பாகிஸ்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது.
1969-ம் ஆண்டு ஜூன் 7 ஆம் நாள் சாம் மானெக்சா இந்தியாவின் ராணுவத் தளபதியாகப் பதவியேற்றார். இந்திய ராணுவ வீரர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடையச் செய்தார் மானெக்சா.

பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தார்.

இந்த நடவடிக்கையின் போது 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் சிவிலியன்களை போர்க் கைதிகளாக இந்தியா சிறைபிடித்தது.
இந்திய ராணுவ வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாகவும், மிக வேகமான ராணுவ வெற்றியாகவும் இது போற்றப்படுகிறது.

இரும்பு மனிதர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றவர்.

#sammanekshaw

]]>
https://vskdtn.org/2024/04/03/field-marshal-sam-maneksa/feed/ 0
வாழ்நாள் முழுவதும் தமிழ் தொண்டாற்றிய நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2024/04/02/novelist-n-m-venkatasamy-natara/ https://vskdtn.org/2024/04/02/novelist-n-m-venkatasamy-natara/#respond Tue, 02 Apr 2024 11:24:36 +0000 https://vskdtn.org/?p=27373 தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் ஏப்ரல் 2, 1884ஆம் ஆண்டு பிறந்தார். நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் என்பது முழுப்பெயர். தந்தை தமிழ் அறிஞர், கல்விமான், விவசாயி. அவரைத் தேடி வரும் அறிஞர்களோடு பழகும் வாய்ப்பு சிறுவனுக்கு வாய்த்தது. சிறு வயதில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு, வேங்கடேசப் பெருமாள் அருளால் நீங்கியதால், சிவப்பிரகாசம் என்ற பெயரை வேங்கடசாமி என மாற்றினர் பெற்றோர். தந்தையிடம் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், அந்தாதி, கலம்பகம் உள்ளிட்ட நூல்களைக் கற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை தானாகவே கற்றறிந்தார். வள்ளல் பாண்டித்துரை தேவரின் கையால் தங்கப் பதக்கம் பெற்றார். 24-வது வயதில் திருச்சி எஸ்பிஜி கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் அறிஞர் உமா மகேஸ்வரரின் விருப்பத்துக்கு இணங்க, கரந்தை புலவர் கல்லூரியில் 4 ஆண்டுகள் ஊதியம் பெறாமலேயே மதிப்பியல் முதல்வராகப் பணியாற்றினார். பாரதியார் 1912-ல் இவரது வீட்டுக்கு வந்து, சிலப்பதிகாரம், தொல்காப்பிய நூல்களில் சில இடங்களுக்குப் பொருள் கேட்டு அறிந்ததாகக் கூறப்படுகிறது. சிறந்த தமிழ் அறிஞரான அ.ச.சரவண முதலியாருடன் இணைந்து திருவிளையாடல் புராணத்துக்கு உரை எழுதினார். அரிய கருத்துகளையும் மாணவர்களுக்கு எளிதாக விளங்க வைப்பதில் வல்லவர். புலவர்களின் நூல்களில் உள்ள பிழைகளை துணிச்சலாக சுட்டிக்காட்டுவார். நிறைய எழுதிக்கொண்டே இருந்தார். பல ஆய்வு நூல்கள், உரை நூல்களைப் படைத்துள்ளார். பல புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தார் கேட்டுக்கொண்டதால் தேவாரத் திரட்டு, தண்டியலங்காரப் பழைய உரை, யாப்பருங்கலக் காரிகை உரை ஆகியவற்றுக்கு திருத்தங்கள் செய்து கொடுத்தார். இவரது பல நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக இடம்பெற்றன. சிறந்த சொற்பொழிவாளரான இவருக்கு, சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் 1940-ல் ‘நாவலர்’ பட்டம் வழங்கியது. புதிய செய்தியோ, புதிய ஆய்வுக் குறிப்போ இல்லாமல் இவரது உரை இருப்பதில்லை. எனவே, இவரது சொற்பொழிவைக் கேட்க பலரும் வெகுதொலைவில் இருந்து நடந்தே வருவார்களாம். ‘நாட்டார் ஐயா’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். எளிமையாக வாழ்ந்தவர். அனைவரிடமும் இனிமையாக பழகுவார். வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தொண்டாற்றிய ‘நாவலர்’ நா.மு.வேங்கடசாமி நாட்டார் 1944-ம் ஆண்டு மறைந்தார்.

]]>
https://vskdtn.org/2024/04/02/novelist-n-m-venkatasamy-natara/feed/ 0
சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழில் நவீன சிறுகதை தந்தை என்று போற்றப்படும் வ.வே.சுப்பிரமணிய ஐயர் பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2024/04/02/v-v-subramania-iyer/ https://vskdtn.org/2024/04/02/v-v-subramania-iyer/#respond Tue, 02 Apr 2024 06:45:36 +0000 https://vskdtn.org/?p=27367 திருச்சி, வரகனேரியில் ஏப்ரல் 2, 1881ஆம் ஆண்டு பிறந்தவர்.
சென்னைக்குச் சென்று சட்டம் படித்து சென்னை மாநகர் ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு ப்ளீடராக சேர்ந்து வக்கீல் தொழில் புரிந்தார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருந்தார். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக1907-ல் லண்டன் சென்றார். அங்கே இந்தியா ஹவுசில் தங்கியிருந்த சமயத்தில் வீர சாவர்க்கர் உள்ளிட்ட சுதந்தர புரட்சி வீரர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.
ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகள் பெற்றார். மற்றும் பல இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்தார். பாரிஸ்டர் படிப்பிலும் தேர்ச்சியடைந்தார். பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.
இதனால் இவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. சீக்கியர் போல மாறு வேடம் பூண்டு, பிரிட்டிஷ் உளவாளிகளை ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாக 1910-ல் புதுச்சேரி வந்து சேர்ந்தார்.அரவிந்த கோஷ், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1922-ல் சேரன்மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். குளத்தங்கரை ஆசிரமம் என்ற சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன் முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதை. இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம்தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை தொகுப்பு. 1921-ல் பெல்லாரி சிறையில் இருந்தபோது ‘கம்பராமாயணம் – எ ஸ்டடி’ என்ற ஆங்கில நூலை எழுதினார். ஆங்கிலத்தில் திறனாய்வுக் கட்டுரைகள் பல வடித்தார். கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகம் தொடங்கி புத்தகங்களை வெளியிட்டார். மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார். சுதந்திர போராட்ட வீரரும், தமிழில் நவீன இலக்கியத் திறனாய்வுக்கான அடிப்படைகளை அமைத்தவர் என்றும், தமிழ் நவீன சிறுகதை தந்தை என்றும் போற்றப்படும் வ. வே. சு. ஐயர், 1925-ஆம் ஆண்டு, 44-வது வயதில் ஒரு விபத்தில் காலமானார்.

]]>
https://vskdtn.org/2024/04/02/v-v-subramania-iyer/feed/ 0
ஆன்மீக மறுமலர்ச்சி மற்றும் கல்விப் பணியில் பெரும் பங்காற்றிய சிவகுமார சுவாமி பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2024/04/01/sivakumara-swamy/ https://vskdtn.org/2024/04/01/sivakumara-swamy/#respond Mon, 01 Apr 2024 04:47:48 +0000 https://vskdtn.org/?p=27357 சிவக்குமார சுவாமி ஏப்ரல்1, 1907ஆம் ஆண்டு பிறந்தார். ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கல்விப் பணிகளில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளார்.
இவர் கர்நாடகத்தைச் சேர்ந்த சித்த கங்கா மடத்தின் வீர சைவப் பிரிவின் முக்கிய தலைவர். துவக்கப் பள்ளி முதல் பொறியியல் முதலான கல்லூரி படிப்பு வரை இவர் மொத்தம் 132 கல்வி நிறுவனங்களை தோற்றுவித்துள்ளார்.இவரது குருகுலத்தில் 10000 மாணவர்களுக்கு இலவச உணவு உடை இருப்பிடத்துடன் கல்வி வழங்கப்படுகிறது.இவரது மனிதநேய பணியைப் பாராட்டி கர்நாடக பல்கலைக்கழகம் 1965ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. மேலும் அவரது நூறாவது பிறந்த ஆண்டான 2007ஆம் ஆண்டு கர்நாடக அரசு மாநிலத்தின் உயர்ந்த விருதான கர்நாடக ரத்னா விருதினை அளித்தது. 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூஷன் விருது அளித்தது.

]]>
https://vskdtn.org/2024/04/01/sivakumara-swamy/feed/ 0
சீக்கிய குருக்களில் ஒன்பதாவது குரு குரு தேக் பகதூர் பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2024/04/01/today-is-the-birthday-of-guru-tegh-bahadur-the-ninth-sikh-guru/ https://vskdtn.org/2024/04/01/today-is-the-birthday-of-guru-tegh-bahadur-the-ninth-sikh-guru/#respond Mon, 01 Apr 2024 04:46:25 +0000 https://vskdtn.org/?p=27353 குரு தேக் பகதூர் சீக்கிய குருக்களில் ஒன்பதாம் குரு. ஏப்ரல் 1,1621 ஆம் ஆண்டு பிறந்தார். புனித குரு கிரந்த் சாகிப்பில் இவரது 115 இறைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பல்கலை வித்தகர், வில்வித்தை, கத்திச் சண்டையில் நிபுணர், குதிரையேற்றத்தில் வல்லவர், இதிகாஸ நூல்களில் புலமை பெற்றவர்.

பதினான்காம் வயதிலேயே முகலாயரை போரில் எதிர்கொண்ட
அஞ்சா நெஞ்சர். பகலா என்னும் இடத்தில் 26 வருடங்கள் 9 மாதங்கள் 13 நாட்கள் இவர் தவத்தில் இருந்தார். காஷ்மீரி ஹிந்து பண்டிட்களை கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றும் அநியாயத்தைத் தட்டிக் கேட்டார்.
ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் இஸ்லாமிற்கு மாற்றும் முகலாய அரசின் போக்கை எதிர்த்து தைரியமாகப் போர்க்கொடி உயர்த்தினார்.
நயவஞ்சக ஔரங்கசீப் இவரைப் பிடித்து வந்து இஸ்லாமிற்கு மாறு, இல்லையேல் உயிரை எடுப்பேன் என்று கூறிய போது ஒருக்காலும் இஸ்லாமிய மதத்தை ஏற்க மாட்டேன். சாவதே மேல் என்று முழங்கினார்.
அனைவருக்கும் முன்பாக 1675-ல் இவர் தலை துண்டிக்கப்பட்டது. இவர் இறந்த இடம் குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப். இவர் உடல் எரிக்கப்பட்ட இடம் குருத்வாரா ராகெப் கஞ்ச் சாஹிப்.

]]>
https://vskdtn.org/2024/04/01/today-is-the-birthday-of-guru-tegh-bahadur-the-ninth-sikh-guru/feed/ 0