பாரதம் – VSKDTN News https://vskdtn.org Sat, 04 May 2024 05:01:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல் https://vskdtn.org/2024/05/04/the-new-criminal-reform-laws-will-come-into-effect-on-july-1/ https://vskdtn.org/2024/05/04/the-new-criminal-reform-laws-will-come-into-effect-on-july-1/#respond Sat, 04 May 2024 05:01:35 +0000 https://vskdtn.org/?p=27566 இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. இதையடுத்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காலனிய ஆதிக்கத்துக்கு ஏற்றார்போல் இயற்றப்பட்ட சட்டங்களை எல்லோருக்கும் நீதி பரிபாலனம் செய்யும் சட்டங்களாக மாற்றுவதே இச்சட்டத்திருத்தத்தின் நோக்கமாகும்.
புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள நேர்மறையான அம்சங்களையும் மேம்படுத்தப்பட்ட மாற்றங்களையும் நாட்டின் அனைத்து காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்குப் பயிற்றுவிக்க இந்திய அரசு முனைகிறது. இதற்கான பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் புதிய சட்டங்கள் குறித்த சரியான புரிதலுடன் சரியான முறையில் தன்னம்பிக்கையும் நடைமுறைப்படுத்துவார்கள். இந்திய அரசின் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்த காவல்துறை மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு ஏற்றார்போல் இந்த பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி தளத்தில் இதற்குரிய பாடப்பிரிவுகள் பதிவேற்றப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திட புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றிய ஆன்லைன் பாடங்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் அனுப்பியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2024/05/04/the-new-criminal-reform-laws-will-come-into-effect-on-july-1/feed/ 0
ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்! https://vskdtn.org/2024/05/02/hindu-marriage-rituals/ https://vskdtn.org/2024/05/02/hindu-marriage-rituals/#respond Thu, 02 May 2024 13:30:51 +0000 https://vskdtn.org/?p=27560 ‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை புகார் தெரிவித்து, அதன் அடிப்படையில் விவாகரத்து கோரி பெண் விமானி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

திருமணம் என்பது ஓர் சடங்கு மற்றும் புதிய குடும்பத்துக்கான அடித்தளம் என ஹிந்து சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. திருமணத்தில் வாழ்க்கைத் துணையை ‘சம பாதியாக’ கருத வேண்டும். திருமணம் என்பது வெறும் ஒருநாள் கூத்து அல்ல. ஆட்டம் பாட்டம் விதவிதமான உணவு வகைகளுடன் கூடிய கொண்டாட்டத்தை மட்டும் கொண்ட நிகழ்வோ அல்லது வரதட்சிணை பெறும் வணிகப் பரிமாற்றமோ கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே கணவன்-மனைவி என்ற வளரும் குடும்பத்துக்கான புனிதமான அடித்தள நிகழ்வாகும். இதுதான் இந்திய சமூகத்தின் அடிப்படை.

ஹிந்து திருமணச் சட்டம் இயற்றப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும், கணவன்-மனைவி இடையேயான உறவின் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே வடிவமாக ‘ஒற்றைத்தார மணம்’ மட்டுமே உள்ளது. பல தார மணத்தை ஹிந்து திரும ணச் சட்டம் நிராகரிக்கிறது. பல்வேறு சடங்குகள் சம்பிர தாய பழக்கவழக்கங்கள் அடிப்படையில் நடை பெற்ற ஒரே ஒரு திருமண முறை மட்டுமே இருக்க வேண்டும் என்பது இச்சட்டத்தை இயற்றிய நாடாளுமன்றத்தின் நோக்கமாகவும் உள்ளது. அந்த வகையில், மணமகனும், மணமகளும் புனித வேள்விக்கு முன்பாக 7 அடி எடுத்து வைத்தல் உள்ளிட்ட உரிய சடங்குகளு டன் திருமணம் நடைபெறாவிட்டால், அந்தத் திருமணம் ஹிந்து திருமணச் சட்டம் பிரிவு 7-இன் கீழ் ஹிந்து திருமணமாக அங்கீகரிக்கப்படாது. இதில் திருமணத்துக்கான சான்றிதழை மட்டும் சமர்ப்பிப்பது பலனளிக்காது.
சிறப்பு திருமணச் சட்டம் 1954′-இன் கீழ் எந்தவொரு ஆணும், பெண்ணும் ஜாதி, மதம், இனத்தைக் கடந்து எந்தவித சடங்குகள் இன்றி திருமணம் செய்து கொள்ள முடியும். இதில் ஹிந்துக்களுக்கு விதி விலக்கல்ல. ஆனால், ‘ஹிந்து திருமணச் சட்டம் 1955-இன் கீழ் அங்கீகரிக்கப்படும் திருமணங்கள் அச்சட்டத்தின் பிரிவு 7- இல் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும்.

அந்த வகையில், ஹிந்து சட்டத்தின் கீழ் உரிய சடங்குகள் இடம்பெறாமல் விமானி தம்பதியின் திருமணம் நடை பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் செல்லாது என்று அரசமைப்பு சட்டப் பிரிவு 142-இன் கீழான முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவிக்கிறது. உச்சநீதிமன்றம்
மேலும், கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது மனுதாரர் தொடுத்த வரதட்சிணை புகார் மற்றும் விவாகரத்து நடைமுறைகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘திருமணத்துக்கு முன்பு இளைஞர்களும் இளம்பெண்களும் அந்தப் புனிதமான பந்தம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

 

]]>
https://vskdtn.org/2024/05/02/hindu-marriage-rituals/feed/ 0
அயோத்யாவில் குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு https://vskdtn.org/2024/05/02/ayothys/ https://vskdtn.org/2024/05/02/ayothys/#respond Thu, 02 May 2024 13:27:20 +0000 https://vskdtn.org/?p=27556 ஶ்ரீ ராம் லல்லாவை தரிசனம் செய்துவிட்டு, சரயு நதி படித்துறையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

]]>
https://vskdtn.org/2024/05/02/ayothys/feed/ 0
பகவான் ஸ்ரீராமரின் குழந்தை வடிவத்தைக் கண்ட தெய்வீக அனுபவத்தை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது – ஜனாதிபதி திரவுபதி முர்மு ! https://vskdtn.org/2024/05/02/ram/ https://vskdtn.org/2024/05/02/ram/#respond Thu, 02 May 2024 13:24:55 +0000 https://vskdtn.org/?p=27548
கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை மிக சிறப்பாக நடைப்பெற்றது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளித்தது. விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்தனர். . உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அயோத்தி ஸ்ரீ ராமரை தரிசிக்க வந்தனர்.
 
பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தந்தார். பட்டாடைகளை பாரம்பரிய முறைப்படி அணிந்து வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரும், அவரோடு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ஜி பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் கருவறைக்குள் சென்று ஸ்ரீ ராமரை தரிசித்தனர்.
 
இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏன் அயோத்தி கோவிலுக்கு வரவில்லை. அவருக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை. ஜனாதிபதி திரவுபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் தான் அயோத்தி கோவிலுக்கு வரவில்லை என வாய்க்கு வந்தபடி பல உருட்டுகளை உருட்டினர் இந்த திராவிட கட்சிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும். அதற்கெல்லாம் சேர்த்து பதிலடி தரும் விதமாக நேற்று அயோத்தி கோவிலுக்கு சென்று ஸ்ரீ ராமரை தன் கண்குளிர கண்டு மனதார தரிசித்தார். பின்னர் ஜனாதிபதி திரௌபதி முர்மு சரயு நதிக்கரையில் நடந்த ஆரத்தியில் கலந்து கொண்டார்.
 
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், அயோத்தியில் பகவான் ஸ்ரீராமரின் குழந்தை வடிவத்தைக் கண்ட தெய்வீக அனுபவத்தை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. ராம்-கேவத் சுலோகம் முதல், ஸ்ரீ ராமர் அன்னை ஷபரியின் எஞ்சிய பழங்களை சாப்பிடுவது வரை, இதுபோன்ற மனதைத் தொடும் சம்பவங்கள் என் நினைவுக்கு வருகின்றன. நான் உணர்ச்சிகளால் மூழ்கியிருக்கிறேன். இந்த கோயில் இந்திய கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் இலட்சியங்களின் உயிருள்ள அடையாளமாக உள்ளது, இது அனைவருக்கும் நன்மைக்காக உழைக்க நாட்டு மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கும். நாட்டு மக்களின் நலனுக்காக பகவான் ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை தெய்வீக பாக்கியமாக கருதுகிறேன். இந்த காலகட்டத்தில் நமது தேசத்தின் முழுமையான வளர்ச்சிக்கான பயணத்தை நேரில் பார்ப்பதும் அதில் பங்கேற்பதும் நல்ல அதிர்ஷ்டம். ஸ்ரீ ராமச்சந்திராவுக்கு வெற்றி !இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
]]>
https://vskdtn.org/2024/05/02/ram/feed/ 0
ராமகிருஷ்ணா மிஷன் புதிய தலைவர் பொறுப்பேற்பு https://vskdtn.org/2024/04/27/ramakrishna-missions-new-chief-assumes-charge/ https://vskdtn.org/2024/04/27/ramakrishna-missions-new-chief-assumes-charge/#respond Sat, 27 Apr 2024 09:49:51 +0000 https://vskdtn.org/?p=27533 ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின், 16வது தலைவராக இருந்தவர் ஸ்மணானந்தஜி மகாராஜு. இவர் மார்ச், 26ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான அறங்காவலர் குழு மற்றும் மிஷன் நிர்வாக குழு கூட்டம், கோல்கட்டா பேலுார் மடத்தில், 24ம் தேதி நடந்தது.

இதில் மடத்தின், 17வது தலைவராக சுவாமி கவுதமானந்தஜி மகராஜ், 96, தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். இவர், 1929ல் பெங்களூரில் பிறந்தார். இவரது முன்னோர் வேலுார் மாவட்டம், கேத்தாண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். இளமை காலத்தில், சுவாமி யதீஸ்வரானந்த மகராஜ் தலைவராக இருந்த ராமகிருஷ்ண இயக்கத்தின் பெங்களூரு கிளையுடன் தொடர்பு கொண்டார்; 1955ல்மந்திர தீட்சை பெற்றார். அடுத்த ஆண்டு குருவின் ஆலோசனைப்படி, ராமகிருஷ்ணா மிஷனின் புதுடில்லி மையத்தில் சேர்ந்து துறவற வாழ்க்கை ஏற்றார். 1962ல் சுவாமி விசுத்தானந்தஜி மகராஜிடம் பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். கடந்த, 1966ல் ராமகிருஷ்ண இயக்கத்தின், 10வது தலைவரான சுவாமி வீரேஸ்வரானந்த மகராஜிடம் சந்நியாச தீட்சையும், சுவாமி கவுதமானந்தர் என்ற துறவற நாமத்தையும் பெற்றார்.

ராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலராகவும், மிஷனின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், 1990ல் பொறுப்பேற்றார். 1995ல் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக பொறுப்பேற்றார். புதுச்சேரி, ஆந்திராவில் கடப்பா, திருப்பதி, தமிழகத்தில் செங்கம், தஞ்சை, திருமுக்கூடல், விழுப்புரம் போன்ற இடங்களில் மடம் மற்றும் மிஷனின் புதிய கிளைகளை துவக்க பாடுபட்டார். பக்தர்களுக்கு தீட்சை வழங்க அறங்காவலர்கள் அளித்த அங்கீகாரத்தை தொடர்ந்து, 2012ம் ஆண்டு ஆன்மிகப் பணியை துவக்கினார். 2017ல் இயக்கத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

]]>
https://vskdtn.org/2024/04/27/ramakrishna-missions-new-chief-assumes-charge/feed/ 0
சமஸ்கிருதம் நமது ஆன்மீக முயற்சிக்கு ஒரு புனித பாலமாக செயல்படும் தெய்வீக மொழியாகும்! https://vskdtn.org/2024/04/27/sanskrit-is-the-divine-language/ https://vskdtn.org/2024/04/27/sanskrit-is-the-divine-language/#respond Sat, 27 Apr 2024 08:22:54 +0000 https://vskdtn.org/?p=27530 குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சமஸ்கிருதம் தெய்வீக மொழி என்றும், நமது ஆன்மிகத் தேடலில், தெய்வீகத்தை இணைக்கும் புனிதப் பாலமாக அது செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர்,

சமஸ்கிருதம் மனித நாகரிகத்திற்கான கலாச்சார நங்கூரம் என்று விவரித்தார். “இன்றையக் காலகட்டத்தில், சமஸ்கிருதம் அறிவார்ந்த கடுமை, ஆன்மீக அமைதி மற்றும் தனக்கும் உலகிற்கும் ஆழமான இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு தனித்துவமான ஆறுதலை வழங்குகிறது” என்று அவர் கூறினார். “திருப்பதியில் தான் ஒருவர் தெய்வீகம், ஆன்மீகம் மற்றும் மேன்மைக்கு மிக அருகில் வருகிறார்.

கோவிலில் தரிசனம் செய்த போது இதை அனுபவித்தேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன், அனைவருக்கும் பேரின்பத்தை நாடினேன்” என்று கூறினார்.

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், டாக்டர் சுதேஷ் தன்கருடன் இணைந்து வெங்கடேஸ்வரரிடம் பிரார்த்தனை செய்தார்.

பின்னர் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “இன்று திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

சேஷாசலம் மலைகளின் அமைதியான சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் இந்த புனித இருப்பிடம் பாரதத்தின் வளமான ஆன்மீகப் பாரம்பரியத்தின் ஒளிரும் சின்னமாகும்.

எனது சக குடிமக்கள் அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தேன்”.

இந்திய அறிவு முறைகளின் மறுமலர்ச்சி மற்றும் பரப்புதலில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார்.

சமஸ்கிருதத்தின் வளமான பாரம்பரியத்திற்கும் நவீன கல்வித் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில், புதுமையான பாடத்திட்டங்களை உருவாக்கவும், பலதுறை ஆராய்ச்சியை வளர்க்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

“சமஸ்கிருதம் என்னும் புனித மொழி நம்மை தெய்வீகத்துடன் இணைப்பது மட்டுமல்லாமல், உலகைப் பற்றிய முழுமையான புரிதலை நோக்கிய பாதையை ஒளிரச் செய்யட்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் மேலும் கூறினார். விலைமதிப்பற்ற பழங்கால கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் தன்கர் வலியுறுத்தினார்.

நமது கலாச்சார பாரம்பரியத்தின் கருவூலமாக சமஸ்கிருதம் திகழ்கிறது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், அதைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் தேசிய முன்னுரிமை மற்றும் கடமை என்று குறிப்பிட்டார்.

சமஸ்கிருதம் இன்றைய தேவைக்கேற்ப வளர்க்கப்பட வேண்டும் என்றும் அதை எளிமையாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எந்தவொரு மொழியும் சமூகத்தால் பயன்படுத்தப்படும் போதும், அதில் இலக்கியங்கள் இயற்றப்பட்டால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், நம் அன்றாட வாழ்க்கையில் சமஸ்கிருத பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார்.

மத மற்றும் தத்துவ நூல்கள் மட்டுமல்லாமல், மருத்துவம், நாடகம், இசை மற்றும் அறிவியல் குறித்த மதச்சார்பற்ற படைப்புகளையும் உள்ளடக்கிய சமஸ்கிருதத்தின் வளமான மற்றும் மாறுபட்ட இலக்கியத் தொகுப்பைப் பற்றி குறிப்பிட்ட திரு தன்கர், பிரதான கல்வியில் சமஸ்கிருதத்தின் ஒருங்கிணைப்பு குறைவாகவே உள்ளது, இது பெரும்பாலும் இந்திய அறிவு முறைகளை நிராகரிக்கும் நீடித்த காலனித்துவ மனநிலையால் தடுக்கப்படுகிறது என்று எடுத்துரைத்தார்.

சமஸ்கிருதத்தைப் படிப்பது வெறுமனே ஒரு கல்வித் தேடல் அல்ல என்று கூறிய அவர், அதை சுய கண்டுபிடிப்பு மற்றும் அறிவொளியின் பயணம் என்று விவரித்தார்.

“சமஸ்கிருதத்தின் பாரம்பரியத்தை எடுத்துச் செல்லுங்கள் – கல்வி அறிவை மட்டுமல்ல, மாற்றத்திற்கான பாதையையும்” என்று அவர் அறைகூவல் விடுத்தார், மேலும் இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் தூதர்களாக மாறுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார், இதன் பொக்கிஷங்கள் எதிர்கால சந்ததியினரை சென்றடைவதை அவர் உறுதி செய்தார்.

தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் என். கோபாலசுவாமி, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, திருப்பதியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) இயக்குநர் பேராசிரியர் சாந்தனு பட்டாச்சார்யா, ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

]]>
https://vskdtn.org/2024/04/27/sanskrit-is-the-divine-language/feed/ 0
NIA விசாரிக்க VHP கோரிக்கை https://vskdtn.org/2024/04/26/vhp-demands-nia-probe/ https://vskdtn.org/2024/04/26/vhp-demands-nia-probe/#respond Fri, 26 Apr 2024 06:32:20 +0000 https://vskdtn.org/?p=27527 விஷ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச தலைவர் அலோக்குமார் பொதுச் செயலாளர் பஜ்ரங் பக்ரா இணை பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் மற்றும் பஞ்சாப் பிரசிடெண்ட் செயல் தலைவர்  ஹர்பிரித் சிங் கில்  ஆகியோர் அடங்கிய உயர்மட்ட VHP குழு மத்திய உள்துறை செயலாளரை சந்தித்து இந்த மாதம் நாங்கலில் (பஞ்சாப்) VHP தலைவர் விகாஸ் பிரபாகர் கொல்லப்பட்டதை NIA விசாரிக்க கோரிக்கை வைத்தனர்

]]>
https://vskdtn.org/2024/04/26/vhp-demands-nia-probe/feed/ 0
மூன்றே மாதங்களில் ஒன்றரை கோடி பக்தர்கள் அயோத்தி ஸ்ரீ குழந்தை ராமர் தரிசனம் https://vskdtn.org/2024/04/22/sampat-rai-ram-mandir/ https://vskdtn.org/2024/04/22/sampat-rai-ram-mandir/#respond Mon, 22 Apr 2024 10:05:47 +0000 https://vskdtn.org/?p=27521 அயோத்தி: ஸ்ரீ ராமஜென்ம பூமியில் ஸ்ரீ குழந்தை ராமரை தரிசிக்க மூன்றே மாதங்களில் ஒன்றரை கோடிக்கு மேலானூர் இதுவரை வந்துள்ளனர் . இது குறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை  பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது: ஜனவரி 22ம் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் வருகை இதுதான். தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர் என்றார். தற்போது கோவிலின் கீழ் தளம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முதல் தளம் கட்டும் பணி நடந்து வருகிறது. கோவிலை சுற்றி 14 அடி அகலத்தில் பார்கோட்டா எனப்படும் பாதுகாப்பு சுவர் கட்டப்படும். பார்க்கோடாவில் ஆறு சிறிய

Champat Rai questions decision to keep Ram Mandir open 24 hours for Ram  Navami

கோவில்களும் இருக்கும். ஹனுமான், அன்னபூரணி, வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர் மற்றும் அகஸ்தியரின் கோவில்களும் இங்கு இருக்கும். சிவன் மற்றும் சூரியனுக்கும் கோவில்கள் இருக்கும். ஒரே நேரத்தில் 25,000 யாத்ரீகர்கள் தங்கக்கூடிய முற்றம் இக்கோயிலில் உள்ளது. குகன், சபரிமாதா, தேவி அஹல்யா மற்றும் ஜடாயு கோவில்களும் முடியும் தருவாயில் உள்ளது என்கிறார் சம்பத் ராய்.

]]>
https://vskdtn.org/2024/04/22/sampat-rai-ram-mandir/feed/ 0
கர்நாடக அமைச்சர் வீட்டு முன்பு போராட்டம் நடத்திய ஏபிவிபி ! https://vskdtn.org/2024/04/22/abvp-protested-in-front-of-karnataka-ministers-house/ https://vskdtn.org/2024/04/22/abvp-protested-in-front-of-karnataka-ministers-house/#respond Mon, 22 Apr 2024 05:13:40 +0000 https://vskdtn.org/?p=27518 கர்நாடக மாநிலம் ஹுப்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர், நிரஞ்சன் ஹைமாத். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹைமாத். அங்குள்ள பல்கலை ஒன்றில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்துவந்தார். இதே கல்லூரியில் பெலகாவியைச் சேர்ந்த ஃபயாஸ் என்பவரும் பி.சி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில், ஃபயாஸ், நேஹாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவர் தனது காதலை பலமுறை நேஹாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஃபயாஸின் காதலை, நேஹா ஏற்கவில்லை என தெரிகிறது. ஆனாலும் நேஹாவை ஃபயாஸ் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார். மேலும் அவரை, நேஹா கண்டித்துள்ளார்.

இதனால் நேஹா மீது ஆத்திரத்தில் இருந்த ஃபயாஸ், நேற்று (ஏப்ரல் 18) தேர்வு எழுதிவிட்டு மதியம் வெளிவந்த நேஹாவை, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து நேஹாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் கல்லூரியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் தப்பியோடிய ஃபயாஸையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதனை கண்டித்து ஏபிவிபி தொண்டர்கள் பெங்களூரூவில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

]]>
https://vskdtn.org/2024/04/22/abvp-protested-in-front-of-karnataka-ministers-house/feed/ 0
நாட்டின் நலன் கருதி அனைவரும் வாக்களிக்க வேண்டும்.- பரம பூஜனிய டாக்டர் மோகன் பகவத் ஜி https://vskdtn.org/2024/04/19/everyone-should-vote-in-the-interest-of-the-country/ https://vskdtn.org/2024/04/19/everyone-should-vote-in-the-interest-of-the-country/#respond Fri, 19 Apr 2024 04:45:24 +0000 https://vskdtn.org/?p=27509 வாக்களிப்பது நமது கடமை நமது உரிமையும் கூட. வாக்களிப்பதன் மூலம் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் எதிர்காலத்தை நாம் தீர்மானிக்கின்றோம். அதனால் நாட்டின் நலன் கருதி அனைவரும் வாக்களிக்க வேண்டும். உங்கள் எண்ணங்களை வைத்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். – பரம பூஜனிய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி

]]>
https://vskdtn.org/2024/04/19/everyone-should-vote-in-the-interest-of-the-country/feed/ 0