வீர வரலாறு – VSKDTN News https://vskdtn.org Tue, 09 Apr 2024 12:40:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 யுகாதியில் அவதரித்த யுக புருஷன் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார். https://vskdtn.org/2024/04/09/dr-ji-rss/ https://vskdtn.org/2024/04/09/dr-ji-rss/#respond Tue, 09 Apr 2024 12:40:24 +0000 https://vskdtn.org/?p=27464 ஒரு நாடு வளம்பொருந்திய நாடோ; வறுமை நிலவும் நாடோ அது அந்நாட்டிற்குப் பெருமை சேர்க்காது. அந்த நாட்டு மக்கள் தேசபக்தியோடும் தேசிய சிந்தனையோடும் ஒன்றிணைந்து வாழ்ந்து தேசத்திற்காகப் பாடுபடுகிறார்களா? ஆமெனில்தான் அந்நாட்டிற்கு உயர்வு ஏற்படும் என ஔவையார் கூறுகிறார்.

அப்படி நம் தேசம் உயர்ந்த நிலைக்கு வரவும் நமது நாட்டு மக்களிடையே தேசத்திற்கான தியாகம், தேச சேவை செய்வது போன்ற சிறந்த நற்குணங்களை உருவாக்கக்கூடிய அமைப்புதான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம். அந்த அமைப்பை 1925ல் துவக்கியவர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார். யுகாதி திருநாளில் அவதரித்த ஹெட்கேவார் சிறு வயது முதலே தேசபக்தி, தெய்வபக்தி வாய்ந்தவராக ஒரு முன்னுதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்.

ஆங்கிலேயனை வெளியேற்றுவதற்கானப் போராட்டத்தில் ஈடுபட்டது காங்கிரஸ். ஆங்கிலேயன் வெளியேறினால் தேசத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்லி மக்களிடத்திலே கற்பனையை விதைத்தனர் காங்கிரஸார். மாறாக, ஏன் முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் நம்மை அடிமைப்படுத்தினார்கள், நமது தேசம் ஏன் அடிமையானது என்று தீர்க்கமாக சிந்தித்தார் ஹெட்கேவார். வல்லமையில், வாழ்க்கை முறை, கலாச்சாரத்தில் உச்சத்தைத் தொட்ட நாம் அடிமையானதற்குக் காரணம் நம்மிடத்திலே இருந்த ஒற்றுமையின்மை. அந்த பலவீனத்தைப் போக்கி மீண்டும் மக்களிடத்திலே ஒற்றுமையை கொண்டு வரவும் தேசத்தின் பெருமையை மக்கள் உணரவும் ஆர்.எஸ்.எஸ் என்ற மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அந்த அமைப்பை உருவாக்குவதற்காகத் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.

பலமான உடற்கட்டு, கண்களில் அசாதாரண ஒளி, பெரிய மீசை என்று முரட்டுத் தோற்றத்தைக் கொண்டவராக இருந்தாலும், அணுகுவதற்கு எளிமையான, பழகுவதற்கு இனிய மனிதராக, சாந்தமும், பண்பும், பணிவும் மிளிர வாழ்ந்தவர் ஹெட்கேவார். மருத்துவப் படிப்பை முடித்தபிறகு தன் வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்தவர். தன் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டபோதும் புன்சிரிப்போடும் அமைதியான முகத்தோடும் அனைவரையும் அரவணைத்து சங்கத்தை உருவாக்கி மக்கள் மனதிலிருந்து அடிமைத்தனத்தை நீக்கி, சமுதாயத்திற்கு வழிகாட்டக்கூடிய ஒரு தலைவராக வாழ்வாங்கு வாழ்விக்க வந்த ஒரு மகான் அவர்.

தேச மக்களிடையே ஒற்றுமை எனும் வெளிச்சத்தை உருவாக்கி, மக்கள் வல்லவர்களாக நல்லவர்களாக உருவாவதற்காக முன்னுதாரணமான வாழ்க்கை வாழ்வதற்காகவும் அவர் நமக்களித்த பொக்கிஷம்தான் ‘ஷாகா’. அந்த உத்தம புருஷனுடைய பிறந்த நாளில் அவர் தொடங்கி, வாழ்ந்து காட்டிய பாதையில் வாழ்வதன் மூலமாக மீண்டும் இந்த பாரதத்தை மகோன்னத நிலைக்கு கொண்டு செல்ல நாம் அவர் பிறந்த இந்த நன்னாளிலே உறுதி ஏற்போம்.

]]>
https://vskdtn.org/2024/04/09/dr-ji-rss/feed/ 0
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2024/04/06/natural-agronomist-nammalwar/ https://vskdtn.org/2024/04/06/natural-agronomist-nammalwar/#respond Sat, 06 Apr 2024 01:12:41 +0000 https://vskdtn.org/?p=27445 தஞ்சாவூர் மாவட்டத்தில் இளங்காடு என்னும் கிராமத்தில் ஏப்ரல் 6, 1938ஆம் ஆண்டு பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி எஸ்ஸி (அக்ரி) பட்டப்படிப்பு பயின்றார். காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் உள்ள மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக 1963-ம் ஆண்டில் தன் பணியைத் தொடங்கினார்.அங்கு நடைபெற்றுவந்த ஆராய்ச்சிகள் ஏழை, எளிய விவசாயிகளுக்கு உதவாது என்ற எண்ணம் இவரது மனதை வருத்தியது. தனது கருத்தைச் சக விஞ்ஞானிகளிடம் தெரிவித்து அதனை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தையும் கூறிவந்தார். ஆனால் அவர்களோ இவரது கருத்தைப் பொருட்படுத்தவில்லை.தன்னைச் சுற்றி நடப்பதை அமைதியாக, எல்லோரையும் போலப் பொறுத்துக் கொண்டுபோக முடியாத இவர், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ‘அய்லாண்ட் ஆஃப் பீஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்தார். இந்த அமைப்பின் சார்பில் சுமார் 10 ஆண்டுகள் களக்காடு வட்டாரத்தில் பணியாற்றினார். தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியதற்கு முக்கியக் காரணம் என இவர் போற்றப்படுகிறார். இதற்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ‘சுற்றுச் சூழல் சுடரொளி’ விருதை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்தி கிராம கிராமப்புற நிறுவனம் டாக்டர் பட்டம் வழங்கியது. தமிழக இயற்கை உழவர் அமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களையும் நடத்திவந்தார். ‘குடும்பம்’, ‘லிசா’, ‘மழைக்கான எகலாஜிகல் நிறுவனம்’, இந்திய அங்கக வேளாண்மைச் சங்கம்’, ‘நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்’, ‘உலக உணவு பாதுகாப்புக்கான பண்ணை ஆராய்ச்சி மையம்’ முதலான பல அமைப்புகளைத் தொடங்கினார். நல்ல எழுத்தாளராகவும் இருந்த இவர் ‘உழவுக்கும் உண்டு வரலாறு’, ‘தாய் மண்ணே வணக்கம்’, ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’, ‘இனி விதைகளே பேராயுதம்’, ‘நோயினைக் கொண்டாடுவோம்’, ‘களை எடு’, ‘பூமித் தாயே’, ‘மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இயற்கை விவசாயம், விவசாயிகள், இயற்கை வாழ்வு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படச் செய்தார். விவசாயிகளின் நலனுக்கும் சுற்றுச்சூழலைக் காப்பதற்கும் பல போராட்டங்களை முன்னெடுத்தார்.

]]>
https://vskdtn.org/2024/04/06/natural-agronomist-nammalwar/feed/ 0
கல்விக் கொடை வள்ளல் ராம.அழகப்பச் செட்டியார் பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2024/04/06/azhakappach-chettiar/ https://vskdtn.org/2024/04/06/azhakappach-chettiar/#respond Sat, 06 Apr 2024 01:10:14 +0000 https://vskdtn.org/?p=27443 சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் ஏப்ரல் 6, 1909ஆம் ஆண்டு பிறந்தார்.
விமானம் ஓட்டப் பயிற்சி பெற்றார். வாழ்க்கையில் சாதனை படைக்கும் நோக்குடன் துணி வியாபாரத்தில் இறங்கினார். முதலில் கொச்சி டெக்ஸ்டைல்ஸ் என தொடங்கப்பட்ட கடை, கேரள மாநிலம் திருச்சூரில் அழகப்பா டெக்ஸ்டைல்ஸ் ஆலையாக உருவெடுத்தது.மலேசியா, பர்மா, கேரளா, கல்கத்தா, பம்பாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் தேயிலைத் தோட்டங்கள், ஈயச் சுரங்கங்கள், துணி ஆலைகள், ஆயுள் காப்பீடு நிறுவனம், உணவு விடுதிகள், திரையரங்குகள் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்கினார். 20 ஆண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தார். திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறையை ஏற்படுத்த ரூ.1 லட்சம் வழங்கினார். சென்னையில் 1947-ல் நடந்த ஒரு விழாவில், ‘அறியாமையில் இருந்து இந்தியா விடுதலை பெற, பின்தங்கிய பகுதிகளில் கல்லூரிகள் தொடங்க செல்வந்தர்கள் முன்வர வேண்டும்’ என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியார் அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற இவர், தன் சொந்த ஊரில் கல்லூரி தொடங்க ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அந்த விழாவிலேயே வழங்கி துணைவேந்தரிடம் அனுமதி பெற்றார். மகளிர் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என பல கல்வி நிறுவனங்களை தொடங்கினார். காரைக்குடியில் 300 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கி, தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட வழிவகுத்தார். இதனால் இவரை ‘சோஷலிச முதலாளி’ எனப் புகழ்ந்தார் நேரு.  இவரது முனைப்புகளும் கல்விக்காக வாரி வழங்கிய தயாள குணமும் இன்று காரைக்குடியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அழகப்பா பல்கலைக்கழகமாக தழைத்தோங்கியுள்ளது. வனாந்திரமாக இருந்த காரைக்குடியை தொலைநோக்குப் பார்வையுடன் ‘கல்விக்குடியாக’ மாற்றியவர் எனப் போற்றப்பட்டார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க சென்னை தி.நகரில் தொடங்கப்பட்ட தக்கர்பாபா வித்யாலயாவுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கினார். நாட்டு மருந்து ஆராய்ச்சித் துறையை எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியிலும், தமிழுக்காக ஓர் ஆராய்ச்சித் துறையை திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்திலும் தோற்றுவித்தார். கொச்சியில் மகப்பேறு, குழந்தை வளர்ப்பு மையம் நிறுவ நன்கொடை வழங்கினார்.

]]>
https://vskdtn.org/2024/04/06/azhakappach-chettiar/feed/ 0
தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த தினம் இன்று https://vskdtn.org/2024/04/06/mahavidwan-meenakshisundaram-pillai/ https://vskdtn.org/2024/04/06/mahavidwan-meenakshisundaram-pillai/#respond Sat, 06 Apr 2024 01:07:24 +0000 https://vskdtn.org/?p=27438 திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் ஏப்ரல் 6, 1815ஆம் ஆண்டு பிறந்தார். பாடல்களைப் படித்த வேகத்தில் மனதில் பதிய வைத்துக்கொண்டுவிடுவார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் பாடினார். இவரிடம் பயின்றவர்களில் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று புகழப்பட்டார். பெரியபுராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். இவரது படைப்புகள் அனைத்தும் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. சுமார் 2 லட்சம் பாடல்களை இவர் இயற்றியுள்ளார். ‘தாயைவிட என் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று உ.வே.சா. இவரைக் குறிப்பிட்டுள்ளார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் என்ற தலைப்பில் இவரது வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. எழுதினார். தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 61 வயதில் (1876) மறைந்தார்.

]]>
https://vskdtn.org/2024/04/06/mahavidwan-meenakshisundaram-pillai/feed/ 0
அன்னை_சாரதாதேவி பிறந்த தினம் https://vskdtn.org/2023/12/22/mother_saradadevis-birthday/ https://vskdtn.org/2023/12/22/mother_saradadevis-birthday/#respond Fri, 22 Dec 2023 09:26:02 +0000 https://vskdtn.org/?p=25872 மேற்குவங்க மாநிலத்தின் ஜெயராம்பாடி கிராமத்தில் டிசம்பர் 22, 1853 ஆம் ஆண்டு பிறந்தார். இளம் வயதிலேயே தனித்தன்மையுடன் விளங்கினார். வீட்டில் தெய்வீகச் சூழல் நிலவியதால், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் ஆன்மிகத்தையும் கற்றார். ஆன்மிக உரைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். அந்நாள் வழக்கப்படி ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இவரை பால்ய விவாகம் செய்து வைத்தனர். ஆன்மிகத் தேடலில் மூழ்கிய பரமஹம்சரைப் புரிந்துகொள்ளாத கிராமத்து மக்கள், ‘பாவம் இந்த அப்பாவி சிறுமியை, மனநிலை சரியில்லாதவருக்கு கட்டிவைத்துவிட்டார்களே’ என்று பரிதாபப்பட்டனர். அதனால் அச்சமடைந்தார். நேரில் சென்று கணவரைப் பார்த்த பிறகு, அவர்கள் கூறியது உண்மையல்ல என்று தெளிந்தார். கணவர் இறைவடிவம் என்பதை உணர்ந்து, அவரையே குருவாக ஏற்றார். தானும் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இவரை உலக நாயகியான அம்பிகையாகப் போற்றி, பூஜித்தார் பரமஹம்சர். சாதாரண கிராமத்துப் பெண்ணாக கணவனைத் தேடி வந்த இவர், ‘அன்னை சாரதாதேவி’யாக மாறினார். சீடர்கள், பக்தர்களுக்கு தானே சமைத்து பரிமாறுவார். அவர்கள் சாப்பிடும்போது அருகில் அமர்ந்து விசிறிவிடுவார். சீடர்களுக்கு தீட்சை அளிக்கும்போது, ஆச்சார நியமங்களைவிட தூய்மையான பக்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். இறுதி நாட்களில் ராமகிருஷ்ணர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, அருகே இருந்து கண்ணும் கருத்துமாக பணிவிடை செய்தார். பரமஹம்சரின் மறைவுக்குப் பிறகு, சீடர்களை சிறப்பாக வழிநடத்தினார். ஒருமுறை கயாவுக்கு சென்றவர் அங்குள்ள மடங்களில் துறவிகளுக்கு இருந்த வசதிகளையும், ராமகிருஷ்ணரின் சீடர்கள் சிரமப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்து வருந்தினார். ‘என் பிள்ளைகளுக்கு நல்ல உணவு, உடை, தங்குவதற்கு இடம் வேண்டும். அவர்கள் அலைந்து திரிவதைக் காண சகிக்கவில்லை’ என்று பரமஹம்சரிடம் மானசீகமாக பிரார்த்தித்தார். இதுதான் ராமகிருஷ்ண இயக்கம் தோன்றுவதற்கான அஸ்திவாரம். அன்னையின் அருளாசியுடன் கங்கைக் கரையில் உள்ள பேலூரில் ராமகிருஷ்ண மடம் 1898-ல் தொடங்கப்பட்டது. ‘சங்க ஜனனி’ என்று இவரைப் போற்றினார் விவேகானந்தர். ‘மன நிம்மதி வேண்டுமானால் பிறரிடம் குறைகாணாதீர்கள். உங்கள் தவறுகளைப் பாருங்கள். மொத்த உலகையும் உங்கள் சொந்தமாக்கிக்கொண்டு பழகுங்கள். யாருமே அந்நியர் அல்ல. அனைவரும் என் குழந்தைகளே. மொத்த உலகமும் உங்கள் சொந்தம்’ என்று உபதேசித்தார். அனைவருக்கும் அன்பு, கருணை, ஆசியை வாரி வழங்கிய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் 67-வது வயதில் (1920) மறைந்தார்.
#saradadevi #சான்றோர்தினம்

]]>
https://vskdtn.org/2023/12/22/mother_saradadevis-birthday/feed/ 0
அம்பேத்கர் https://vskdtn.org/2023/04/14/ambedkar-2/ https://vskdtn.org/2023/04/14/ambedkar-2/#respond Fri, 14 Apr 2023 10:53:03 +0000 https://vskdtn.org/?p=21700 பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14, மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவர்.
2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

]]>
https://vskdtn.org/2023/04/14/ambedkar-2/feed/ 0
ஜாலியன் வாலாபாக் படுகொலை https://vskdtn.org/2023/04/13/jallian-walabagh-massacre/ https://vskdtn.org/2023/04/13/jallian-walabagh-massacre/#respond Thu, 13 Apr 2023 06:48:40 +0000 https://vskdtn.org/?p=21648 வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூடு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் சுடப்பட்டன. இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி இந்நிகழ்வில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். பிரித்தானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் போராட்ட உந்துதலையும் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது. மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்புக் கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்வு.

]]>
https://vskdtn.org/2023/04/13/jallian-walabagh-massacre/feed/ 0
வீர சாவர்க்கரின் பிறந்த நாள்_அரசு விழா https://vskdtn.org/2023/04/13/veera-savarkars-born/ https://vskdtn.org/2023/04/13/veera-savarkars-born/#respond Thu, 13 Apr 2023 06:04:22 +0000 https://vskdtn.org/?p=21641 கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘மோடி’ என்ற இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவரது எம்.பி. பதவி பறிபோனது. இந்த சூழலில், ‘மோடி’ சமூகத்தை இழிவாக பேசியதற்கு ஒட்டுமொத்த நாட்டிடமும் ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது. ஆனால் ராகுல் காந்தி, ‘மன்னிப்புக் கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. ஆகவே, மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று தெரிவித்தார். இது சாவர்க்கர் பிறந்த மகாராஷ்டிராவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.கவினர், பொதுமக்கள், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணியினர் மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியினரே ராகுல் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராகுல் தொடர்ந்து சாவர்க்கரை இழிவுபடுத்தி வருகிறார். இதேபோல அவர் தொடர்ந்து அவர் பேசினால் பொதுவெளியில் அவர் நடமாட முடியாத சூழல் உருவாகும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். மகாராஷ்டிர மாநில பா.ஜ.கவும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும் மகாராஷ்டிரா முழுவதும் வீர் சாவர்க்கர் யாத்திரையை நடத்தி வருகிறது. இந்த சூழலில் தற்போது, ‘வீர சாவர்க்கரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்’ என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

]]>
https://vskdtn.org/2023/04/13/veera-savarkars-born/feed/ 0
கன்சியாம் தாசு பிர்லா https://vskdtn.org/2023/04/10/kansiam-dasu-birla/ https://vskdtn.org/2023/04/10/kansiam-dasu-birla/#respond Mon, 10 Apr 2023 11:13:57 +0000 https://vskdtn.org/?p=21565 ஜி. டி. பிர்லா என்றறியப்படும் கன்சியாம் தாசு பிர்லா இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலம் சூனு மாவட்டத்திலுள்ள பிலானி எனும் சிறுநகரில் 1894 ஏப்ரல் 10-ம் நாள் பிறந்தார். உள்ளூரிலேயே ஒரு ஆசிரியரிடம் எண் கணிதம் மற்றும் ஆரம்பக் கல்வியை கற்றார். தந்தை வியாபாரி என்பதால் அவரது உதவியுடன் கல்கத்தா சென்று வியாபார உலகில் அடியெடுத்து வைத்த ஜி. டி. பிர்லா, அவரது குடும்ப தொழிலான தரகு வியாபாரம் செய்தார். சணல் தொழிற்சாலையைத் தொடங்கினார். வியாபாரம் அசுர வளர்ச்சி கண்டது. 1919-ல் உலகப் போர் முடிந்தவுடன் பிர்லா அண்டு பிர்லா லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். அதே ஆண்டில் குவாலியரில் சவுளி ஆலை தொடங்கினார். இது ரயான் என்கிற சிந்தடிக் ஆடைகள் பிரபலமடைய காரணமாக இருந்தது. பாரம்பரியமான வட்டிக்கடை வியாபாரத்திலிருந்து பருத்தி வியாபாரத்துக்கு மாறினார். புதிய தொழிலைச் செம்மையாகச் செய்வதற்காக, சொந்த ஊரான இராஜஸ்தானிலுள்ள பிலானியிலிருந்து, மேற்கு வங்கத்தின் தலைநகரான கல்கத்தாவுக்குப் போய்த் தங்கி வியாபாரத்தில் நல்ல லாபம் கண்டார். 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஜி.டி.பிர்லாவால் தொடங்கப்பட்ட நவீன தொழில்கள்தான் இன்றும் பிர்லா குழுமங்களின் “பெருநிறுவன’ (Corporate) கழகங்களாக வளர்ந்துள்ளன. தொழிலதிபர்களுடன் இணைந்து 1927-ல் மத்திய வர்த்தக மற்றும் தொழில் கழகத்தைத் தொடங்கி, அதன் தலைவராகவும் பதவியேற்றார். 1932-ல் காந்தியடிகள் தொடங்கிய அரிசன் சேவக் சங் என்ற அமைப்பின் தலைவரானார்.

]]>
https://vskdtn.org/2023/04/10/kansiam-dasu-birla/feed/ 0
ஆங்கிலேய அடக்குமுறையை எதிர்த்துப் போராடி பலிதானமாகிய மேகாலயாவின் யோகேன் சங்மா (1872): https://vskdtn.org/2023/04/07/english-oppression-eth/ https://vskdtn.org/2023/04/07/english-oppression-eth/#respond Fri, 07 Apr 2023 09:54:12 +0000 https://vskdtn.org/?p=21460 யோகேன் சங்மா மேகாலயா காரோ இன வனவாசி இளைஞர். காரோ மலைப்பகுதி களில் ஆங்கிலேய ஆட்சி அமைவதை எதிர்த்து காரோ இன மக்களை ஒருங்கி ணைத்துப் போராடிய வீரன்.
காரோ இன மக்களின் ஆதரவுடன் ஆங்கிலேயப் படைகள் மீது தொடர்ந்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தவர். ஒரு தாக்குதலின் போது ஆங்கிலேயப் படை தாக்கியதில் கொல்லப்பட்டார்.
யோகேன் சங்மாவின் வீர மரணம் காரோ இன மக்களிடமும், காரோ மலைப்பகுதி களிலும் பெரும் எழுச்சியைத் தோற்றுவித் தது.
ஆங்கிலேயர்கள் மீது கோபம் கொண்ட காரோ வனவாசி மக்கள் மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்திட யோகேனின் தியாகம் பெரும் உந்து சக்தியாக இருந்தது.
தியாகிகளின் வீர மரணம் என்றும் வீண் போவதில்லை என்பதற்கு யோகேன் சங்மாவின் வாழ்க்கை நல்லதொரு முன்மாதிரியாகும்.

]]>
https://vskdtn.org/2023/04/07/english-oppression-eth/feed/ 0