படித்ததில் பிடித்தது – VSKDTN News https://vskdtn.org Mon, 15 May 2023 06:45:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மனிதநேயம் மலர மகிழ்வித்து மகிழ்…….. https://vskdtn.org/2023/05/15/humanity-flourishes-and-rejoices/ https://vskdtn.org/2023/05/15/humanity-flourishes-and-rejoices/#respond Mon, 15 May 2023 06:45:48 +0000 https://vskdtn.org/?p=22498 ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியில் வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!
சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!
காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு…
கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்…..
அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்!
உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார்? என்று சொல்ல வேண்டுமா? என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்!
உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்!
ஒருவர் சந்திரன் !
ஒருவர் சூரியன் !
இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்…..!

சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்!
உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்!
ஒன்று செல்வம்!
இரண்டு இளமை!
இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!

சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! ….
உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்…!
ஒன்று பூமி !
எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்!
மற்றொன்று மரம் !
யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு கனிகளைக் கொடுக்கும் என்றாள்!

சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக் காரன் என்றார்!
அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்…
ஒன்று முடி !
மற்றொன்று நகம் !
இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!….

தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்!
உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்!
ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன்
மற்றவன் அவனுக்குத் துதிபாடும் அமைச்சன் ! என்றாள்! …

காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்!
உடனே அந்த பெண் மகனே… எழுந்திரு… என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்!
சாட்சாத் சரஸ்வதி தேவி யே அவர் முன் நின்றாள்!
காளிதாசர் கைகூப்பி வணங்கியதும்,
தேவி தாசரைப் பார்த்து… காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ , அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்!

”நீ மனிதனாகவே இரு” என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்…!

இதுபோலத்தான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கிறார்களே தவிர, மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு, நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் கற்றுத் தரவேண்டும்!

பெற்றோரை தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், கைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையென வாழ்க்கையை இயந்திர மயமாக்கி மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது!

நீ நீயாகவே “மனிதனாகவே இரு” ,

படித்ததில் பிடித்தது!!

]]>
https://vskdtn.org/2023/05/15/humanity-flourishes-and-rejoices/feed/ 0
படித்ததில் பிடித்தது – “உணவே மருந்து இதயத்திற்கும்” https://vskdtn.org/2023/04/24/food-is-medicine-for-the-heart/ https://vskdtn.org/2023/04/24/food-is-medicine-for-the-heart/#respond Mon, 24 Apr 2023 08:16:44 +0000 https://vskdtn.org/?p=21926 #சோறு

இன்று காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். நிறைய கம்பெனிகள் இங்கே சனி ஞாயிறு விடுமுறை. சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு, வெறிச்சோடி,

கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது.

 

ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது. அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

 

அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார்,  வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட். அவர் பக்கத்தில் நெருங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று யூகித்துவிட்டேன். கொண்டு போன லன்ச் பேக் அருந்து , கீழே விழுந்து, கொண்டு போன உணவு எல்லாம் கொட்டிவிட்டது.

 

சிலகாட்சிகளை பார்த்துவிட்டு அந்த இடத்தை நம்மால் கடக்க முடியாது. ஒரு இரண்டு வார்த்தை உச்சு கொட்டிவிட்டாவது சென்றால்தான் திருப்தியாக இருக்கும். நானும் அதே நோக்கத்தோடு வேகத்தை குறைத்து நின்று… “ஐயோ கீழே கொட்டிருச்சா”. அவர் தலையை மட்டும் அசைத்தார். அப்போதுதான் முகத்தை பார்த்தேன் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. உடைந்து போய் நின்றார்.

 

“சார்….  அய்யா…  இதுக்குபோய் ஏன் கலங்குறீங்க? தப்பா நினைக்க வேண்டாம். லன்ச்க்கு பணம்வேணா தரேன். விடுங்க அய்யா கொட்டியதை அள்ளவா முடியும்.. உங்க முகத்தை பார்க்க கஷ்டமா இருக்கு..” என்று முட்டாள்தனமாக பேசிட்டேன்.

 

என்னை ஒரு பார்வை பார்த்துட்டு அவர் பர்ஸ் எடுத்து காட்டினார். நிறைஞ்சு இருந்தது.

“என் ஒய்ப் ஆசை ஆசையா காலையில் ஐந்து மணிக்கு எழுந்து எனக்கு பிடிச்சதை சமைச்சு கொடுப்பா சார். மூட்டுவலி & சுகர் இருக்கு. உடம்புக்கும் முடில அவளுக்கு. மதியம் போன் பண்ணுவா சார் “எப்படி இருக்கு? டேஸ்ட் என்ன? உப்பு சரியா இருக்கா? நல்லா இருக்கா?னு கேப்பா சார்….”

 

அதற்க்கு மேலே என்னாலும் பேச முடியவில்லை. அவருக்கும் வார்த்தை வரல. ஒரு சில வார்த்தைகள் தான் ஆனால் ஓராயிரம் அர்த்தம் சொல்லியது.

 

கீழே கிடந்த உணவை அவர் வாஞ்சையா அள்ளி ஒரு கேரிபேக்கில் போட ஆரம்பித்தார். “ரோட்டில் கிடந்தா வேஸ்ட் ஆகிரும். ஏதாவது நாய்க்கு வச்சா சாப்பிடும்…” தனக்குத்தானே பேசிக்கொண்டார்.

 

எனக்கு அவர் சொன்ன வார்த்தையும், அதன் வலியும் அப்படியே இருக்கு இன்னும்.

 

சோறு என்பது ஒரு பொருள் அல்ல. அதை சமைப்பவர்களின் அன்பு.

 

எத்தனை முறை உதாசீனம் செய்திருக்கிறேன்.

 

“மதியம் பாக்ஸ் ரெடியா இருக்கு. இன்னிக்கி அவியல் செஞ்சேன்.”

 

“வேண்டாம்… ஆபீசில் சாப்பிட்டுகிறேன்.”

 

நைட் ….”வாங்க புதினா சட்னி இருக்கு .சாப்பிடலாம்.”

 

“வெளில சாப்பிட்டுட்டேன்”.

 

“ஒண்ணே ஒன்னு டேஸ்ட் பாக்கலாமே”.

 

“வயிறு புல்லா இருக்கு. வேண்டாம்.”

 

எத்தனை முறை நோகடிச்சு இருக்கிறோம். மிக பெரிய உதாசீனம் அது. சுருக்கென்று இருக்கிறது.

 

சாப்பாடுதானே வயிறு நிறைஞ்சா போதாதா? அப்டி இல்லை. நாம சாப்பிடுற சாப்பாட்டில் உப்பு இருக்கோ, காரம் இருக்கோ, புளிப்பு இருக்கோ…. தெரியாது ஆனால் சமைப்பவர்களின் அன்பு இருக்கு. சாப்பிட்டா நிறைவது நம்ம வயிறு மட்டும் இல்லை. அவர்களின் மனசும் சேர்ந்தே நிறைகிறது.

 

கொஞ்சம் பாராட்டலாம். அட பாராட்ட கூட வேண்டாம். ஒரு “தேங்க்ஸ்” சொல்லி பழகலாம். “நல்லா இருக்கு, தேங்க்ஸ்பா” என்று சொல்லலாமே.

இரண்டு மணி நேர அடுப்படி போராட்டம் உங்களின் ஒரே ஒரு வார்த்தையில் மகிழ்ச்சியாக மாற்றுமே..!!!!!

 

“உணவே மருந்து இதயத்திற்கும்”

]]>
https://vskdtn.org/2023/04/24/food-is-medicine-for-the-heart/feed/ 0
படித்ததில் பிடித்தது! https://vskdtn.org/2023/04/04/loved-reading/ https://vskdtn.org/2023/04/04/loved-reading/#respond Tue, 04 Apr 2023 07:03:14 +0000 https://vskdtn.org/?p=21358 ஐந்து வயது சிறுமி, தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள்.
அங்கே ஒரு முத்து மாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள்.

“அம்மு… இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே.. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை..

நான் உன்னோட பிறந்த நாளைக்கு அப்பாகிட்ட சொல்லி ‘ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்’ மாலை வாங்கி தரசொல்றேன்… இது வேண்டாம்மா” என்றாள் அம்மா.

ஆனால் சிறுமி, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்…

சிறுமிக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப் போனது.
அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள்.

பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.

பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள். அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ அம்மா சொல்லியும் கூட கேட்கவில்லை. எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு.

சிறுமியின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் சிறுமிக்கு படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “அம்மு… என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்து மாலையை எனக்கு தரீயா?”

“ஓ.. முடியாதுப்பா… நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்து மாலை மட்டும்
தரமாட்டேன்ம்பா…” என்றாள்.

“பரவால்லை குட்டிம்மா…” என்று புன்னகையுடன் பதில் சொன்னார் அப்பா.

இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “அம்மு… என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்” -அமுதா

“அப்போ, உன்னோட முத்து மாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.

“ஓ.. முடியாதுப்பா… நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க… முத்து மாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ்… அதமட்டும் நான் தர மட்டேன்.” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் அமுதா.

இப்போதும் அதே புன்னகையுடன் “பரவாயில்லை குட்டி..” என்றார் அப்பா.

சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், அப்பா இரவு கதை சொல்ல வந்தபோது…. சிறுமி ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா…” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்து மாலையை எடுத்து அப்பாவின் கைகளில் தந்தாள். அது பழசாகியும்… சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.

அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட அப்பா, மறு கையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆன ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.

அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். சிறுமி தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர். அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை தந்தார்.

“இதை உனக்கு தருவதற்காகத்
தான்டா அம்மு… நான் தினமும் அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன்…” என்றார் அப்பா.

இந்த தகப்பன் வேறு யாருமல்ல… நம் எல்லோருக்கும் தந்தையான இறைவன்…
அந்த குழந்தை தான் நாம்.

ஆம். இதுபோலத் தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கை விடுவதற்கு தயாராக இல்லை.

அத்தகையான போலியான விஷயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான ஒன்றை நமக்கு பரிசளிப்பான்.

நமது மோசமான பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள்/ உறவுகள்… போன்ற எது வேண்டுமானாலும் நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.. அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கை விட கடினமானவைகளாக இருக்கலாம்…

ஆனால் அவைகளை எல்லாம் விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன…. அத்தகைய சிறப்பான ஒன்றை பெற வேண்டுமானால்… போலியான மலிவான விஷயங்களை நாம் கைவிட வேண்டும்.

அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றை தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை.

]]>
https://vskdtn.org/2023/04/04/loved-reading/feed/ 0
பாலிதானி கெந்த் சிங்கின் கதை https://vskdtn.org/2022/07/08/of-balidani-khend-singh/ https://vskdtn.org/2022/07/08/of-balidani-khend-singh/#respond Fri, 08 Jul 2022 07:35:43 +0000 https://vskdtn.org/?p=15684 கெந்த் சிங் காங்கர் மாவட்டத்தில் (வடக்கு பஸ்தார்) பரல்கோட்டில் ஒரு ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர், இருப்பினும், அவர் அபுஜ்மர் பகுதியில் தண்ணீர், காடு மற்றும் நிலம் காரணங்களுக்காக போராடி தனது உயிரைக் கொடுத்தார். டிசம்பர் 24, 1824 அன்று, கெந்த் சிங் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரை அறிவித்தார், இது ஆங்கிலேயர்களுடன் போரிட அபுஜ்மருக்கு ஒரு பெரிய பூர்வீக இராணுவத்திற்கு வழிவகுத்தது. பழங்குடியினரின் இந்த மகத்தான பலம் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு ஒரு ஆபத்தான சூழ்நிலையாக இருந்தது.இந்தப் போர் ஜனவரி 20 ஆம் தேதி வரை சில வாரங்கள் நீடித்தது, கான்கேரில் உள்ள ஆங்கிலேயர்களால் கெந்த் சிங் அவரது சொந்த மாளிகையில் தூக்கிலிடப்பட்டார். சத்தீஸ்கரில் சுதந்திரப் போராட்டம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர்   கெந்த் சிங் என்பது அதிகம் அறியப்படாத உண்மை. படால் குடியிருப்புத் தொகுதிக்கு  கெந்த் சிங் பெயரிடப்பட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2022/07/08/of-balidani-khend-singh/feed/ 0
ஆம்பூரில் அவதரித்த ஆச்சரிய அறிஞர் https://vskdtn.org/2022/07/05/ambur-incarnated-amazing/ https://vskdtn.org/2022/07/05/ambur-incarnated-amazing/#respond Tue, 05 Jul 2022 05:29:55 +0000 https://vskdtn.org/?p=15572 ஏ. என். சிவராமன்   (1.3.1904– 1.3.2001)

ஆம்பூர் என்பது ஆழ்வார்குறிச்சிக்குத் தெற்கே 2 கி. மீ. தொலைவிலுள்ள ஒரு சிற்றூர்.

இங்கே பிறந்தவர்தான் ஆம்பூர் நாணுவையர் சிவராமன்.

அந்த மனிதரின் எளிமைக்கும் அவரது மேதைமைக்கும் சம்பந்தமில்லாதது போல தோற்றம்.

படித்தது பத்தாம் வகுப்பு தான். அதற்குள் நாடு விடுதலையடைய வேண்டி போராட வந்து விட்டார்!

படிப்பு நின்று விட்டது!

ஆனால் அவருடைய கல்வி தொடர்ந்தது!

அவருக்குத் தெரிந்த மொழிகள் கொஞ்சம்தான்.

பதினேழு!

தனது 93 ஆவது வயதில் அரபு மொழியைக் கற்றுக் கொள்ள முயன்றார்!

அவரறியாத எதுவும் உலகில் இல்லை எனும் அளவுக்கு அவருடைய சிந்தனையும் எழுத்தும் இருந்தன.

அரசியல், பொருளாதாரம், விவசாயம் போன்றவற்றில் அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு வியக்கத்தக்கது.

1970 களின் இறுதியில் ஆங்கில மொழித்திறனை தினமணி வாசகர்கள் வளர்த்துக் கொள்ளும் முகமாக

‘After Sucking the Air’ என்ற ஒரேயொரு ஆங்கிலச் சொற்றொடர் மூலம் தினமும் அரைப் பக்க அளவில் தொடர்ந்து ஏழெட்டு கட்டுரைகள் எழுதி
வந்தார் ஏ. என். எஸ்!

அவற்றையெல்லாம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் நான் எழுதி வைத்திருந்தேன்.

எவரோ வாங்கிப் போனார்!

கணக்கன், ஒன்றேகால் ஏக்கர் பேர்வழி, பாமரன், குமாஸ்தா என்ற புனைபெயர்களில் எழுதிய கட்டுரைகள் ஏராளம்.

கல்லூரி பக்கம் எட்டிப் பார்க்காத அவருடைய நூல்கள் கல்லூரியின் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டன.

தினமணியில் அவர் எழுதும் தலையங்கங்களை கூர்ந்து கவனித்து வாசிக்கும் வாசகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் அன்று இருந்தனர்.

அவருடைய அனுபவமும் அறிவுக்கூர்மையும் அவற்றில் பிரகாசிக்கும்!

எத்தனையோ விருதுகள் அவரை நாடி வந்த போதும், ராம்நாத் கோயங்கா விருதை மட்டும் ஏற்றுக் கொண்டார்.

அரசாங்கம் அளிக்க முன்வந்த பத்ம விருதுகளை ஏற்க மறுத்து விட்டார்!

பத்திரிகை ஆசிரியன் இதுபோன்ற விருதுகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

பதினேழு வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்ள காந்தி விடுத்த அழைப்பை ஏற்று சிறை சென்றார்.

வெளியே வந்த பிறகு, 1934 ல் தினமணி நாளிதழ் தொடங்கப்பட்ட போது அப்போதைய ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம் ( தென்காசிக்காரர்) தலைமையில் தினமணியின் துணையாசிரியாகச் சேர்ந்தார்.

1943 ல் ஆசிரியரானவர் 1987 வரையிலும் தொடர்ந்து 44 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இப்படிப்பட்ட ஒரு ஜீனியஸ் சில நேரங்களில் வேட்டி மேல் துண்டுடன் அலுவலகத்துக்கு வந்து விடுவார்!

இவருடைய எளிமைக்குச் சான்றாக ஒரு சம்பவம்:

பேராசிரியர் அ. ச. ஞா. அவர்கள் காரைக்குடி கம்பன் விழாவுக்குப் போவதாக இருந்தபோது ( 1962 அல்லது 1963) நானும் உன்னுடன் வருவேன் என்று அ. ச. ஞா. விடம் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே அவருடன் இருவர் வருவதாக இருந்த நிலையில் இவருடைய தகுதிக்கு அந்தச் சின்ன ஃபியட் காரில் அழைத்துப் போக வேண்டாம் என்று கருதிய அ. ச. ஞா., ‘நீங்கள் தனியாக வாருங்கள்’ என்று சொல்லியும் கேட்காத ஏ. என். எஸ்., ‘ உன் மடியில் படுத்துக் கொண்டாவது வருவேன்’ என்று குழந்தை போல பிடிவாதம் பிடித்தார்.

வேறு வழியின்றி அ. ச. ஞா. வும் சம்மதித்து, குறிப்பிட்ட நாளில் தன்னுடைய டிரைவரை சிவராமன் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்து வருமாறு கூறியிருக்கிறார்.

டிரைவர் புறப்படும் போது, அ. ச. ஞா. அவர்களின் மனைவி,

( இனி அ. ச. ஞா. அவர்கள் கூறுவார் :–+)

‘ குப்புசாமி, அவரைப் பார்த்தால் அப்பாவி மாதிரி இருப்பார். ஜாக்கிரதை. மிக்க மரியாதையுடன் அழைத்து வா”

என்று கூறினாள்.

இந்த நேரத்தில் என் மனைவி சொன்னது தேவையில்லாதது என்று கருதினேன். ஆனால் , பின்னர் நடந்ததை நினைத்துப் பார்க்கும் பொழுது அவள் சொன்னது எவ்வளவு சரியென்று பட்டது.

ஓட்டுநர் ஏ. என். எஸ். வீட்டுக்குச் சென்றார்.

பட்டா சாலையில், குப்புறப் படுத்துக்கொண்டு, ஒரு கைக்கு அணையாக ஒரு தலையணையை வைத்துக் கொண்டு வலக்கையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் ஒருவர்.

அவர் இந்த வீட்டுச் சமையல்காரன் என்று நினைத்து விட்டான் குப்புசாமி.

” ஓ ஐயரே” என்று விளித்து,

‘ இந்த வீட்டு ஐயாவை அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறேன்’

என்று கூறிவிட்டு, காருக்குத் திரும்பிவிட்டான்.

ஏ. என். எஸ். அவர்கள் ஒரு ஜமுக்காளத்தில் ஒரு தலையணையைச் சுற்றிக் கையில் எடுத்துக் கொண்டு வந்து, டிக்கியைத் திறக்குமாறு கேட்டார்.

ஓட்டுநர் ” ஓ ஐயரே, அங்கே படுப்பதற்கு எல்லாம் தருவார்கள். ஐந்து பேர் போக வேண்டும். இந்தப் படுக்கைக்கெல்லாம் இடம் இல்லை “

என்று முரட்டுத்தனமாகக் கூறிவிட்டான்.

” நீ சொல்வது சரிதான் ” என்று கூறிய ஏ. என். எஸ் படுக்கையை உள்ளே கொண்டு சென்று போட்டுவிட்டார்.

இனிமேல்தான் வீட்டுக்காரர் பெரியவர் வரப்போகிறார் என்ற நினைப்புடன் , குப்புசாமி வண்டியின் கதவருகே மிக்க பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான்.

ஆனால், அவனுக்கு ஓர் அதிர்ச்சி.

யாரைப் பார்த்து ‘ஓ ஐயரே’ என்று கூப்பிட்டானோ, அதே மனிதர் ஒரு சிறு கைப்பெட்டியுடன் வண்டிக்குள் வந்து அமர்ந்து விட்டார்.

கையும் ஓடாமல் காலும் ஓடாமல் வண்டியை ஓட்டிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான்.

வண்டியை நிறுத்தி விட்டு, வீட்டின் பின்புறமாகச் சென்று ‘ அம்மா, அம்மா’ என்று கத்தினான்.

முன்புறத்தில் சிவராமனை நானும் என் மனைவியும் வரவேற்றுக் கொண்டிருந்தோம்.

குப்புசாமியின் குரலைக் கேட்டு என் மனைவி பின்புறம் சென்றாள்.

ஓட்டுநர் குப்புசாமி ‘ பெருந்தவறு நடந்துவிட்டது’ என்று சொல்லி, நடந்தது முழுவதையும் விவரித்தான்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, முன்புறம் வந்த என் மனைவி, நடந்தவற்றை அப்படியே சொல்லி, அவன் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

இந்த விநாடிதான் சிவராமன் என்ற மனிதர் மாமனிதராக வளரும் சூழ்நிலை உருவாயிற்று.

விழுந்து விழுந்து சிரித்துவிட்டு,

” டேய் குப்புசாமி ” என்று அவரே அழைத்தார்.

மிகவும் பயத்துடன் அவன் அவர் எதிரே வந்து நின்றான்.

” குப்புசாமி, இன்றிலிருந்து போய்த் திரும்புகிற நான்கு ஐந்து நாட்கள் வரை வண்டி என்னுடையது. நீ என்னுடைய ஓட்டுநர். யார் சொல்வதையும் நீ கேட்கத் தேவையில்லை. நான் சொல்வது போல் செய்துவிட்டால் போதும் ” என்று சொல்லிவிட்டார்.

பிறகு புத்தம் புதிய ஒரு ரூபாய் தாள் அடங்கிய ஒரு கட்டை அவனிடம் கொடுத்துவிட்டு,

” இந்த ரூயாயெல்லாம் எதற்கு என்று நினைக்கிறாயா?

வண்டி புறப்படும் முதல் காரைக்குடி போய்ச் சேரும் வரை வேர்க்கடலை, நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றைச் சாலையில் எங்கே கண்டாலும், வண்டியை நிறுத்தி வாங்கிக் கொள். சாப்பிட்டுக் கொண்டே போகலாம் ” என்று கூறினார்.

அவர் சொன்னபடியே செய்தோம்…… ‘

‘…. ஒரு ஓட்டுநர் காட்டிய அவமரியாதையையும் மிக அன்புடன் ஏற்றுக்கொண்டு, அவனை ஒரு மகன் போல நடத்திய பொழுது சிவராமன் என்ற மனிதருக்குள் ஒரு மாமனிதர் புகுந்திருப்பதைக் காண முடிந்தது…. ‘

( நான் கண்ட பெரியவர்கள்)

இவர்தான் ஏ. என். சிவராமன் அவர்கள்!

ஆச்சரிய அறிஞர்தானே!

இன்று காலை இவர் பிறந்த ஆம்பூரில் இருந்து தயிர் விற்கும் பெண் வந்தார். அவரிடம் பரமகல்யாணி மறு வீடு முடிந்து சிவசைலம் திரும்பும் நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்டேன்.

அவர் சொன்னது:

” சாமி சைலப்பர் சந்தோஷமாத்தான் போவாரு;

கல்யாணிதான் சடச்சாக்குல போவா ‘

என்றார்!

அதாவது பரமகல்யாணி தன் தாய் வீட்டைவிட்டுப் போகிறோமே என்ற வருத்தத்தோடு போவாளாம்!

அந்த வருத்தத்தை இந்தப் பெண்மணி எப்படி உணர்ந்தார்?

என்னவொரு பாவனை!

மா. பாரதிமுத்துநாயகம்

]]>
https://vskdtn.org/2022/07/05/ambur-incarnated-amazing/feed/ 0
அற்புதமான இந்தியா. https://vskdtn.org/2022/05/13/wonderful-india/ https://vskdtn.org/2022/05/13/wonderful-india/#respond Fri, 13 May 2022 08:28:03 +0000 https://vskdtn.org/?p=14950 குஜராத்தில் உள்ள பழமையான சோம்நாத் கோவிலில் “பான் ஸ்தம்ப்” என்று ஒரு கண்கவர் மர்மம் உள்ளது.
கோயிலின் தெற்குப் பகுதியில், கடலைப் பார்க்கும் வகையில், “பான் ஸ்தம்ப்” என்ற தூண் உள்ளது. கடல் நோக்கிச் செல்லும் தூணின் உச்சியில் ஒரு அம்பு கட்டப்பட்டுள்ளது. இந்த தூணின் இருப்பு 6 ஆம் நூற்றாண்டிலிருந்து சில பண்டைய புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூணில் சமஸ்கிருதத்தில் ஒரு கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது –
“ஆசமுத்ராந்த தக்ஷிண த்ருவ்,பர்யந்த் அபாதித் ஜோர்திமார்க்”.
(“கடலின் இந்த புள்ளியிலிருந்து தென் துருவம் வரை பூமியில் நிலப்பரப்பு இல்லை).
ஆச்சரியமான உண்மை என்னவென்றால் நீங்கள் சோம்நாத் மந்திரில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கத் தொடங்கினால், 10,000 கிமீ தொலைவில் உள்ள தென் துருவத்தை (அண்டார்டிகா) அடையும் வரை நீங்கள் எந்த மலையையும் அல்லது நிலத்தையும் காண முடியாது.
இதில் புல்லரிக்க வைக்கக் கூடிய உண்மை என்னவென்றால் – 6 ஆம் நூற்றாண்டில் நம் முன்னோர்களுக்கு இந்த உண்மை எப்படி தெரியும்?
பூமியின் வான்வழி வரைபடம் அவர்களிடம் இருந்ததா? வானியல், புவியியல், கணிதம் மற்றும் கடல்சார் அறிவியல் ஆகியவற்றில் அவர்களுக்கு எந்த அளவு நுண்ணறிவு இருந்திருக்க வேண்டும்! என்பதெல்லாம் விடை அறிய இயலாத கேள்விகள்…
நமது பண்டைய இந்திய பாரம்பரியம் உண்மையில் ஒரு அற்புதம்!

]]>
https://vskdtn.org/2022/05/13/wonderful-india/feed/ 0
நீதிபதி மெக்கார்த்தி நமது ஆன் டைம்ஸ் வரலாற்றில் எழுதுகிறார் https://vskdtn.org/2022/05/11/judge-mccarthy-ours/ https://vskdtn.org/2022/05/11/judge-mccarthy-ours/#respond Wed, 11 May 2022 06:01:28 +0000 https://vskdtn.org/?p=14869 ‘இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் உள்ள மொத்தப் பகுதி மக்களும் ஆங்கிலேய அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி செய்வதுதான் உண்மை. ‘1857 சுதந்திரப் போராட்டம் என்பது வெறும் அரசர்கள் மற்றும் ஆட்சியில் அமர்ந்த சில படைவீரர்களின் வெறி மட்டுமல்ல. அந்த முயற்சி தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் எதிர்காலத்திற்கு பலனளிப்பதாக இருந்தது. இவ்வளவு கொடூரம் நடந்தும் இந்திய மக்களின் சுதந்திர ஆசையை ஆங்கிலேயர்களால் அடக்க முடியவில்லை.சுதந்திர மகாயாக்யத்திற்கு யார் பங்களித்திருந்தாலும், அவர்கள் அனைவரும் மரியாதைக்குரியவர்கள்
                                                                                                – வீர் சாவர்க்கர்

]]>
https://vskdtn.org/2022/05/11/judge-mccarthy-ours/feed/ 0
“‘மோடி எதிர்ப்பு’ என்பது ஒரு மனநோய்”⁉️ – செபாஸ்டியன் பால் (முன்னாள் கேரள கம்யூனிஸ்ட் எம்.பி) https://vskdtn.org/2022/05/08/anti-modi/ https://vskdtn.org/2022/05/08/anti-modi/#respond Sun, 08 May 2022 10:17:32 +0000 https://vskdtn.org/?p=14795  

“பிரதமர் மோடி மீது ஒரு பிரிவினரின் கட்டுக்கடங்காத வெறுப்பும், பகைமையும் ஒருவித மனநோயின் அறிகுறியாகவே எனக்குத் தோன்றுகிறது.

நான் காங்கிரசுக்கு எழுதும் போது மோடியையும் கேலி செய்தேன்.

*அதற்காக மன்னிக்கவும். *

மோடி சூப்பர் ஹீரோவும் இல்லை,
சித்தரும் இல்லை.
ஒரு சாதாரண மனிதன்.

அவர் தனது சொந்த மொழியில் மக்களுடன் தொடர்பு கொள்கிறார்.

மக்கள் இதயத்திலிருந்து பேசும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.

அதனால், மக்கள் அவரை பிரதமராக தேர்ந்தெடுத்தனர்.

அவர் அதிகாரத்தைக் கைப்பற்றவோ, நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடவோ இல்லை.

ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்பவர்கள் மோடியையும் பிரதமராக ஏற்க வேண்டும்.

‘இந்த விஷயத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது’ என்று நினைக்கிறேன்.

2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும்.

அவர் ஆட்சிக்கு வருவது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது.

வேறு கட்சி இல்லை.

எடுத்தாலும் போடாமலிருக்கும் நிலையிலேயே காங்கிரஸ் இருக்கிறது.

காங்கிரஸ் படிப்படியாக மறைந்துவிடும்.

கட்சிக்கு உதவும் பணி சோனியா காந்தியிடம் நீண்ட காலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரம் கிடைத்தது, இந்தியா கட்டப்பட்டது என்பது உண்மைதான்.

ஆனால், அந்த காங்கிரஸ் இப்போது இல்லை.

சோனியா காந்தியின் ஒரே ஒரு ஸ்பின் நிறுவனம் உள்ளது.

ஒரு அரசியல் கட்சி ஒரே குடும்பத்தின் சொத்தாக மாறினால் என்ன நடக்கும் என்பது தான் காங்கிரசுக்கு நேர்ந்தது.

இந்த யதார்த்தத்தை சாதாரண காங்கிரசார் புரிந்து கொள்ள சிறிது காலம் பிடிக்கும்…
பரவாயில்லை.

‘பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் மோடி அடுத்த பிரதமர் ஆக மாட்டார்’ என கூறப்பட்டுள்ளது.

சில சமயம் அமித் ஷாவாக இருக்கலாம்.

அன்று, அதே மோடியைத்தான் இன்றைய மோடி எதிர்ப்பாளர்கள் புகழ்வார்கள்.

அமித் ஷா ஒரு பயங்கரமான பாசிஸ்ட் என்றும்,
மோடி ஒப்பீட்டளவில் செல்லுபடியாகும்
மற்றும் அன்பான சாத்விக் என்றும் போற்றப்படுவார்.

இதில் எதிலும் லாஜிக் இல்லை.

‘வெறுப்புகள்’ சில மக்கள் மனதில் ‘நியாயமற்ற முறையில்’ வேரூன்றியுள்ளது.

‘இந்து வகுப்புவாதம்’ என்பது ஒரு கட்டுக்கதை.

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

அதில் என்ன தவறு?

பிற மதத்தினரை இது எந்த விதத்திலும் பாதிக்காது.

அது யாருடைய உரிமையையும் பறிக்காது.

இந்து வகுப்புவாதத்தை காரணம் காட்டி பாஜகவில் இருந்து இந்துக்களை ஒதுக்கிவிட முடியாது.

தற்போது, ​​
பா.ஜ.க இந்துக்கள் ஆட்சியில் இருப்பதை ‘அதிர்ஷ்டமாகக் கருதுகின்றனர்’
மற்றும்
இந்துக்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டுள்ளனர்.

ஏனென்றால், முஸ்லிம்கள் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தால் ‘என்ன நடக்கும்?’ என்று இந்துக்கள் உண்மையில் பயப்படுகிறார்கள்.

முஸ்லிம்கள் இந்துக்களுக்கு பயப்படத் தேவையில்லை…
ஆனால்,
இந்துக்கள் முஸ்லிம்களுக்கு பயப்பட வேண்டும்.

இதை,
இன்று இந்துக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

இஸ்லாம் மிகவும் பழமையான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது.

சீர்திருத்தப்படாத இஸ்லாமியம் இந்துக்களால் மட்டுமல்ல,
மனித குலமே
எப்போதும் அஞ்சுகிறது.

தற்போதைய தப்லிகியைப் பார்க்கவும்.

இந்த கொரோனா காலத்தில் எந்த நாட்டைச் சேர்ந்த தப்லிகி முஸ்லிம்கள் டெல்லியில் குடியேறினர்?

தப்லிகி முஸ்லிமின் விளக்கம் என்னவென்றால், ‘கொரோனா வந்து இறந்தால், அது அல்லாஹ்வால் நினைவுகூரப்படும்.’

இப்படிப்பட்ட ஆதிகால இஸ்லாமியர்களுக்கு மக்களைக் கொல்வது அல்லாஹ்வின் விருப்பமும் கூட.

ஆதிகால இஸ்லாத்தின் கடவுள்…
‘எவ்வளவு பழமையானவர்?’ என்பதைப் பாருங்கள்.

இது அந்தளவிற்கு கெடுதல் இல்லை.

ஏனெனில் ஆதிகால மனதில் ‘கடவுள்’ என்ற கருத்தும் பழமையானது.

எனவே, அச்சுறுத்தல் ஒழுங்கமைக்கப்பட்ட இந்துக்கள் அல்ல, மாறாக ஒழுங்கமைக்கப்பட்ட இஸ்லாம் என்பதை இந்துக்கள் பொதுவாக புரிந்துகொள்கிறார்கள்.

மதம் என்று வரும்போது, ​​படித்த மற்றும் உயர் பதவியில் இருக்கும் முஸ்லீம்கள் இஸ்லாத்தின் பழமையான நம்பிக்கைகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். என்பதை இந்துக்களும் புரிந்துகொள்கிறார்கள்.

எனவே,
இந்துக்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபடுவது ‘காலத்தின் தேவை’ என்பதையும்,

அது யாருக்கும் எதிரானது அல்ல…

யாருக்கும் தீங்கு விளைவிப்பதும் இல்லை.
என்பதை
இந்துக்களாவது புரிந்து கொள்வது நல்லது.🙏

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

]]>
https://vskdtn.org/2022/05/08/anti-modi/feed/ 0
மலையாளப்படத்தில் ஒரு காமெடி காட்சி https://vskdtn.org/2022/05/06/in-malayalam-film-a-kama/ https://vskdtn.org/2022/05/06/in-malayalam-film-a-kama/#respond Fri, 06 May 2022 06:25:02 +0000 https://vskdtn.org/?p=14709  

இன்னசெண்ட் நடத்தும் ஹோட்டலுக்கு Food இன்ஸ்பெக்டர் ரெய்டு நடத்தாமல் இருக்க

இன்ஸ்பெக்டருக்கு மதுவை வாங்கி கொடுத்து அதற்கு சைடிஷ்ஷாக அவர் ஹோட்டலில் சமைத்த பீப் கறியை கொடுத்து டேஸ்ட் எப்படி இருக்கு என்று கேட்க

இன்ஸ்பெக்டரோ அடடா அபாரம் அற்புதமான சுவை

இதுபோல் எங்குமே சாப்பிட்டதில்லை என்பார்

இன்னசெண்ட் அவரிடம்

ஆமாம்

இந்த ஹோட்டலில் இந்த பழைய இறைச்சிகள் விற்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்கிறார்.

ஏதாவது டெஸ்டிங் மிஷின் இருக்கா?!

இன்ஸ்பெக்டரோ

அதை சாப்பிட்டு பார்த்து தான் கண்டு பிடிப்பேன் என்கிறார்

இன்னசெண்ட் நல்லவேளை நீங்க யூரின் மோஷன் டெஸ்ட் பரிசோதிப்பவரா இல்லை

என்று சொல்லிவிட்டு இப்போ நீங்க சாப்பிடும் இந்த இறைச்சி எத்தனை நாள் பழக்கம் இருக்கும் என கேட்கிறார்

அதற்கு டேஸ்ட் வைச்சு பார்க்கும் போது இது இன்னைக்கு மதியம் தான் சமைச்சிருக்கனும் என்று சொல்ல

இன்னசெண்ட் தன் மகனை அழைத்து ஓங்கி ஒரு அப்பு அப்புகிறார்!

ஏன் என்று இன்ஸ்பெக்டர் கேட்க

இவன்கிட்ட பலவாட்டி சொல்லியிருக்கேன்

இறைச்சி நாளாக நாளாக டேஸ்ட் கூடும் என்று.

இவன்தான் இன்ஸ்பெக்ஷன் வந்து கண்டுபிடிச்சா மாட்டிக்கிவோம் என்று என்னை பயமுறுத்தினார்.

இத்தனை வருஷம் சர்வீஸில் உள்ள நீங்களே சொல்லீட்டிங்க “ஒரு வாரம்” ஆனா இந்த கறி டேஸ்டா இருக்குன்ன!

இதை ஏன் சொல்கிறேன் என்றால் தற்போது எங்கேனும் உணவுபாதுகாப்பு துறை ரெய்டு நடத்தி பார்த்தோ கேட்டோ இருக்கிறீர்களா?!.

நாளுக்கு நாள் உணவு கடைகள் கூடுதே தவிர

அந்த உணவுக்கூடங்களில் சோதனை நடத்தும் துறைகளுக்கு அதிகாரிகள் கூடி இருக்கிறார்களா?!

மக்களின் உயிர் மீது அரசாங்களின் அக்கரை லட்சணம் அந்த விதத்தில் இருக்கு!.

]]>
https://vskdtn.org/2022/05/06/in-malayalam-film-a-kama/feed/ 0
திருப்திப் படுத்த முடியுமா இவர்களை.. ? https://vskdtn.org/2022/05/04/can-satisfy-can/ https://vskdtn.org/2022/05/04/can-satisfy-can/#respond Wed, 04 May 2022 11:02:54 +0000 https://vskdtn.org/?p=14662  

மஹாபாரதப் போர் நடக்கப் போகிறது என்று முடிவாகிவிட்டது. ஆனாலும் கடைசி கடைசியாக ஒருமுறை க்ருஷ்ண பகவானை துரியோதனனிடம் தூது அனுப்பினார் தர்மர்.

க்ருஷ்ணரும், துரியோதனனிடம் தர்மர் தெரிவிக்கச் சொன்னதாக ஒரு முன்மொழிவை தெரிவித்தார்.

அதாவது மொத்த தேசத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். பாண்டவர்களுக்கு ஐந்தே ஐந்து கிராமங்களை மட்டும் கொடுங்கள் போதும். அதில் அவர்கள் அமைதியாக வாழ்ந்துவிடுவார்கள்.

இதன் மூலம் போரை தவிர்த்து விடலாம் என்று கூற… துரியோதனன் மறுத்துவிட்டான்.

எதற்காக இப்படிப்பட்ட துளியும் நியாயமில்லாத ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று கௌரவர்களிடம் கேட்கப்பட்டது..?

க்ருஷ்ணருக்குத் தெரியாதா இதற்குக் கூட துரியோதன்ன் ஒப்புதல் அளிக்க மாட்டான் என்று..?

க்ருஷ்ணருக்கு நன்றாகத் தெரியும் துரியோதனனிடமிருந்து என்ன பதில் வரும் என்று. ஆனாலும் இந்த விஷயத்தில் அவரே தூது சென்றதற்கு இரண்டு காரணங்கள்.

முதலில் பாண்டவர்கள் இந்தப் போரை தவிர்க்க முடியாது என்பதை உணர வேண்டும் . போரே தேவையில்லை நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம் என்று பாண்டவர்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் உங்களோடு போரிடாமல் இருக்க மாட்டோம் என்பதுதான் கௌரவர்களின் நிலைபாடு. சண்டை போட வேண்டுமா? வேண்டாமா? என்பது பாண்டவர்களின் கையில் இல்லை. எதிரணி ஆயுதத்தை எடுத்தே ஆக வேண்டுமென்று துரியோதனன் முடிவெடுத்துவிட்டான். அதுதான் நிதர்சனம்.

இதற்குப் பிறகும் பாரத யுத்தம் ஆரம்பிக்கப் போகும் நேரத்தில் அர்ஜுனனுக்கு பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. அனைவருமே உடன் பிறந்தவர்களாயிற்றே… என்கிற மன மயக்கம் ஏற்பட்டது.

இரண்டாவது காரணம்.. நாளை எதிர் காலத்து சந்ததியர்களுக்கு எந்த அளவு பாண்டவர்கள் இறங்கி வர தயாராக இருந்த போதிலும் கௌரவர்கள் அதற்கு எள் முனை அளவு கூட இடம் கொடுக்கத் தயாராக இல்லை என்பதை உணர்த்த வேண்டும்.

இப்போது நம்முடைய நிகழ் காலத்திற்கு வருவோம்.

ஹிந்துக்கள் ஒன்றைப் புரிந்து கொண்டே ஆகவேண்டும்.
அமைதி மார்க்கத்தவர்களிடம் முரண்பாடு இருந்தாலும், இல்லாவிட்டாலும், எவ்வளவுதான் அள்ளிக் கொடுத்தாலும், நாட்டையே இரண்டு பக்கங்களிலும் பிய்த்துக் கொடுத்தாலும், அரசாங்க சலுகைகளை வாரி வழங்கினாலும் , அவர்களுக்கென்று தனியாக சட்ட திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்தாலும் , புனித பயணத்திற்கு எல்லாவித உபகாரங்களையும் செய்து கொடுத்தாலும் , அவர்களின் டிமாண்டுகள், மிரட்டல்கள், எதிர்பார்ப்புகள் எதுவும் குறையப் போவதில்லை.

நாட்டையே பிய்த்துக் கொடுத்தாகிவிட்டது .. திருப்தி இல்லை. தனி நாடு வேண்டுமென்று போராடியவர்கள் கூறுபோட்ட பின்னர் இங்கேயே உட்கார்ந்துவிட்டார்கள்.

Article 370, 35A, Roshni சட்டம், இஸ்லாமிய பர்சனல் லா என்று அவர்களுக்கென்று சாதகமாக எத்தனையோ சட்டங்களை வாரி, வாரி வழங்கிய போதும் அமைதி அடையவில்லை.
புனித ஹஜ் பயணத்திற்கு தனி விமானம், ஓசி பயணம் , நோன்பு கஞ்சிக்கென்று டன் கணக்கில் அரிசி … அப்போதும்.. ஊஹூம்.. எதிர்பார்ப்பில் துளிக்கூட திருப்தியே இல்லை.

உங்களுக்கு பசு புனிதமா?. . எங்களுக்கு பசுவின் மாமிசம்தான் பிடிக்கும்.

உங்களுக்கு ராமரும் க்ருஷ்ணரும் பிறந்த இடம் புனிதமா?..

எங்களுக்கு அந்த புனித இடங்களை இடித்துக் கட்டிய பாபரின் ஆண் வைப்பாட்டியின் பெயர் கொண்ட அந்த மசூதியும் வேறு பல மசூதிகளும்தான் முக்கியம்.

உங்கள் கோவில்களிலிருந்து வரும் மணிச் சத்தமும், நாதஸ்வர ஓசையும் எங்கள் காதுகளைக் கிழிக்கிறது. உடனே நிறுத்தியாக வேண்டும்.

எங்கள் மசூதி வாசல் வழியாக உங்கள் ஸ்வாமியின் ஊர்கோலம் நடந்தால் வேத முழக்கத்தோடு போகக் கூடாது..
அது சவ ஊர்வலம்போல் அமைதியாகப் போகவேண்டும் . ஏனெனில்..எங்கள் ஆட்கள் மசூதியின் உள்ளே தொழுகை நடத்துகிறார்கள்.

எங்களுக்கு 5 வேளை தொழுகை நடத்தியே ஆக வேண்டும். ஆகவே நாங்கள் எங்கே இருந்தாலும் அது ரயில்வே நிலையமாக இருந்தாலும் சரி… நடுத் தெருவாக இருந்தாலும் சரி.. அந்தந்த நேரத்தில் அங்கங்கு எங்கள் இனத்தையே கூட்டி கும்மியடிப்போம்.. எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது.. செய்யக் கூடாது.

இப்போது இவர்களின் பேராசை, கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி தெருக்களை ஆக்ரமித்த இவர்கள் தற்போது நம் வீடுகளுக்குள்ளும் நுழையத் தொடங்கிவிட்டனர் .

தங்கள் இளைஞர்களுக்கு பணமும், மோட்டர் பைக்கும், அப்டுடேட் மொபைலையும் கொடுத்து நம் பெண்களை கவர்ந்திழுக்க ஆரம்பித்து விட்டார்கள் லவ் ஜிஹாத் மூலமாக.. நம் வீட்டுப் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி.. மதம் மாறவைத்து அவர்களின் அடிமைகளாக மாற்றுவதில் முனைந்து வெற்றியும் காண ஆரம்பித்து விட்டார்கள். குழந்தைகளையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை.

நாம் இதுவரை ஹஜ் பயணத்தை எந்த விதத்திலும் தடுத்ததில்லை. ஆனால்..
இவர்கள் நம்முடைய கைலாஷ் யாத்திரையை தடுத்து அங்கு போகிறவர்களை அழிக்க முற்படுகிறார்கள் .

காஷ்மீரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது கை கொடுத்து காப்பாற்றிய ராணுவ வீரர்களின் மேல் கற்களை எறிந்து தங்களின் நன்றியை காண்பிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

32 வருடங்களாக காஷ்மீர் பண்டிட்டுகளின் உடைமைகளை சூறையாடி சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கியபோதும் அவர்களில் ஒருவர்கூட பயங்கரவாதிகளாக மாறவில்லை.

நம் இனத்தில் ஒரு திருடனோ, கொலைகாரனோ, கொள்ளைக்காரனோ இருந்தால் ஊர்கூடி அவனை தள்ளி வைத்தது நம் மரபாக இருந்தது.
ஆனால்….. நாடு முழுவதும் குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதியை தூக்கில் போட்டால்.. அவனது இறுதி ஊர்வலத்தில் லட்சக் கணக்கில் கூட்டம் கூட்டமாக இவர்கள் கூடி அவனை ஹீரோவாக கொண்டாடுகிறார்கள்.
ஆகவே…

இவர்களை திருப்திபடுத்த முயற்சிப்பது துரியோதனனை திருப்திபடுத்த முயன்றதற்குச் சமமானது.

துரியோதனனின் ஒரே விருப்பம் பாண்டவர்களை ஒழித்துக்கட்டுவது.

இவர்களின் ஒரே எண்ணம்…. ஹிந்துக்களை காலி செய்வது.

ஆகவே.. இனிமேலும் விழித்துக் கொள்ளமாட்டேன் என்று அடம் பிடிக்கும் ஹிந்துக்களே…….. உங்கள் இனமும், சுற்றமும் அழிய நீங்களே முக்கிய காரணகர்த்தா என்பதை மறக்காதீர்கள்..!!!!

விழித்தெழுந்த மக்களின் மையங்கள் தான் நாட்டினை உய்விக்கும்!!!

]]>
https://vskdtn.org/2022/05/04/can-satisfy-can/feed/ 0