மருத்துவம் – VSKDTN News https://vskdtn.org Mon, 07 Mar 2022 08:31:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மக்கள் மருந்தக திட்டம்: பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் https://vskdtn.org/2022/03/07/people-pharmacy-program/ https://vskdtn.org/2022/03/07/people-pharmacy-program/#respond Mon, 07 Mar 2022 08:31:54 +0000 https://vskdtn.org/?p=12741 ஏழைகளுக்கு தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே மக்கள் மருந்தகங்களின் நோக்கம்.

இந்தியா முழுவதும் 36 மாநிலங்களில் 8675 இடங்களில் மருத்துவ முகாம் .

மக்கள் மருந்தகம் மூலம் 1451 வகையிலான மருத்துகளும் 240 க்கும் மேல் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

மக்கள் மருந்தக தினத்தையொட்டி மக்கள் மருந்தகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார். 

]]>
https://vskdtn.org/2022/03/07/people-pharmacy-program/feed/ 0
மாணவர் மேம்பட ‘நீட்’ அவசியம் https://vskdtn.org/2022/03/07/student-need/ https://vskdtn.org/2022/03/07/student-need/#respond Mon, 07 Mar 2022 06:36:02 +0000 https://vskdtn.org/?p=12728 மாணவர்களின் திறன் சர்வதேச தரத்திற்கு மேம்பட, ‘நீட்’ தேர்வு அவசியம்.

அனைத்து வகையான படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு உண்டு
அதன்படி மாணவர்களின் திறன் சர்வதேச தரத்திற்கு மேம்பட நீட் தேர்வு அவசியம்.

தமிழகத்தில் 11 மருத்துவ கல்லுாரிகள் திறப்பதால் கூடுதல் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் முருகன் தெருவித்தார் .

]]>
https://vskdtn.org/2022/03/07/student-need/feed/ 0
கென்யா முன்னாள் பிரதமர் மகளுக்கு பார்வை தந்த ஆயுர்வேதம் https://vskdtn.org/2022/02/09/kenya-pm-daughter/ https://vskdtn.org/2022/02/09/kenya-pm-daughter/#respond Wed, 09 Feb 2022 10:27:29 +0000 https://vskdtn.org/?p=11667 கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் பார்வையிழந்த மகள், கேரளா கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பார்வை பெற்றார். ரெய்லா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு 2017 ல் 39 வயதில், திடீரென மூளையில் ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், சீனா நாடுகளில் பலமுறை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. எனினும் பார்வை திரும்ப கிடைக்கவில்லை.
இந்தியாவின் ஆயுர்வேதத்தின் சிறப்பை அறிந்த ரெய்லா ஒடிங்கா, கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத மருத்துவமனைக்கு மகளை சிகிச்சைக்காக அனுப்பினார். 2019ல் இங்கு ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்றபின்பு பார்வை மேம்பட்டதும் ரோஸ்மேரி கென்யா திரும்பினார்.
தொடர்ந்து ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்ட அவருக்கு இழந்த பார்வை கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ரோஸ்மேரி, கென்யா நாட்டின் தொலைகாட்சிகளில் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவ முறை, உணவு முறைகளால் தான் பார்வை பெற்ற விதத்தை விளக்கினார்.

]]>
https://vskdtn.org/2022/02/09/kenya-pm-daughter/feed/ 0
மூக்கு வழியாக கொரோனா தடுப்பு மருந்து: மூன்றாம் கட்ட சோதனைக்கு பாரத் பயோடெக்கிற்கு அனுமதி https://vskdtn.org/2022/01/29/nasal-vaccination/ https://vskdtn.org/2022/01/29/nasal-vaccination/#respond Sat, 29 Jan 2022 08:50:11 +0000 https://vskdtn.org/?p=11350 மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு பாரத் பயோடெக்கிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகளில் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாரத் பயோடெக் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை தயாரித்துள்ளது. இதன் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு கடந்த ஆகஸ்டில் அனுமதி கிடைத்திருந்தது.

]]>
https://vskdtn.org/2022/01/29/nasal-vaccination/feed/ 0
கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி https://vskdtn.org/2022/01/27/covid-vaccination/ https://vskdtn.org/2022/01/27/covid-vaccination/#respond Thu, 27 Jan 2022 11:28:58 +0000 https://vskdtn.org/?p=11278 கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகளின் கீழ் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) இதற்கு அனுமதி அளித்துள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வயது வந்தோருக்கு மட்டும் தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

]]>
https://vskdtn.org/2022/01/27/covid-vaccination/feed/ 0
   ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுகின்றன:WHO தலைமை விஞ்ஞானி https://vskdtn.org/2021/12/30/vaccine-funtioning-omicron/ https://vskdtn.org/2021/12/30/vaccine-funtioning-omicron/#respond Thu, 30 Dec 2021 10:17:34 +0000 https://vskdtn.org/?p=10242 ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுகின்றன என்று WHO தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் கூறியுள்ளார். பல நாடுகளிலும் ஒமிக்ரான் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் போதிலும் நோயின் பாதிப்பு தீவிரமாக இல்லை, டி செல் எதிர்ப்பு சக்தி ஒமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது, எனவே தடுப்பூசி போடாதவர்கள் போட்டுகொள்வது நல்லது என அவர் ட்வீட்டரில் கூறியுள்ளார்.

]]>
https://vskdtn.org/2021/12/30/vaccine-funtioning-omicron/feed/ 0
கோவிஷீல்டின் மூன்றாவது டோஸ் ஓமிக்ரானுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கிறது: ஆய்வு https://vskdtn.org/2021/12/23/covishield-third-dose-immunity/ https://vskdtn.org/2021/12/23/covishield-third-dose-immunity/#respond Thu, 23 Dec 2021 11:22:28 +0000 https://vskdtn.org/?p=10013 இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்ட அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ், ஓமிக்ரானுக்கு எதிராக  எதிர்ப்பு சக்தியை  உருவாக்குகிறது என்று தடுப்பூசியை உருவாக்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையிலான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

     “தற்போதைய தடுப்பூசிகள் மூன்றாவது டோஸ் பூஸ்டரைத் தொடர்ந்து ஓமிக்ரானிலிருந்து பாதுகாக்கும் திறனைக் கொண்டிருப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் ஜான் பெல் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

     “இந்த முடிவுகள் நாடுகளின் தடுப்பூசி உத்திகளின் ஒரு பகுதியாக மூன்றாம் டோஸ் பூஸ்டர்களைப் பயன்படுத்துவதை ஆதரிக்கின்றன, குறிப்பாக ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் உத்தியாக இவை பயன்படும்  என்றும் அவர் கூறினார்.

]]>
https://vskdtn.org/2021/12/23/covishield-third-dose-immunity/feed/ 0
குரோனா தொற்றிலிருந்து மீண்டு தடுப்பூசி எடுத்து கொண்டால் டெல்டாவை எதிர்க்கும் திறன் கூடுதலாக உள்ளது. https://vskdtn.org/2021/07/06/corona-thorrilirunthu-meendu-thaduposi/ https://vskdtn.org/2021/07/06/corona-thorrilirunthu-meendu-thaduposi/#comments Tue, 06 Jul 2021 12:47:05 +0000 https://vskdtn.org/?p=7405 ‘கோவிட் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு, ஒரு டோஸ் தடுப்பூசி அல்லது இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, டெல்டா வகை உருமாறிய வைரசை எதிர்க்கும் திறன் அதிகம்’ என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் கோவிட் தொற்றில் இருந்து மீண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள்’ என்ற தலைப்பில், ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தெரிவித்து உள்ளதாவது –

இந்தியாவில் கோவிட் 2வது அலையில் டெல்டா வகை வைரஸ்களால் நோய் பரவலின் வேகம் அதிகமாக இருந்தது; லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பி.1.617 வகை வைரஸ்கள் இந்தியாவில் மிகப்பெரிய சுகாதாரப் பிரச்னையை ஏற்படுத்தின. அது மேலும் உருமாற்றம் பெற்று கப்பா, டெல்டா வகை வைரஸ்களாக உருமாற்றம் பெற்றன. அதிலும் டெல்டா வகை வைரஸ்கள் மற்ற உருமாற்ற வைரஸ்களை விட அதிக வீரியம் கொண்டதாக மாறிவருகிறது.

அங்கீகரிக்கப்பட்ட பல தடுப்பூசிகள் டெல்டா வைரசின் வீரியத்தை அழிப்பதில் திறன் குறைவாக இருக்கும் நிலையில், கோவிட் தொற்றில் இருந்து மீண்ட பின், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வைரசிலிருந்து அதிக பாதுகாப்பு கிடைப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

]]>
https://vskdtn.org/2021/07/06/corona-thorrilirunthu-meendu-thaduposi/feed/ 22
அரிசி சாப்பிட்டால் சுகர் அதிகரிக்குமா? https://vskdtn.org/2021/06/30/arisi-sappittaal-sukar/ https://vskdtn.org/2021/06/30/arisi-sappittaal-sukar/#comments Wed, 30 Jun 2021 13:10:06 +0000 https://vskdtn.org/?p=7238 அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள். உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்

எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும் என்று பாப்போம்.

  1. கருப்பு கவுணி அரிசி;

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

  1. மாப்பிள்ளை சம்பா அரிசி:

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

  1. பூங்கார் அரிசி:

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

  1. காட்டுயானம் அரிசி:

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

  1. கருத்தக்கார் அரிசி;

மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

  1. காலாநமக் அரிசி:

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

  1. மூங்கில் அரிசி:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

  1. அறுபதாம் குறுவை அரிசி:

எலும்பு சரியாகும்.

  1. இலுப்பைப்பூசம்பார் அரிசி :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

  1. தங்கச்சம்பா அரிசி:

பல், இதயம் வலுவாகும்.

  1. கருங்குறுவை அரிசி;

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

  1. கருடன் சம்பா அரிசி:

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

  1. கார் அரிசி:

தோல் நோய் சரியாகும்.

  1. குடை வாழை அரிசி:

குடல் சுத்தமாகும்.

  1. கிச்சிலி சம்பா அரிசி:

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

  1. நீலம் சம்பா அரிசி:

இரத்த சோகை நீங்கும்.

  1. சீரகச் சம்பா அரிசி:

அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும்.

  1. தூய மல்லி அரிசி:

உள் உறுப்புகள் வலுவாகும்.

  1. குழியடிச்சான் அரிசி:

தாய்ப்பால் ஊறும்.

  1. சேலம் சன்னா அரிசி:

தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும்.

  1. பிசினி அரிசி:

மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும்.

  1. சூரக்குறுவை அரிசி:

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

  1. வாலான் சம்பா அரிசி:

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

  1. வாடன் சம்பா அரிசி:

அமைதியான தூக்கம் வரும்.

தொகுப்பு: முனைவர் க. தில்லைக்கரசி
kvthillai@gmail.com

]]>
https://vskdtn.org/2021/06/30/arisi-sappittaal-sukar/feed/ 15
40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும் https://vskdtn.org/2021/06/16/40-types-of-greens-and-its-main-medicinal-benefits/ https://vskdtn.org/2021/06/16/40-types-of-greens-and-its-main-medicinal-benefits/#comments Wed, 16 Jun 2021 07:23:26 +0000 https://vskdtn.org/?p=6700  

🌿 அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿 காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿 சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿 பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும்.
🌿 கொடிபசலைக்கீரை – வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿 மஞ்சள் கரிசலை – கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿 குப்பைகீரை – பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿 அரைக்கீரை – ஆண்மையை பெருக்கும்.
🌿 புளியங்கீரை – சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿 பிண்ணாருக்குகீரை – வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿 பரட்டைக்கீரை – பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿 பொன்னாங்கன்னி கீரை – உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿 சுக்கா கீரை – ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿 வெள்ளை கரிசலைக்கீரை – ரத்தசோகையை நீக்கும்.
🌿 முருங்கைக்கீரை – நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿 வல்லாரை கீரை – மூளைக்கு பலம் தரும்.
🌿 முடக்கத்தான்கீரை – கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿 புண்ணக்கீரை – சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿 புதினாக்கீரை – ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿 நஞ்சுமுண்டான் கீரை – விஷம் முறிக்கும்.
🌿 தும்பைகீரை – அசதி, சோம்பல் நீக்கும்.
🌿 முரங்கைகீரை – சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿 முள்ளங்கிகீரை – நீரடைப்பு நீக்கும்.
🌿 பருப்புகீரை – பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿 புளிச்சகீரை – கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿 மணலிக்கீரை – வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿 மணத்தக்காளி கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿 முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿 சக்கரவர்த்தி கீரை – தாது விருத்தியாகும்.
🌿 வெந்தயக்கீரை – மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿 தூதுவலை – ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿 தவசிக்கீரை – இருமலை போக்கும்.
🌿 சாணக்கீரை – காயம் ஆற்றும்.
🌿 வெள்ளைக்கீரை – தாய்பாலை பெருக்கும்.
🌿 விழுதிக்கீரை – பசியைத்தூண்டும்.
🌿 கொடிகாசினிகீரை – பித்தம் தணிக்கும்.
🌿 துயிளிக்கீரை – வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿 துத்திக்கீரை – வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿 காரகொட்டிக்கீரை – மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿 மூக்கு தட்டைகீரை – சளியை அகற்றும்.
🌿 நருதாளிகீரை – ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

]]>
https://vskdtn.org/2021/06/16/40-types-of-greens-and-its-main-medicinal-benefits/feed/ 3