வேளாண்மை – VSKDTN News https://vskdtn.org Fri, 12 Nov 2021 09:56:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இயற்கை வேளாண்மை-3 https://vskdtn.org/2021/11/12/organic-farming-3/ https://vskdtn.org/2021/11/12/organic-farming-3/#respond Fri, 12 Nov 2021 09:56:40 +0000 https://vskdtn.org/?p=9231 பயிர் சுழற்சிமுறை:

நிலத்தில் ஒரே வகையான பயிர்களை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்
இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சமான பயிர் சுழற்சி முறையை நம் முன்னோர்கள் முறையாக செய்தனர். முதல் பருவத்தில் நெல், அடுத்த பருவத்தில் உளுந்து, அதற்கடுத்து பயறுவகைகள் என மாறி மாறி பயிரிட்டனர். பயிர் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடும் என நன்கு தெரிந்திருந்தனர்.
இயற்கை வேளாண்மையில் சம்பா நெல்லுக்கு பிறகு உளுந்து, குறுவை நெல்லுக்கு பிறகு தாளடி நெல், அதற்கு பிறகு சம்பா நெல் அதனூடே சணப்பு இப்படித்தான் மாற்றி மாற்றி பயிர் செய்ய வேண்டும். முதலில் சணப்பு விளைந்த பின் அதன் விதையை நீக்கி மூடாக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறும். இன்று நம் விவசாயிகள் இதே முறையை பின்பற்றுகின்றனர்.
பயிரின் வளத்தை தீர்மானிப்பது மேல் மண்ணாகும், மேலும் நிலத்தை சில நாட்கள் தரிசாக போட்டு வைத்தோமென்றால், களைத்துபோன நிலம் புத்துயிர் பெறுகிறது. பல்லாயிரம் வருடங்களாகவே இந்த யுக்தியை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர், இப்படி மண்ணை தரிசாக போட்டு வைக்கும் போது அம்மண்ணில் கொழிஞ்சி, அவுரி, கரந்தை உள்ளிட்ட செடிகள் முளைத்து ஈரத்தை தக்க வைக்கின்றன, மேலும் பயிர் விளைவிக்க அந்த மண்ணை உழும் பொழுது அச்செடிகளை மடக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறுகின்றது.

கலப்பு பயிர்களின் நன்மை:

பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பலதரப்பட்ட பயிர் வகைகளை கலந்து பயிரிட்டு வந்தனர், இப்படி கலந்து பயிரிடுவதால் ஒரு செடியின் தேவையை மற்றொரு செடி நிறைவேற்றும். எடுத்துக்காட்டாக தக்காளி மற்றும் சணப்பு கலந்து பயிரிட்டனர். இதன் மூலம் தக்காளி மகசூல் கூடியது, சோளத்துடன் தட்டை பயிரை கலந்து பயிரிடும் போது தட்டை பயிரின் நெடி சோளத்தைத் தாக்கும் தண்டு தாக்குதல் நோயைத் தடுக்கும்.
பருத்தியை தாக்கும் காய் புழுக்கள் பருத்தியை தாக்கிவிட்டு ஒரு செடியிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுகின்றது. அடுத்த செடியில் அவை வேறு வித சுவையையும் தன்மையயும் உணருகின்றன, இதனால் அதற்கடுத்த செடிக்கு தாவுகின்றன. அங்கும் அவை வேறு சுவையை உணர்வதால் ஒவ்வாமை நோய் ஏற்பட்டு வயல்களை விட்டே ஓடிவிடுகிறது, மேலும் கலப்பு பயிரான பாசிப்பயிறு, மொச்சை போன்றவற்றை அறுவடை செய்தபின் அவற்றை மூடாக்கி போட்டால் மண்ணிற்கு வளமும் கூடுகின்றது, தென்னை மரத்திற்கு நடுவே பப்பாளி, பாக்கு ஆகியவற்றை கலப்பு பாயிராக நடலாம். இன்று மரபணு மாற்றப்பட்ட பருத்தி, கத்திரியைப்பற்றி பல சர்ச்சைகள் கிளம்பும் இந்நேரத்தில் நம் விவசாயிகள் இயற்கை முறையில் பருத்தியை விளைவிப்பதும், அதன் காய் புழுக்களை கட்டுப்படுத்துவதும் நம் இயற்கை வேளாண்மை முறையால் தான் சாத்தியமாயிற்று. இதுபோல் கலப்புப்பயிர் முறையில் பல நன்மைகள் உள்ளன.

நந்திஹனுமன்
nanthihanuman@gmail.com

]]>
https://vskdtn.org/2021/11/12/organic-farming-3/feed/ 0
கங்கைக்கரையில் இயற்கை வேளாண்மை. https://vskdtn.org/2021/09/08/kangai-karaii-iyarkai-velanmai/ https://vskdtn.org/2021/09/08/kangai-karaii-iyarkai-velanmai/#respond Wed, 08 Sep 2021 06:55:27 +0000 https://vskdtn.org/?p=8475 உத்தர பிரதேச அரசு, கங்கைக்கரையினை ஒட்டிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 21,142 விவசாயிகளுக்கு உதவிகளை வழங்கி சுமார் 14,000 ஹெக்டேர் பரப்பளவில் 700 இயற்கை விவசாய மண்டலங்களை உருவாக்கியுள்ளது. இதனால், விவசாயிகளின் விவசாயச் செலவு குறைந்துள்ளது. உற்பத்தியும் வருமானமும் அதிகரித்துள்ளது. கங்கை நதி மாசடைவதும் குறைந்துள்ளது. இந்த விவசாயிகள் கரிஃப் 2020 மற்றும் ரபி 2020-21 பருவ காலங்களில் இயற்கை விவசாயத்தின் மூலமாக பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர். அந்த பொருட்கள் பேக் செய்யப்பட்டு நல்ல விலையில் விற்கப்பட்டன. இத்தயாரிப்புகள் கண்காட்சிகள், கருத்தரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன. இத்திட்டத்தில் இதுவரை ரூ. 2.76 கோடி மதிப்புள்ள இயற்கை வேளாண் பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் தொடங்கப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க கரிம சான்றிதழ் அமைப்பு அமைத்தல், வெர்மி உரம் தயாரிப்பு, சாண எரிவாயு உற்பத்தி, தாவரங்கள் உணவு பதப்படுத்துதலுக்கு சிறப்பு மானியங்கள், ஆறு மாவட்டங்களில் உணவு பதப்படுத்தும் பூங்காக்கள், பேக்கேஜிங், ஏற்றுமதி ஆராய்ச்சி வசதிகள், உணவு பதப்படுத்துதல் துறையில் ஈடுபடும் சிறுதொழில் அமைப்பதற்கு வட்டியில்லா கடன்கள் வழங்குதல் போன்றவை செயல்படுத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source by – Vijayabharatham Weekly

]]>
https://vskdtn.org/2021/09/08/kangai-karaii-iyarkai-velanmai/feed/ 0
வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு சிறந்த விலைகளை நிர்ணயிப்பது அவசியம் – குடியரசு துணைத் தலைவர். https://vskdtn.org/2021/07/12/velan-urpathi-porutkalukku-sirantha-vilaikalai/ https://vskdtn.org/2021/07/12/velan-urpathi-porutkalukku-sirantha-vilaikalai/#respond Mon, 12 Jul 2021 07:48:31 +0000 https://vskdtn.org/?p=7133 நாட்டில் நிலையான விவசாயத்தை அடைய வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு சிறந்த விலைகளை நிர்ணயிப்பது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.


வரவிருக்கும் சர்வதேச உணவு நெருக்கடி தொடர்பாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், நமது விவசாயிகளுக்கு உரிய காலத்தில் உதவிகளை வழங்கினால், இந்தியா தன்னிறைவு அடைவது மட்டுமல்லாமல், வரும் காலங்களில் உலக நாடுகளுக்கே தேவையான உணவை நம்மால் அளிக்க முடியும்.

குரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளுக்கு இடையேயும் கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியை அதிகரித்தமைக்காக நமது விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்து, சேமிப்புக் கிடங்குகளின் திறன்களை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துவது, வேளாண் பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் உள்ள இடர்பாடுகளைக் களைவது, மற்றும் உணவு பதப்படுத்துதலை ஊக்குவிப்பது போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.

“குறைந்த செலவில் உற்பத்தியை அதிகரிப்பதில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர், மின்சாரம் போன்ற நமது வளங்களை முறையாக நாம் பயன்படுத்த வேண்டும்”, என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

]]>
https://vskdtn.org/2021/07/12/velan-urpathi-porutkalukku-sirantha-vilaikalai/feed/ 0
பாரத பேரரசின் புதிய வேளாண் சட்டத்தினால் ஏற்பட்டுள்ள மாற்றம், வளர்ச்சி. https://vskdtn.org/2021/06/24/bharathiya-arsankathin-puthiya-velaan-sa/ https://vskdtn.org/2021/06/24/bharathiya-arsankathin-puthiya-velaan-sa/#respond Thu, 24 Jun 2021 06:47:58 +0000 https://vskdtn.org/?p=7008 விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக இந்திய ரயில்வே திகழ்கிறது. கிசான் ரயில்களின் அறிமுகம் மூலம் நாடு தழுவிய அணுகல் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. 2.7 லட்சம் டன் சரக்குகளை கிசான் ரயில்கள் மூலம் இதுவரை கொண்டு சென்றுள்ளன.

கிசான் ரயிலின் முக்கிய அம்சங்கள்
* பழங்கள், காய்கறிகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட அழுகக்கூடிய பொருட்களை உற்பத்தியாகும் அல்லது உபரியாக உள்ள பகுதிகளில் இருந்து நுகரும் அல்லது பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறது.

* விரைவான போக்குவரத்தின் காரணமாக குறைவான பாதிப்பு ஏற்படுகிறது.

* தொலைதூர, பெரிய மற்றும் கவர்ச்சிகரமான சந்தைகளுக்கு பொருட்களை அனுப்ப ரயில்வேயின் பரந்து விரிந்த வலைப்பின்னல் விவசாயிகளுக்கு உதவுகிறது.

* பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மானியம் (‘ஆப்பரேஷன் கிரீன் – டாப் டூ டோட்டல்’ திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது).

* பல பொருட்களை, பல இடங்களுக்கு எடுத்து செல்வதால், குறைந்த சரக்குகளுடன் கூடிய சிறிய விவசாயிகளும் தொலைதூர, பெரிய சந்தைகளை அணுக முடிகிறது.

* பயண நேரம் மற்றும் செலவு குறைவதால் (பெரிய நகரங்கள் மற்றும் நுகர்வு மையங்களில் உள்ள) நுகர்வோருக்கு குறைந்த விலையில், பண்ணை பசுமை பொருட்கள் கிடைக்கின்றன.

பாலசுந்தரம்
பாரதீய கிசான் சங்கம்

]]>
https://vskdtn.org/2021/06/24/bharathiya-arsankathin-puthiya-velaan-sa/feed/ 0
இயற்கை வேளாண்மை 2 : பஞ்சகவ்யம் https://vskdtn.org/2021/06/15/6668/ https://vskdtn.org/2021/06/15/6668/#comments Tue, 15 Jun 2021 11:29:21 +0000 https://vskdtn.org/?p=6668 இயற்கை வேளாண்மை 2 :

பஞ்சகவ்யம்

இயற்கை விவசாயம் என்பது பிரபஞ்ச சக்திக்கொண்ட இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வது ஆகும்.நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறை இதுவே ஆகும்.இதன் மூலம் சுற்றுபுறச் சுழலினை மாசுபடாமல் பாதுகாக்கலாம். மேலும் இது உடல் நலத்திற்கும் ஏற்றது. பக்கவிளைவு வராது.

இந்த இயற்கை விவசாயம் மேலும் விளைசல் அடைய பஞ்சகவ்யம் என்ற பிரபஞ்ச சக்திக்கொண்ட உரக் கலவையை பயன்படுத்துவது நலம். இது நம் முன்னோர்களின் கொடை.

இது ஹிந்து சமயக் கோயில்களில் அபிசேகப் பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியத்தில் மருந்துப் பொருளாகவும், இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படுகிறது.

பஞ்ச என்றால் ஐந்து, கவ்யம் என்பது நாட்டுபசுவிலிருந்து கிடைக்ககூடிய பொருள் என்பதாகும்.

பஞ்சகவ்யம் தயாரிப்பு முறை

பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் மூலம் இந்த காவ்யம் தயாரிக்கப்படுகிறது.

தேவையானப் பொருட்கள்

  1. நாட்டுப் பசுவின் சாணம் – 5 கிலோ
  2. நாட்டுப் பசுவின் கோமியம் – 3 லிட்டர்
  3. நாட்டுப் பசுவின் பால் – 2 லிட்டர்
  4. நாட்டுப் பசுவின் தயிர் 2 லிட்டர்
  5. நாட்டுப் பசுவின் நெய் 1 லிட்டர்
  6. கரும்புச்சாறு – 3 லிட்டர்
  7. இளநீர் – 3 லிட்டர்
  8. வெல்லம் – 2 கிலோ

பசுஞ்சாணம் ஐந்து கிலோவுடள் பசு மாட்டு நெய் ஒரு லிட்டர் கலந்து, ஒரு வாளியில் நான்கு நாட்கள் வைத்து தினமும் காலை, மாலை என இரு முறை இதை பிசைந்துவிட வேண்டும். ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாய் அகன்ற மண்பானை தொட்டியில் போட்டு நன்கு கரைத்து, வலையை கொண்டு மூடி நிழலில் வைக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு இருமுறை வீதம் காலையிலும், மாலையிலும் 20 நிமிடங்கள் கிளறிவிட வேண்டும். இது பிராணவாயுவை பயன்படுத்தி, வாழும் நுண்ணுயிரிகளின் செயல் திறனை ஊக்குவிக்கின்றது. இந்த முறையில் முப்பது நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.

பயன்படுத்தும் அளவு

பயிர்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சகாவ்யா தெளிக்கும் முறை வேறுபடுகிறது. பொதுவாக ஒரு ஏக்கர் பயிருக்கு 3 லிட்டரும், மரங்களுக்கு 5 லிட்டரும் ஒருமுறை தெளிப்பிற்கு தேவைப்படும். பஞ்சகவ்யத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி என்ற அளவில் கலந்து 15-30 நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்கு தெளிக்க வேண்டும். பஞ்சகவ்யம் கரைசலை எல்லா தானியப் பயிர்களுக்கும், பூச்செடிகளுக்கும், பழ மரங்களுக்கும் தெளிக்கலாம்.

குறிப்பு: நாட்டுப்பசுவின் பஞ்சகவ்வியம் மட்டுமே பயன் அளிக்கும்.

                                                               -நந்திஹனுமன்
                                                nanthihanuman@gmail.com

]]>
https://vskdtn.org/2021/06/15/6668/feed/ 2
இயற்கை வேளாண்மை 1 https://vskdtn.org/2021/06/14/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-1/ https://vskdtn.org/2021/06/14/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-1/#respond Mon, 14 Jun 2021 05:59:56 +0000 https://vskdtn.org/?p=6589               இயற்கை வேளாண்மை என்பது “இயற்கையின் சுழற்சிகளை மையமாக கொண்டு செயல்படும் வேளாண்மை முறை” இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது தான் இயற்கை வேளாண்மை. காட்டிலுள்ள மரங்களை பார்த்தாலே இயற்கை வேளாண்மையை கற்று கொள்ளலாம். காட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை, உழுவதும் இல்லை, களை எடுப்பதும் இல்லை அவை தானாகவே வளருகின்றன. அதன் நல்வளர்ச்சிக்கு காரண

ம் நல்ல வளமான மண் அங்கு இருப்பதேயாகும். மேலும் மரங்களிலிருந்து விழும் இலை தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடாக்காகி மண்ணிற்கு ஈரப்பதத்தை கொடுகின்றது, இது தான் இயற்கை வேளாண்மையின் அடிப்படை.

        செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக நாம் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம் நீரழிவு, புற்றுநோய், மலட்டுதன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான். இப்படி நச்சு தாக்கிய மண்ணில் விளைந்த காய் கறிகளை உண்ணும் பொழுது நம் உடம்பிற்குள்ளும் நச்சு நுழைந்து விடுகிறது.

         ஆனால் இன்றிருக்கும் நிலையில் நம் மண் வளம் தரமற்றதாகிவிட்டது, மலடாகிய மண்ணை நல்ல மகசூல் கிடைக்கும் மண்ணாக மாற்ற நாம் சில தொழில்நுட்பங்களை இயற்கை வேளாண்மையில் புகுத்த வேண்டும். அவை பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாகும். மேலும் ஒற்றை நாற்று நடவு, மூடாக்கி போடுதல், உரக்குழிகள் வெட்டுதல், பயிர்களுக்கு இடையே காற்றோட்டத்தை பராமரிப்பது, நாட்டு விதைகளை பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பங்களும் இயற்கை வேளாண்மையுடன் இணைந்ததாகும்.

  இயற்கை வேளாண்மையில் முக்கியமானது பயிர் சுழற்சி முறை மற்றும் கலப்பு பயிர்கள் பயிருடுதலாகும்.

நாட்டு மாடுகளை  வளர்ந்து பராமரிப்பதும் இயற்க்கை வேளாண்மையே ஆகும் .

நந்திஹனுமன்
nanthihanuman@gmail.com

 

]]>
https://vskdtn.org/2021/06/14/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-1/feed/ 0
வேளாண் துறையில் மத்திய அரசின் புதிய அறிவிப்பு https://vskdtn.org/2021/06/10/formers-new-plan-with-central-govt/ https://vskdtn.org/2021/06/10/formers-new-plan-with-central-govt/#comments Thu, 10 Jun 2021 09:37:18 +0000 https://vskdtn.org/?p=6432 தோட்டக்கலைத்துறையில் புதிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பழங்கள், காய்கறிகள், வேரில் விளைபவை, பூக்கள் ,தேங்காய், முந்திரி, கோகோ மூங்கில் போன்றவை தோட்டக்கலைத்துறை பயிர்.

மத்திய அரசானது விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்ற வாக்குறுதியை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் தோட்டக்கலைத் துறையில் ஒரு புதிய மாற்றம். கடந்த 31.05.2019 அன்று மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

திட்டத்தின் பெயர் தோட்டக்கலை கிளஸ்டர் மேம்பாட்டுத்திட்டம். தோட்டக்கலை விளை பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம், தோட்டக்கலை கிளஸ்டர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி உள்ளது. இது மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் தேசிய தோட்டக்கலை வாரியத்தால் செயல்படுத்தப்படும். இத்திட்டமானது அடையாளப்படுத்தப்பட்ட கிளஸ்டர்களை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவது ஆகும்.

இதன் மூலம் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 11 மாநிலங்களில் இருந்து 53 கிளஸ்டர்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதன் முதல் படியாக 12 கிளஸ்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 12 கிளட்சஸ்

  1. ஆப்பிள் – ஷோபியன்(J&K) and கின்னூர்(HP)
  2. மாம்பழம் – லக்னௌ (UP), கட்ச் (குஜராத்), மஹபூப்நகர் (தெலுங்கானா)
  3. வாழைப்பழம் – அனந்தபூர் (AP),தேனி (தமிழ்நாடு)
  4. திராட்சை – நாசிக் (மஹாராஷ்ட்ரா)
  5. அன்னாச்சிபழம் – சிபாஹிஜாலா (திரிபுரா)
  6. மாதுளை – சோலாப்பூர் (மஹாராஷ்ட்ரா), சித்ரதுர்கா (கர்நாடகம்)
  7. மஞ்சள் – மேற்கு ஜெயந்தியா ஹில்ஸ், (மேகாலயா).

இவைதான் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளட்சஸ் இடங்களும், பழவகைகளும்.

இவைபோல் தோட்டப்பயிர்களை ஊக்குவிக்க கிளட்சஸ்களை தேர்ந்தெடுத்து திட்டங்கள், வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கப்படும். தற்போது தோட்டக்கலையில் பழங்களை மையமாக வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் புவியியல் – நிலப்பரப்பு அடிப்படையில் பழங்கள் விளைச்சல்களை மேம்படுத்துவதற்கும், தோட்டக்கலை கிளஸ்டர்களின் ஒருங்கிணைந்த மற்றும் சந்தை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிளஸ்டர்கள் அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசாங்கத்தின் பரிந்துரைகளின் பேரில் நியமிக்கப்பட்ட கிளஸ்டர் டெவலப்மென்ட் ஏஜென்சிகள் மூலமாக செயல்படுத்தப்படும்.

இத்திட்டமானது இந்திய தோட்டக்கலை துறை எதிர்நோக்கும் பெரிய பிரச்சனைகளை தீர்க்கவல்லது. விளைச்சலுக்கு முன், விளைச்சல் நேரம், அறுவடைக்கு பின் உள்ள நிர்வாகம், அவைகளை பொதிந்து அனுப்புதல், சந்தைப்படுத்துதல், அங்கீகார பிராண்டிங் போன்ற சவால்களை வெற்றி பெறச் செய்யும் திறனுடன் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் சங்கங்களின் மூலமாக , இந்த திட்டத்திற்கான தீர்வுகளை காண முடியும். இந்த திட்டத்தின் மூலம் பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்ல, விளைபொருட்களை சர்வதேச சந்தையில் அங்கீகாரப்படுத்துவதோடு (Branding) அதனை முதன்மையாக சந்தைப் படுத்துதல், உலகதரத்திற்கு உயர்ந்ததாக ஆக்குதல் இலக்குகளாக தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை.

பாலசுந்தரம்,
மாநில செயலாளர், பாரதீய கிசான் சங்கம், தமிழ்நாடு
ramabalasundaram55@gmail.com.

]]>
https://vskdtn.org/2021/06/10/formers-new-plan-with-central-govt/feed/ 4