ஈரோடு – VSKDTN News https://vskdtn.org Mon, 22 Nov 2021 05:44:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சட்டவிரோத சர்ச் https://vskdtn.org/2021/11/22/illegal-church/ https://vskdtn.org/2021/11/22/illegal-church/#respond Mon, 22 Nov 2021 05:44:49 +0000 https://vskdtn.org/?p=9331 ஈரோடு மாவட்டம் பவானி காளிங்கராயன் பாளையத்தில் திடீரென விக்டரி டிவைன் சர்ச் ஒன்று புதிதாக துவக்கப்பட்டது. எவ்வித அரசு ஒப்புதலும் இல்லாமல் சட்டவிரோதமாக முளைத்த இந்த கிறித்தவ சர்ச் குறித்த தகவல் தெரிந்ததும், இந்து முன்னணி அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்த சென்றனர். இதனை அறிந்த சட்டவிரோத சர்ச் அமைத்த பாதிரிகள், கட்டடத்தை பூட்டிவிட்டு கிளம்பிவிட்டனர்.

]]>
https://vskdtn.org/2021/11/22/illegal-church/feed/ 0
கோவில் நிலத்திற்கு நியமான குத்தகை நிர்ணயிக்க வேண்டும். அறநிலையத்துறை கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு. https://vskdtn.org/2021/09/28/kovil-nilathirkku-niyamaana/ https://vskdtn.org/2021/09/28/kovil-nilathirkku-niyamaana/#respond Tue, 28 Sep 2021 05:35:47 +0000 https://vskdtn.org/?p=8745 கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பெருந்துறையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 4.02 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று, 1982ல் பள்ளி துவங்கப்பட்டது. குத்தகை நிலம் தவிர்த்து, கூடுதலாக 2.50 ஏக்கர் நிலத்தையும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகத்துக்கு, 2018 ஜூலையில், ‘நோட்டீஸ்’ அனுப்பினார். இதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அறநிலையத்துறை சார்பில், வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையை, அறநிலையத்துறை கமிஷனர் பிறப்பிக்க வேண்டும். வாடகை மறு நிர்ணயம்; கூடுதல் வாடகையை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்வதை, கமிஷனர் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

]]>
https://vskdtn.org/2021/09/28/kovil-nilathirkku-niyamaana/feed/ 0
விநாயகர் சதுர்த்தி விழாவின் தடையை நீக்க கோரி இந்து தெய்வங்களிடம் முறையிட்டு இந்து முன்னணி போராட்டம். https://vskdtn.org/2021/09/02/vinakara-sathurthi-vilavin-thadaiyai-neekka-kori-inthu-m-unnani/ https://vskdtn.org/2021/09/02/vinakara-sathurthi-vilavin-thadaiyai-neekka-kori-inthu-m-unnani/#respond Thu, 02 Sep 2021 07:36:43 +0000 https://vskdtn.org/?p=8280 விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடைவிதித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை கைவிட வேண்டி இந்து முன்னனியினரும் பொதுமக்களும் கோவில் முன்பு தெய்வத்திடம் முறையிட்டு போராட்டம்.


ஆண்டுதோறும் இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய நகரங்கள் முதல் சிறு கிராமங்களை வரை மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் வழிபாடு நடத்திய பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டும் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்தது இந்துக்களுக்கு எதிரானது என்றும், அரசின் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டியும் தமிழகமெங்கும் உள்ள கோவில்களில் உள்ள தெய்வத்திடம் இந்து முன்னியினரும் பொதுமக்களும் முறையிடப்போவதாக இந்து முன்னியின் மாநில செயலாளர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கல்லூரிப்பிரிவில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் வாசலில் இந்து முன்னணி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றினைந்நது தெய்வத்திடம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த ஆட்சியாளர்களின் மனதில் மாற்றத்தை ஏறபடுத்தி விழா சிறப்புடன் நடைபெற தெய்வமாகிய நீயே அருள் புரிய வேண்டுமென கடவுளிடம் முறையிட்டனர்.

]]>
https://vskdtn.org/2021/09/02/vinakara-sathurthi-vilavin-thadaiyai-neekka-kori-inthu-m-unnani/feed/ 0