கன்னியாகுமரி – VSKDTN News https://vskdtn.org Mon, 08 Aug 2022 13:57:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பயங்கரவாத எதிர்ப்பு தினம் https://vskdtn.org/2022/08/08/anti-terrorism-day-2/ https://vskdtn.org/2022/08/08/anti-terrorism-day-2/#respond Mon, 08 Aug 2022 13:57:33 +0000 https://vskdtn.org/?p=16541 1993-ம் ஆண்டு சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்புசம்பவத்தில் 11 பேர் பலியாகினர், அதில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பிரம்ம புரம் பகுதியை சேர்ந்த குமரி பலன் என்பவரும் உயிரிழந்தார், இந்த தாக்குதல் நடந்த ஆகஸ்ட் 8  ம் தேதியை ஒவ்வெரு ஆண்டும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக இந்து முன்னணியினர் கடைபிடித்து வரும் நிலையில் இன்று குமரி பாலன் நினைவிடத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் ,தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

]]>
https://vskdtn.org/2022/08/08/anti-terrorism-day-2/feed/ 0
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகள் முன்பு பொங்கலிட்ட பெண்கள் https://vskdtn.org/2022/02/17/atrukkal-bagavthi-amman/ https://vskdtn.org/2022/02/17/atrukkal-bagavthi-amman/#respond Thu, 17 Feb 2022 12:36:04 +0000 https://vskdtn.org/?p=11993 திருவனந்தபுரத்தில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மாசிமாதம் பொங்கல் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று நடந்தது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொது இடத்தில் பொங்கலிட கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. எனவே பெண்கள் அனைவரும் வீடுகளிலேயே பொங்கலிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று காலை 10.50 மணிக்கு கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தந்திரி தீ மூட்டி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அதன்பின்பு வீடுகளில் பெண்கள் பொங்கலிட்டனர். இன்று பிற்பகல் நைவேத்தியம் நடைபெறுகிறது. அப்போது கோவில் பூசாரிகள் வீடுகளுக்கு சென்று சடங்குகளை செய்கிறார்கள்.

]]>
https://vskdtn.org/2022/02/17/atrukkal-bagavthi-amman/feed/ 0
காணி மக்களுக்கான நான்காவது பொங்கல் விழா-வன சக்தி சங்கமம் நடத்தியது https://vskdtn.org/2022/01/11/kani-vana-sakthi-sangamam/ https://vskdtn.org/2022/01/11/kani-vana-sakthi-sangamam/#respond Tue, 11 Jan 2022 06:51:51 +0000 https://vskdtn.org/?p=10767 கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அடுத்த 48 மலை கிராமங்களில் வசித்து வரும் காணி சமுதாய மக்களுக்கான பொங்கல் விழா ஆற்றூர் என் வி கே எஸ் பள்ளியில் நடைபெற்றது. வன சக்தி சங்கமம் நான்காவது ஆண்டாக நடத்தும் இவ்விழா ஜனவரி 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 8ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி வரை நடைபெற்றது.
சுமார் 1500 காணி சமுதாய மக்கள் குடும்பத்தோடு இதில் கலந்து கொண்டார்கள். விழாவில் விளக்கு பூஜை, சிறப்பு யாகம், பொங்கல், வயது வாரி குழு சந்திப்பு நடைபெற்றது. காணி சமுதாய மக்களுக்காக பொங்கல் விருந்து, பொங்கல் பானை, பொங்கல் போடுவதற்கான பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
4 ஆண்டு தொடர் முயற்சியால் இந்த மலைவாழ் மக்களில் மதம் மாறி சென்ற 40 சதவிகித மக்களில் 20 சதவிகித மக்கள் தாய் மதம் திரும்பியுள்ளனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காணி சமுதாய மக்கள் ‘மதம் மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்’.

சேவா பாரதியின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் திரு கே. ராஜேஸ்வரன்ஜி, என் வி கே எஸ் பள்ளியின் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணகுமார்ஜி,காளி மலை அறக்கட்டளை உறுப்பினர் திரு.ரவிக்குமார்ஜி,ஹிந்து தர்ம வித்யாபீடம் வெள்ளிமலை ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மஹாராஜ்,ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் க்ஷேத்ர சங்ககாலக் மானனீய வன்னியராஜன் ஜி

குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திரு.R ராஜாராம்ஜி, திரு.C ராஜேந்திரன்ஜி, ஆர்எஸ்எஸ்-ன் தென்தமிழ்நாடு செயலாளர் திரு. பவீதரன்ஜி மற்றும் தென்தமிழ்நாடு துணை அமைப்பாளர் திரு. பிரஷோப குமார்ஜி, தென்தமிழ்நாடு மக்கள் தொடர்பு பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன்ஜி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

மலைப்பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்ற மாணவிக்கு ஐ.ஏ.எஸ் படிப்பதற்கான உதவித்தொகை விழாவில் வழங்கப்பட்டது.

]]>
https://vskdtn.org/2022/01/11/kani-vana-sakthi-sangamam/feed/ 0
குமரியில் ஹிந்துக்கள் கைது https://vskdtn.org/2021/11/25/hindus-arrested-in-kumari/ https://vskdtn.org/2021/11/25/hindus-arrested-in-kumari/#respond Thu, 25 Nov 2021 10:06:15 +0000 https://vskdtn.org/?p=9391 குமரி மாவட்டம் மண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில் சில மாதங்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. அதற்கு பிறகு அதனை சரி செய்ய, பாரம்பரிய முறைப்படி தெய்வ பிரசன்னம் பார்த்து, வாஸ்து பூஜை செய்த பிறகே திருப்பணிகளை ஆகம விதிப்படி முழுமையாக செய்ய வேண்டும் என்பது மரபு. ஆனால் அப்படி இப்பணிகளை மேற்கொண்டால் சுமார் 3 கோடி செலவாகும். இதனால் ஆகம விதிகளை மீறி, வெறும் 95 லட்ச ரூபாய் செலவில் மேற்கூரையை மட்டும் மாற்றி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்றார். இதனை முன்னிட்டு கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. கோயிலில் ஆகம விதிகளை மீறி மேற்கூரை அமைக்கக்கூடாது என போராடிய விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். முறைப்படி என்று இதன் மூலம் தி.மு.க ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2021/11/25/hindus-arrested-in-kumari/feed/ 0
விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றன. https://vskdtn.org/2021/11/06/sri-naradhar-award-3/ https://vskdtn.org/2021/11/06/sri-naradhar-award-3/#respond Sat, 06 Nov 2021 13:10:20 +0000 https://vskdtn.org/?p=9179 உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக நாகர்கோயிலில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், கவிஞர் Dr. சுதே கண்ணன் ஆசிரியர் ஆனந்தம் மாத இதழ் மற்றும் குமரி டிவி, ஸ்ரீ I அருள் கண்ணன்  நிருபர் பாலிமர் டிவி , ஸ்ரீ M. ஜெயபோஸ் கட்டுரையாளர் & எழுத்தாளர் ஸ்ரீ N. சுவாமிநாதன் பத்திரிகை எழுத்தாளர் ஹிந்து காமதேனு.  ஸ்ரீ M.N ஹரிஷ் YouTuber ஆகியோர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது – 2021 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் . ஆல் இந்தியா ரேடியோ நாகர்கோயில் ஸ்ரீ மங்காவிளை D. ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.   அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் ஸ்ரீ Dr. S. சுப்பிரமணியபிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்  ஆர்எஸ்எஸ் தென்பாரத சேவை பொறுப்பாளர் ஸ்ரீ பத்மகுமார் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை பின்தொடர்ந்து “விஜயபாரதம்” தீபாவளி மலர்  வெளியீடப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில்  தென்பாரத ஊடகத்துறை பொருப்பாளர் ஸ்ரீ  ஸ்ரீ ராம் ஜி, தென்தமிழக ஊடகத்துறை  பொருப்பாளர் ஸ்ரீ மோகன் ஜி மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://vskdtn.org/2021/11/06/sri-naradhar-award-3/feed/ 0
குமரியில் கோயில் சிலை உடைப்பு https://vskdtn.org/2021/09/22/kumariyil-koyil-silai-udaippu/ https://vskdtn.org/2021/09/22/kumariyil-koyil-silai-udaippu/#respond Wed, 22 Sep 2021 06:23:40 +0000 https://vskdtn.org/?p=8686

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அடுத்துள்ள ராமன்புதூரில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஒன்று உள்ளது. கோயில் இருந்த நிலத்தை விற்ற அதன் உரிமையாளர் மொத்தமுள்ள 71 சென்ட் நிலத்தில் கோயில் உள்ள மூன்று சென்ட் நிலம், அதிலுள்ள விக்ரகங்களை தவிர்த்து நிலத்தை விற்றுள்ளார். அந்த நிலத்தை கிறிஸ்தவரான நத்தானியேல் என்பவர் விலைக்கு வாங்கினார். பின்னர், அந்த நிலத்தில் உள்ள கோயில் சிலைகளை நத்தானியேலும் அவருடைய குண்டர்களும் உடைத்து உள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவலர்கள் நத்தானியேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அப்பகுதிக்கு சென்ற மாவட்ட பா.ஜ.க தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நூறாண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வணங்கி வந்துள்ள இக்கோயிலையும் சாமி சிலைகளையும் உடைத்த கிறிஸ்தவ மத வெறியர் நத்தானியலையும் குண்டர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்காக குமரி மாவட்ட பா.ஜ.க போராடும் என்று பா.ஜ.க மாவட்ட நிர்வாகி தெரிவித்தார்.

Source by; Vijayabharatham Weekly

]]>
https://vskdtn.org/2021/09/22/kumariyil-koyil-silai-udaippu/feed/ 0
குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம். https://vskdtn.org/2021/09/08/kuraintha-patsa-aatharvu-vilaiyai-sattamaka/ https://vskdtn.org/2021/09/08/kuraintha-patsa-aatharvu-vilaiyai-sattamaka/#respond Wed, 08 Sep 2021 13:03:31 +0000 https://vskdtn.org/?p=8498 பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம் மாவட்ட ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர், ஸ்ரீ இராம.பாலசுந்தரம்ஜி, மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ பூதநாதன்ஜி திரு.C.வேலாயுதன் முன்னாள் MLA மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://vskdtn.org/2021/09/08/kuraintha-patsa-aatharvu-vilaiyai-sattamaka/feed/ 0
வீட்டில் சர்ச் நடத்தி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மத போதகர் கைது. https://vskdtn.org/2021/07/14/veettil-church-nadathi-penkalai-vipasarathil/ https://vskdtn.org/2021/07/14/veettil-church-nadathi-penkalai-vipasarathil/#comments Wed, 14 Jul 2021 12:16:03 +0000 https://vskdtn.org/?p=7586 வீட்டில் சர்ச் நடத்தி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கிறிஸ்தவ போதகர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.


கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்டி மங்காட்டை சேர்ந்தவர் லால் ஷைன் சிங் மத போதகராக இருந்து வருகிறார். அவர் தனது வீட்டில் ‘பெடரல் சர்ச் ஆப் இந்தியா’ என்ற பெயரில் பிரார்த்தனை மையம் நடத்தி வருகிறார். இங்கு சந்தேகத்துக்குரிய வகையில் பெண்கள், ஆண்கள் வந்து செல்வதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையில் 19 வயது பெண்ணை தாயே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிந்தது. தொடர்ந்து லால் ஷைன்சிங் மற்றும் பனங்காலையை சேர்ந்த ஷைன் 34, மேக்கோடு ஷிபின் 34, ஞாறான்விளை ராணி 55, சுகந்தி 40 என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 19 வயது இளம் பெண் உட்பட இரண்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் நித்திரவிளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

]]>
https://vskdtn.org/2021/07/14/veettil-church-nadathi-penkalai-vipasarathil/feed/ 20