சென்னை – VSKDTN News https://vskdtn.org Sat, 26 Feb 2022 11:02:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ராமாபுரம் ஏரியில் 90 சதவீதம் ஆக்கிரமிப்பு;அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு https://vskdtn.org/2022/02/26/ramapuram/ https://vskdtn.org/2022/02/26/ramapuram/#respond Sat, 26 Feb 2022 10:56:18 +0000 https://vskdtn.org/?p=12355 சென்னை, ராமாபுரம் ஏரி 90 சதவீதம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமாபுரம் ஏரியின் அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

]]>
https://vskdtn.org/2022/02/26/ramapuram/feed/ 0
கூவம் ஆற்றில் தினமும் கலக்கும் 3.6 கோடி லிட்டர் சாக்கடை நீர்: அதிகாரிகள் மெத்தனம் https://vskdtn.org/2022/02/16/koovam-river/ https://vskdtn.org/2022/02/16/koovam-river/#respond Wed, 16 Feb 2022 10:20:27 +0000 https://vskdtn.org/?p=11956 ஆவடியில், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினசரி வெளியேறும் 3.6 கோடி லிட்டர் தண்ணீர் கருமை நிறத்தில் கூவம் ஆற்றில் கலப்பதால், மேலும் மாசடையும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி எல்லை வரை கூவம் ஆறு தெளிந்த நீராக வருகிறது. ஆவடி மாநகராட்சியை கடந்து செல்லும் போது, சாக்கடை போல கருமை நிறமாக மாறி மாசடைந்து, சென்னை மாநகருக்குள் செல்கிறது. இந்நிலையில், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கால், கூவம் ஆறு மேலும் மாசடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

]]>
https://vskdtn.org/2022/02/16/koovam-river/feed/ 0
பொறியாளர் தாக்கப்பட்ட விவகாரம்: திமுக எம் எல் ஏ மீது காவல் துறையிடம் புகார் https://vskdtn.org/2022/01/29/attack-on-engineer-dmk-mla/ https://vskdtn.org/2022/01/29/attack-on-engineer-dmk-mla/#respond Sat, 29 Jan 2022 10:07:14 +0000 https://vskdtn.org/?p=11363 மாநகராட்சி இளநிலை பொறியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ., சங்கர் மீது போலீசில் சென்னை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

நேற்று முன்தினம்(ஜன.,27) அதிகாலை சென்னை திருவொற்றியூர், 10வது வார்டு, நடராஜன் தோட்டம் பகுதியில், தார் சாலை போடும் பணி நடந்தது. அப்போது, எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்துள்ளனர்.தார் சாலை தரம் குறித்து, கேள்வி எழுப்பியபோது, மாநகராட்சி அதிகாரிகள் – எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள், இளநிலை பொறியாளர், ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, எம்.எல்.ஏ., சங்கர் மீது புகாரளித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இளநிலை பொறியாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2022/01/29/attack-on-engineer-dmk-mla/feed/ 0
கொரோனா தொற்று: சென்னையில் 587 தெருக்கள் முடக்கம் https://vskdtn.org/2022/01/19/chennai-containment-zone/ https://vskdtn.org/2022/01/19/chennai-containment-zone/#respond Wed, 19 Jan 2022 11:17:29 +0000 https://vskdtn.org/?p=11032 தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா நோய் தொற்று பெருகி வரும் நிலையில் 587 தெருக்கள் முடக்கப்பட்டு கட்டுபடுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. “சென்ற முறை போல வீடுகளை நாங்கள் முடக்கவில்லை. 10-25 பாதிக்கப்பட்ட நபர்களை உடைய தெருக்களை மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்திருகின்றோம்” என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

]]>
https://vskdtn.org/2022/01/19/chennai-containment-zone/feed/ 0
சென்னையில் கன மழை: மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு https://vskdtn.org/2021/12/31/heavy-rain-in-chennai/ https://vskdtn.org/2021/12/31/heavy-rain-in-chennai/#respond Fri, 31 Dec 2021 10:49:35 +0000 https://vskdtn.org/?p=10348       சென்னையில் வியாழன் மாலை பெய்த கன மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. மின்சாரம் தாக்கி 3 பேர் உயிர் இழந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் அலுவலகங்கள்,பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 24×7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

]]>
https://vskdtn.org/2021/12/31/heavy-rain-in-chennai/feed/ 0
சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்-மத்திய அரசு அறிவுறுத்தல் https://vskdtn.org/2021/12/30/restrictions-in-chennai/ https://vskdtn.org/2021/12/30/restrictions-in-chennai/#respond Thu, 30 Dec 2021 11:33:09 +0000 https://vskdtn.org/?p=10275 சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை  அறிவுறுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணனுக்கு  அனுப்பி உள்ள கடிதத்தில்  இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்,சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தவேண்டும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2021/12/30/restrictions-in-chennai/feed/ 0
Foxconn நிறுவன உற்பத்தி மீண்டும் துவங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு https://vskdtn.org/2021/12/29/foxconn-to-run/ https://vskdtn.org/2021/12/29/foxconn-to-run/#respond Wed, 29 Dec 2021 11:06:40 +0000 https://vskdtn.org/?p=10225 Foxconn-சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில்  உள்ள இந்நிறுவனம் Apple நிறுவனத்தின் பொருட்களை assembly செய்யும் ஒரு நிறுவனம். தரமான உணவு, வசிக்கும் இடங்களை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இதன் தற்காலிக பணியாளர்கள் சென்ற வாரம் போராட்டம் நடத்தினர். அவர்களுடைய கோரிக்கைகள் நிர்வாகம் ஏற்றதை அடுத்து இந்த நிறுவனத்தின் உற்பத்தி மீண்டும் துவங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

]]>
https://vskdtn.org/2021/12/29/foxconn-to-run/feed/ 0
மகாகவி பாரதிக்கு இசை அஞ்சலி https://vskdtn.org/2021/12/13/bharathi-140-birth-day/ https://vskdtn.org/2021/12/13/bharathi-140-birth-day/#respond Mon, 13 Dec 2021 12:09:18 +0000 https://vskdtn.org/?p=9661            மகாகவி சுப்ரமணிய பாரதியின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம், சென்னை பாரதியார் இல்லத்தில், 11 டிசம்பர் 2021 சனிக்கிழமை அன்று ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் மகாகவி படைப்புகளில் இருந்து இசைக் குறியீடு வெளியிடப்பட்டு அவருக்கு இசையஞ்சலி செலுத்தப்பட்டது.

            இசையமைப்பாளர் கலைமாமணி ஸ்ரீ அனில் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற்றினார். அவர் பேசுகையில் “நம் தேசத்தின் மீது பாரதி அபார நம்பிக்கை கொண்டிருந்தார்” என்று கூறினார், மேலும் ஒன்றிணைவதும், ஒன்றிணைந்து செயல்படுவதும் மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது, என்றும் குறிப்பிட்டார்.

           ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய இணைச் செயலாளர் ஸ்ரீ ராம்தத் சக்ரதர் ​​தனது உரையில் மகாகவியின் பெருமையைப் போற்றினார்.

             ஸ்ரீ அனில் சீனிவாசன் இசையமைப்பாளர் மற்றும் ஆர்எஸ்எஸ் அகில இந்திய இணைச் செயலாளர் ஸ்ரீ ராம்தத் சக்ரதர் ​​ஆகியோர் ‘கவி பாரதி’ இசைக் குறிப்பை வெளியிட்டனர்.

ஸ்வயம்சேவகர்கள் மகாகவிக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

]]>
https://vskdtn.org/2021/12/13/bharathi-140-birth-day/feed/ 0
கனல் கண்ணன் கருத்து. https://vskdtn.org/2021/09/08/kanal-kannan-karuthu/ https://vskdtn.org/2021/09/08/kanal-kannan-karuthu/#respond Wed, 08 Sep 2021 07:04:38 +0000 https://vskdtn.org/?p=8478 திரைத்துறை சண்டைப் பயிற்சி இயக்குனர் கனல் கண்ணன், ‘விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி மறுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது கண்டிக்கப்பட வேண்டியது. அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சத்ரபதி வீரசிவாஜி, பாலகங்காதர திலகர் எல்லாம் விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாக நடத்தியுள்ளனர். ஹிந்துக்களுக்கு மட்டும் ஏன் இந்த தடை? ஜல்லிகட்டுக்கு கொடி பிடித்தவர்கள் விநாயகர் சதுர்த்தி தடையை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. ஹிந்துக்கள் தேசத்தில் ஹிந்து பண்டிகை கொண்டாட இத்தனை இடர்களா? என்று எண்ணும்போது வேதனை அளிக்கிறது. இது நம் உரிமை, நமது பெருமை. இன்றைய சூழலில், இறையருள் ஒன்றுதான் நம்மையும் நம் நாட்டையும் காக்கும். ஒன்று படுவோம், உறுதிமொழி எடுப்போம்’ என தெரிவித்துள்ளார்.

Source by – Vijayabharatham Weekly

]]>
https://vskdtn.org/2021/09/08/kanal-kannan-karuthu/feed/ 0
தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் https://vskdtn.org/2021/09/01/tamilaka-arasukku-ethiraka-porattam/ https://vskdtn.org/2021/09/01/tamilaka-arasukku-ethiraka-porattam/#respond Wed, 01 Sep 2021 07:22:08 +0000 https://vskdtn.org/?p=8261 தமிழக அரசு, விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் திருமேனி வைத்து வழிபட அனுமதி அளிக்காததால் ஆயிரக்கணக்கான விநாயகர் திருமேனி செய்து வருகின்ற பொம்மைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து சென்னையில் அந்தத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் விநாயகரை கொண்டு சென்று போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறை கைது செய்தது.

Source by; Vijayabharatham Weekly

]]>
https://vskdtn.org/2021/09/01/tamilaka-arasukku-ethiraka-porattam/feed/ 0