தஞ்சாவூர் – VSKDTN News https://vskdtn.org Wed, 30 Mar 2022 06:26:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கொடியேற்றத்துடன் தொடங்கிய தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா https://vskdtn.org/2022/03/30/chithirai-festival-at-the-tanjore-big-temple-which-started-with-the-flag-hoisting/ https://vskdtn.org/2022/03/30/chithirai-festival-at-the-tanjore-big-temple-which-started-with-the-flag-hoisting/#respond Wed, 30 Mar 2022 06:26:55 +0000 https://vskdtn.org/?p=13643 தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


May be an image of 6 people, people standing, temple and outdoorsஉலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கடந்த மாதம் 7 ஆம் தேதி இதற்கான பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

No photo description available.முன்னதாக, கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது சிவாலய வாத்தியங்கள் முழங்க திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இன்று மாலை 6.30 மணியளவில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. நாளை காலை பல்லக்கும், மாலையில் சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடக்க உள்ளது.

May be an image of 4 people and outdoorsஇதனைத் தொடர்ந்து நாள் தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்று, வரும் ஏப்ரல் 13ந் தேதி காலை 6.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் தியாகராஜர், ஸ்கந்தர், கமலாம்பாள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. அதே நேரத்தில் அதிகாலை 5.45 மணிக்கு மேல் தியாகராஜசுவாமி அம்பாள் தேரில் எழுந்தருள உள்ளார். பின்னர் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

 

]]>
https://vskdtn.org/2022/03/30/chithirai-festival-at-the-tanjore-big-temple-which-started-with-the-flag-hoisting/feed/ 0
திருவிடைமருதூர் கோவிலில் பத்ரகிரியார் சிலை உடைப்பு-பக்தர்கள் அதிர்ச்சி https://vskdtn.org/2022/02/17/thiruvidai-marudhur-idol-breaking/ https://vskdtn.org/2022/02/17/thiruvidai-marudhur-idol-breaking/#respond Thu, 17 Feb 2022 12:30:32 +0000 https://vskdtn.org/?p=11989 தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுாரில் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள  சித்தர் பத்ரகிரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது இது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல நுாற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர் பட்டினத்தாரின் சீடர் பத்ரகிரியார். திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரர் கோவிலின், கிழக்கு கோபுரம் அருகே குகை போன்ற பகுதியில் பட்டினத்தாருக்கு சிலை உண்டு. இதே போல் மேற்கு கோபுரம் அருகே பத்ரகிரியாருக்கு நான்கரை அடி உயரமும், 350 கிலோ எடையும் கொண்ட சிலை உள்ளது. 14ம் தேதி, பத்ரிகிரியார் சிலை உடைக்கப்பட்ட விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இது நல்லதல்ல என்று பக்தர்கள் கூறியுள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இது குறித்து கோவில் நிர்வாகம், ஆதீனகர்த்தர் அம்பலவான தேசிகர், போலீஸ் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு விசாரித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் கண்ணன் என்பவர், போலீசில் புகார் கொடுத்தார். அடுத்த நாள், திருவிடைமருதுார் வந்த அண்ணாமலை, உடைந்த சிலையை பார்வையிட்டார். கோவில் நிர்வாகி கூறுகையில், ”போலீசில் புகார் அளித்து உள்ளோம். கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசாரிடம் கொடுத்துள்ளோம்,” என்று கூறியுள்ளார்.

]]>
https://vskdtn.org/2022/02/17/thiruvidai-marudhur-idol-breaking/feed/ 0
தஞ்சாவூரில் என்.ஐ.ஏ ரைடு https://vskdtn.org/2022/02/12/nia-raid/ https://vskdtn.org/2022/02/12/nia-raid/#respond Sat, 12 Feb 2022 10:34:29 +0000 https://vskdtn.org/?p=11798 தஞ்சாவூரில் மாவட்டத்தில் மூன்று இடங்களில் இன்று என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் அருகே மகர்நோம்புச் சாவடி தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த அப்துல்காதர் மற்றும் முகம்மது யாசின் ஆகியோர் வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை (NIA )அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இவர்கள் இருவரும் சமூக ஊடகத்தில் இந்து மதத்திற்கு எதிராக தவறான தகவல்களை பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும், கிலாபத் அமைப்பின் தலைவர் மன்னார்குடி பாபா பக்ருதீன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீட்டில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://vskdtn.org/2022/02/12/nia-raid/feed/ 0
ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் பள்ளி மாணவி தற்கொலை https://vskdtn.org/2022/02/07/little-rose-student/ https://vskdtn.org/2022/02/07/little-rose-student/#respond Mon, 07 Feb 2022 08:50:30 +0000 https://vskdtn.org/?p=11595 தஞ்சாவூரில் சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் திட்டியதால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
ஒரத்தநாட்டில் உள்ள லிட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுமியை கணித ஆசிரியர் சசிகுமார் வெள்ளிக்கிழமை வகுப்புத் தோழர்கள் முன்பாகத் கணக்கை சரிவரச் செய்யவில்லை என்று திட்டியதால் மனமுடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
வீடு திரும்பிய சிறுமி, கணித ஆசிரியர் திட்டியதால் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தனது தோழிகளுக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்பியுள்ளார்.
பின்னர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமியின் நண்பர்கள் அந்த செய்தியை அவரது பெற்றோருக்கும், வளைகுடா நாட்டில் பணிபுரியும் அவரது தந்தைக்கும் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், தகவல் கிடைத்ததும், சிறுமியின் மாமா சிவக்குமார், ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://vskdtn.org/2022/02/07/little-rose-student/feed/ 0
துப்பு கொடுத்தால் சன்மானம் https://vskdtn.org/2021/11/17/reward-for-giving-clues/ https://vskdtn.org/2021/11/17/reward-for-giving-clues/#respond Wed, 17 Nov 2021 06:43:43 +0000 https://vskdtn.org/?p=9278 கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தன் பகுதியில் முஸ்லிம்கள் செய்யும் மதமாற்றத்தை தட்டி கேட்டதால் முஸ்லிம் பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தேசம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர். திருபுவனத்தைச் சேர்ந்த ரஹ்மான் சாதிக், முகமது அலி ஜின்னா, கும்பகோணத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத், பாபநாசத்தைச் சேர்ந்த புஹானுத்தீன், திருவிடைமருதூரைச் சேர்ந்த சாஹுல் ஹமீது மற்றும்நஃபில் ஹாசன் ஆகிய இந்த 5 பேரின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ள தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ, இந்த பயங்கரவாதிகளை பற்றி தகவல் கொடுத்தால் ஒரு நபருக்கு தலா ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 5 லட்சம் சன்மானத்தை அறிவித்து உள்ளது.

]]>
https://vskdtn.org/2021/11/17/reward-for-giving-clues/feed/ 0
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு. https://vskdtn.org/2021/08/11/tanilakathil-sirantha-maanakaraatsiyaaka-thajai/ https://vskdtn.org/2021/08/11/tanilakathil-sirantha-maanakaraatsiyaaka-thajai/#comments Wed, 11 Aug 2021 09:43:13 +0000 https://vskdtn.org/?p=7916 தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சிக்கான விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வாகியுள்ளது.


தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் சிறப்பு விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ரூபாய் 25 லட்சம் மற்றும் விருதை சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

]]>
https://vskdtn.org/2021/08/11/tanilakathil-sirantha-maanakaraatsiyaaka-thajai/feed/ 1
ஊராட்சி அலுவலகத்தில் உதயசூரியன் சின்னம்; அரசு அலுவலகமா? அல்லது தி.மு.க., அலுவலகமா?. https://vskdtn.org/2021/07/13/dmk-with-panjayathu-ofc-issue/ https://vskdtn.org/2021/07/13/dmk-with-panjayathu-ofc-issue/#respond Tue, 13 Jul 2021 10:06:28 +0000 https://vskdtn.org/?p=7563 ஊராட்சி அலுவலக முகப்பில் உதயசூரியன் படம் வரைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அப்பகுதியில் உள்ள நபர்கள் புகார் அளித்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பெரும்பாண்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பாஸ்கர். அவர் கும்பகோணம் வடக்கு தி.மு.க., ஒன்றிய செயலராகவும் உள்ளார். தற்போது, பஞ்சாயத்து அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. பஞ்சாயத்து அலுவலகத்தின் முகப்பில், புதிதாக அமைக்கப்பட்ட, ‘போர்டிகோ’ கூரையில், தி.மு.க.,வின் சின்னமான உதயசூரியன் வரையப்பட்டுள்ளது.

இதனால், அரசுக்கு சொந்தமான அலுவலகமா அல்லது தி.மு.க., அலுவலகமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுகவின் அராஜக போக்கு ஒவ்வொன்றாக வெளி வருகிறது.

]]>
https://vskdtn.org/2021/07/13/dmk-with-panjayathu-ofc-issue/feed/ 0
ராஜேந்திர சோழன் கட்டிய பழமை வாய்ந்த கோவிலின் நிலை தற்போது இந்த நிலையா? https://vskdtn.org/2021/07/03/rajendra-solan-kattiya-kovil/ https://vskdtn.org/2021/07/03/rajendra-solan-kattiya-kovil/#respond Sat, 03 Jul 2021 09:28:49 +0000 https://vskdtn.org/?p=7346 இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள வருமானம் இல்லாத கோவில்களையும், சொற்ப வருமானம் உள்ள கோவில்களையும் பெருமளவில் கண்டு கொள்வது இல்லை. அது தற்போது தஞ்சாவூர் அருகேவும் கண்கூட காண நேரிடுகிறது.


தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மானம்பாடி எனும் சிற்றூரில், சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராஜேந்திர சோழன் காலத்திய கோவில் ஒன்று அமைந்துள்ளது.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோவிலின் பெயர் நாகநாதசாமி கோவில் என அழைக்கப்படுகிறது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இக்கோவில் மதில் சுவர் இடித்து தள்ளப்பட்டது. பின்னர் சில நல்லுள்ளங்களின் முயற்சியில் இது மீண்டும் கட்டப்பட்டது. எந்த பராமரிப்பும் இல்லாமல் சிதிலமடைந்து இருக்கும் இக்கோவிலை முழுவதும் அப்புறப்படுத்தும் விதமாக மீண்டும் சாலை விரிவாக்க பணிகள் துவங்கி உள்ளது.

நாட்டின் வரலாற்று பொக்கிஷம் என்ற அக்கறை கூட இல்லாமல். அறநிலையத்துறை மிகவும் அலட்சியமாக இருப்பதாகவும். பழமை மாறாமல் அக்கோயிலை புனரமைத்து தர வேண்டும் எனவும் ஹிந்துக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

]]>
https://vskdtn.org/2021/07/03/rajendra-solan-kattiya-kovil/feed/ 0