திருச்சிராப்பள்ளி – VSKDTN News https://vskdtn.org Fri, 13 Jan 2023 05:38:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா https://vskdtn.org/2023/01/13/swami-vivekananda-jayanti-and-equipment-donation-ceremony-for-hospitals/ https://vskdtn.org/2023/01/13/swami-vivekananda-jayanti-and-equipment-donation-ceremony-for-hospitals/#respond Fri, 13 Jan 2023 05:29:57 +0000 https://vskdtn.org/?p=19667 திருச்சி சாதனா அறக்கட்டளை மற்றும் சேவா இன்டர்நேஷனல் இணைந்து திருச்சி சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய 24 மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் பயன்பெறும் விதத்தில் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்ர் வழங்கும் விழாவானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் திரு மோகனசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார் சிறப்புரை திரு ஸ்ரீராம் ஆர்.எஸ்.எஸ் தென்பாரத செயலாளர் ஊடகத்துறை அவர்கள் வழங்கினர் உடன் ஆர்.எஸ்.எஸ் திருச்சி மாவட்ட தலைவர் திரு சம்பத் ஆர்.எஸ்.எஸ் திருச்சி நகர தலைவர் திரு ரஜினிகாந்த் சாதனா அறக்கட்டளை உறுப்பினர் திரு சீனிவாசன் அவர்கள் உடன் இருந்தனர் திருச்சி சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஸ்ரீராம் அவர்கள் சுவாமி விவேகானந்தர் இந்த தேசத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை எடுத்துரைத்து சேவையின் முக்கியத்துவத்தை கூறினார்

]]>
https://vskdtn.org/2023/01/13/swami-vivekananda-jayanti-and-equipment-donation-ceremony-for-hospitals/feed/ 0
சாதனா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஆசிரமம் அறக்கட்டளை நடத்திய சான்றிதழ் வழங்கும் விழா. https://vskdtn.org/2022/07/05/sadhana-foundation-and/ https://vskdtn.org/2022/07/05/sadhana-foundation-and/#respond Tue, 05 Jul 2022 10:08:45 +0000 https://vskdtn.org/?p=15591
திருச்சி ஜூலை 3 சாதனா அறக்கட்டளை வளாகத்தில் மருந்தில்லா மருத்துவம் (நீரோ தெரபி)ஆறு மாத கால பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சாதனா அறக்கட்டளையின் அறக்கட்டளையின் தலைவர் அரங்க வரதராஜன், செயலாளர் ஸ்ரீ வெங்கடேசன், பாரதிய கிசான் சங்கம். ஸ்ரீ ஸ்ரீகணேசன் ஜி மேலும் ஸ்ரீ தன்வந்திரி ஆசிரமம் அறக்கட்டளை டிரஸ்டி மூத்த நீரோ மருத்துவர் ஸ்ரீ சுந்தரராஜன் மற்றும் மூத்த நீரோ மருத்துவர் ஸ்ரீ சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியை திருமதி. தில்லையம்மாள் தொகுத்து வழங்கினார்கள்.
]]>
https://vskdtn.org/2022/07/05/sadhana-foundation-and/feed/ 0
பி.எம்.எஸ் கேள்வி https://vskdtn.org/2022/03/23/bms-2/ https://vskdtn.org/2022/03/23/bms-2/#respond Wed, 23 Mar 2022 12:11:17 +0000 https://vskdtn.org/?p=13347 திருச்சியில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பி.ஹெச்.இ.எல் நிறுவனம் எண்ணூர் அனல்மின் நிலையத்தை ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 4.8 கோடி என்ற செலவில் கட்டிக்கொடுத்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசு பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள 660 வாட் அனல் மின்நிலையத்தை பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தால் ரூ. 3,160 கோடியில் கட்டி முடித்து ஒப்படைக்க முடியும். ஆனால், தமிழக அரசு பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை ரூ. 4,442.75 கோடிக்கு கொடுத்துள்ளது ஏன்? என கேட்டுள்ளது பி.எம்.எஸ்சின் பி.ஹெச்.இ.எல் மஸ்தூர் சங்கம். அப்படியெனில் ரூ 1274.75 கோடி லாபம் யாருக்கு செல்கிறது?

]]>
https://vskdtn.org/2022/03/23/bms-2/feed/ 0
அசாமில் மோசடி திருச்சியில் கைது https://vskdtn.org/2022/03/11/fraud-in-assam-arrested-in-trichy/ https://vskdtn.org/2022/03/11/fraud-in-assam-arrested-in-trichy/#respond Fri, 11 Mar 2022 05:50:00 +0000 https://vskdtn.org/?p=12880
அசாம் எலக்ட்ரானிக்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (AMTRON) நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 2.57 கோடி மோசடி செய்து எடுத்துள்ள ரபியூர் ரஹ்மான் என்பவரை அசாம் சி.ஐ.டி. போலீஸ் இன்று திருச்சியில் கைது செய்துள்ளது.
]]>
https://vskdtn.org/2022/03/11/fraud-in-assam-arrested-in-trichy/feed/ 0
திருச்சி அருகே 24 குரங்குகள் இறப்பு https://vskdtn.org/2022/01/24/monkeys-death/ https://vskdtn.org/2022/01/24/monkeys-death/#respond Mon, 24 Jan 2022 09:37:06 +0000 https://vskdtn.org/?p=11174 திருச்சி மாவட்டம் நெடுங்கூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 பெண் குரங்குகள் உட்பட 24 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. பிரேத பரிசோதனைக்கு பிறகே மரணத்திற்கான காரணம் உறுதியாக தெரியவரும். இந்நிலையில், குரங்குகளுக்கு விஷம் கொடுத்து அந்த இடத்தில் வீசியிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரங்குகளின் உடலில் எதுவும் காயம் இல்லை. இது விசாரிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

]]>
https://vskdtn.org/2022/01/24/monkeys-death/feed/ 0
திருச்சி-பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பயிற்சிகள் https://vskdtn.org/2021/12/31/pongal-jallikkattu/ https://vskdtn.org/2021/12/31/pongal-jallikkattu/#respond Fri, 31 Dec 2021 10:30:54 +0000 https://vskdtn.org/?p=10331 பொங்கல் பண்டிகைகு இன்னும் சில தினங்களே உள்ளன. இதனை முன்னிட்டு திருச்சி அருகே உள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டு பயிற்சியாளர்கள் காளைகளை அடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

      திருச்சி அருகே உள்ள சூரியூரில் மாவட்ட நிர்வாகத்தின் வழி நடத்துதல் படி வரும் ஜனவரி 16 ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதே போல அலங்காநல்லூர்,பாலமேடு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்தியர்கள் மட்டும் இன்றி வெளிநாட்டினரும்  இந்த போட்டிகளை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

]]>
https://vskdtn.org/2021/12/31/pongal-jallikkattu/feed/ 0
திருச்சி: ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ஒப்புதல் https://vskdtn.org/2021/12/29/ibs-in-trichy/ https://vskdtn.org/2021/12/29/ibs-in-trichy/#respond Wed, 29 Dec 2021 11:14:59 +0000 https://vskdtn.org/?p=10232 திருச்சி அருகே உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கென ஒதுக்கப்படும் நிதியின் ஒரு பகுதியை இதற்கு திருப்பி ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பஞ்சப்பூரில் உள்ள 500 ஏக்கர் நிலத்தில் இதில் 325 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். ஆரம்ப திட்ட ஒதுக்கீடாக ருபாய் 140 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2021/12/29/ibs-in-trichy/feed/ 0
குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். திருச்சியில் ஆர்ப்பாட்டம். https://vskdtn.org/2021/09/08/trichiyil/ https://vskdtn.org/2021/09/08/trichiyil/#respond Wed, 08 Sep 2021 13:27:46 +0000 https://vskdtn.org/?p=8507
பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சிராப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னால் அகில பாரத செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ ஸ்ரீ கணேசன் ஜி, மாநில துணைத் தலைவர் ஸ்ரீ வைத்தியநாத ஜி, கோட்ட செயலாளர் அன்பில் அன்பரசு ஜி, மாநில செய்தி தொடர்பாளர் வீரசேகரன் ஜி,மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
]]>
https://vskdtn.org/2021/09/08/trichiyil/feed/ 0
சிறுவயது முதலே யோகா மீது கொண்ட ஆர்வம்; உலக சாதனை வரை கொண்டு சேர்த்தது. https://vskdtn.org/2021/07/18/siruvayathu-muthele-yoga-meethu-konda/ https://vskdtn.org/2021/07/18/siruvayathu-muthele-yoga-meethu-konda/#respond Sun, 18 Jul 2021 07:05:59 +0000 https://vskdtn.org/?p=7703 சேலத்தைச் சோ்ந்த 10 வயது மாணவி 31 நிமிடங்கள் ஆடாமல், அசையாமல் பத்மாசனம் செய்து உலக சாதனை படைத்தார்.


சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த கதிர்வேல் – சுதா தம்பதியின் மகள் தா்ஷிகா 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதலே யோகா மீது அதீத ஆா்வம். தற்போது பொது முடக்கக் காலத்தில் வீட்டில் இருந்தபடியே யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

அதைத் தொடா்ந்து, திருச்சி, ருத்ரசாந்தி யோகாலயம், ஜஸ்ட்வின் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆகியவை சார்பில், மாணவி தா்ஷிகா ஆடாமல், அசையாமல் 31 நிமிடம் பத்மாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். அவா் தனது தலையில் தக்காளிப்பழத்தை வைத்துக் கொண்டு இச்சாதனையை நிகழ்த்தினார்.

]]>
https://vskdtn.org/2021/07/18/siruvayathu-muthele-yoga-meethu-konda/feed/ 0
ஆசிரியரின் பாலியல் சீண்டலை கண்டித்து ABVP ஆர்ப்பாட்டம். https://vskdtn.org/2021/07/07/aasiriyarin-paaliyal-seendalai-kandithu/ https://vskdtn.org/2021/07/07/aasiriyarin-paaliyal-seendalai-kandithu/#respond Wed, 07 Jul 2021 10:42:04 +0000 https://vskdtn.org/?p=7416

கடந்தவாரம் திருச்சி கிருத்துவ அமைப்பின் கீழ் செயல்படும் பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆசிரியர் பால் சந்தரமோகன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததை மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். ஆசிரியர் பால் சந்திரமோகனை கண்டித்து அகில பாரத வித்யார்த்தி பரிசத் தேசிய மாணவர் அமைப்பின் மாணவ தலைவர்கள் கல்லூரி வாசல் முன்பு நேற்று (06.07.2021) போராட்டம் நடத்தினர்.

இதன் விளைவாக பேராசிரியர் பால் சந்திரமோகன் இன்று ( 07.07.2021) கைது செய்யப்பட்டுள்ளார்

]]>
https://vskdtn.org/2021/07/07/aasiriyarin-paaliyal-seendalai-kandithu/feed/ 0