திருநெல்வேலி – VSKDTN News https://vskdtn.org Wed, 23 Feb 2022 12:46:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 திமுகவினரால் தாக்கப்பட்ட பாஜக வேட்பாளர்: மருத்துவமனையில் சந்தித்த இந்து முன்னணியினர் https://vskdtn.org/2022/02/23/bjp-candidate-attacked-by-bjp/ https://vskdtn.org/2022/02/23/bjp-candidate-attacked-by-bjp/#respond Wed, 23 Feb 2022 12:42:17 +0000 https://vskdtn.org/?p=12217 திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் 26வது வார்டில் திமுகவினரால் தாக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக வேட்பாளர் திருமதி மாரியம்மாள் அவர்களை இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் V.P. ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்ததோடு அன்று நடந்த தாக்குதல் குறித்தும் கேட்டறிந்தார்.

]]>
https://vskdtn.org/2022/02/23/bjp-candidate-attacked-by-bjp/feed/ 0
நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான காந்திமதி மேல்நிலை பள்ளி கொரோனா தடுப்பு மையமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு-இந்து முன்னணி எதிர்ப்பு https://vskdtn.org/2022/01/08/indu-munnani-on-gandhimathi-school/ https://vskdtn.org/2022/01/08/indu-munnani-on-gandhimathi-school/#respond Sat, 08 Jan 2022 06:17:49 +0000 https://vskdtn.org/?p=10662 திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான காந்திமதி மேல்நிலை பள்ளி கொரோனா தடுப்பு மையமாக மாற்றுவதற்காக, பள்ளியில் 10, 11 12 படிக்கும் மாணவிகளை அருகிலுள்ள ரஹ்மானியா பள்ளிக்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தில் உள்ள பள்ளியில் பிரார்த்தனைகள் எல்லாம் இந்து முறைப்படி நடைபெறும்.

அந்த மாணவிகளையும் ஆசிரியர்களையும் இஸ்லாமிய பள்ளிக்கு அனுப்புவது எந்த வகையில் நியாயம்? மேலும் காந்திமதி மேல்நிலைப்பள்ளி பெண்கள் பள்ளி,ரஹ்மானியா பள்ளி ஆண்கள் பள்ளி. இதனாலும் பிரச்சினைகள் உருவாகும்.

பாளையங்கோட்டையில் எத்தனையோ கிறிஸ்தவ டயோசிசன் பள்ளிகள் இருக்கையில்  மீண்டும் மீண்டும் ஏன் காந்திமதி பள்ளியை மட்டும் குறிவைத்து கொரோனா மையமாக அரசு மாற்றுகிறது.

இந்துத்திருக்கோயில் நிர்வாகத்தின் பள்ளி எடுப்பார் கைப்பிள்ளையா ?

இந்து பள்ளிப்பிள்ளைகளை இஸ்லாமிய பள்ளியில் பாடம் கற்க வைத்து மத பிரச்சினையை தூண்டுகிறதா மாவட்ட நிர்வாகம்?

மாவட்ட ஆட்சியர்  உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லையேல் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

]]>
https://vskdtn.org/2022/01/08/indu-munnani-on-gandhimathi-school/feed/ 0
பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழப்பு https://vskdtn.org/2021/12/17/3-student-killed-due-to-wall-fell-down/ https://vskdtn.org/2021/12/17/3-student-killed-due-to-wall-fell-down/#respond Fri, 17 Dec 2021 11:53:13 +0000 https://vskdtn.org/?p=9801     தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

    ஷாஃப்டர் மேல்நிலைப் பள்ளி.இது திருநேல்வேலியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி.  இந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் கழிவறை சென்ற போது அவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்து விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

      மீட்பு குழுவினர்,காவல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

      உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். காயமடைந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

]]>
https://vskdtn.org/2021/12/17/3-student-killed-due-to-wall-fell-down/feed/ 0
கோயிலுக்கு செல்லும் ஹிந்துக்களையும், காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடாதிபதியையும் கொச்சையாக பேசிய நெல்லை கண்ணனை மீது வி.எச்.பி. புகார் https://vskdtn.org/2021/08/12/koyilukku-sellum-hindukalaiyum-kanji-sri-kamakodi/ https://vskdtn.org/2021/08/12/koyilukku-sellum-hindukalaiyum-kanji-sri-kamakodi/#comments Thu, 12 Aug 2021 05:04:41 +0000 https://vskdtn.org/?p=7926 தொடர்ந்து ஹிந்துக்களையும், ஹிந்து நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்திய நெல்லை கண்ணனை மீது விஷ்வ ஹிந்து பரிசத் புகார்.


பெரும்பான்மையான ஹிந்துக்களை கோவிலுக்கு போகிற நாய்கள் எனவும், மிகப்பெரிய ஆன்மீக பணிகளை செய்து வரும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடம்  மற்றும் பாரம்பரிய நாளிதழான தினமலர் அதன் குடும்பம் நிர்வாகம் எழுத்தாளர்கள் என அனைவரையும் கொச்சையாகவும் அவதூறாகவும்,

புகார் கொடுத்த விஎச்பி பொறுப்பாளர்கள்

பெண்களை ஆபாசமாகவும் பேசி, நீதிமன்ற மற்றும் மாண்புமிகு நீதிபதிகள் நடவடிக்கைகளை கேலி செய்தும் அவதூறுகளைப் பேசியும் கொச்சைப்படுத்தி, சினம் ஊட்டி அதன் மூலம் கலவரம் ஏற்படுத்தவும் சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயற்சித்த நெல்லை பகுதியை சேர்ந்த கண்ணன் மீது நெல்லை விஷ்வ ஹிந்து பரிசத் பொறுப்பாளர்கள் புகார் அளித்தனர்.

]]>
https://vskdtn.org/2021/08/12/koyilukku-sellum-hindukalaiyum-kanji-sri-kamakodi/feed/ 2
கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை அறநிலையத்துறைக்கு எடுக்க கோர்ட் உத்தரவு https://vskdtn.org/2021/06/15/koyil-nilankal-meetpu/ https://vskdtn.org/2021/06/15/koyil-nilankal-meetpu/#comments Tue, 15 Jun 2021 05:53:15 +0000 https://vskdtn.org/?p=6659 திருநெல்வேலி பணகுடி ராமலிங்க சுவாமி மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் சொத்துக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாக்கலான வழக்கில் அறநிலையத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி கூனியூர் சுந்தரவேல் தாக்கல் செய்த பொதுநல மனுவில் பணகுடி ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் சிங்கப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம், வணிக வளாகத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். கோயிலுக்குச் சொந்தமான வீடுகளில் வசிப்போர் வாடகை செலுத்துவதில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய அறநிலையத்துறை அலுவலர்கள் கடமை தவறிவிட்டனர். கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாடகை, விவசாய நிலத்திற்குரிய குத்தகை நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுந்தரவேல் குறிப்பிட்டார்.

மனுவை விசாரிக்க நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி கொண்ட அமர்வு ஆக்கிரமிப்பாளர்கள் யார், யார் என்பதை மனுதாரர் குறிப்பிடவில்லை. அறநிலையத்துறை திருநெல்வேலி இணை கமிஷனர், கோயில் செயல் அலுவலர் பரிசீலித்து, ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருக்கும்பட்சத்தில் 4 மாதங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

]]>
https://vskdtn.org/2021/06/15/koyil-nilankal-meetpu/feed/ 2