திருவண்ணாமலை – VSKDTN News https://vskdtn.org Mon, 10 Jan 2022 12:16:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை கோயிலில் அனுமதி https://vskdtn.org/2022/01/10/tiruvannamalai-restriction/ https://vskdtn.org/2022/01/10/tiruvannamalai-restriction/#respond Mon, 10 Jan 2022 12:09:11 +0000 https://vskdtn.org/?p=10746 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை கோயிலில் அனுமதிக்கவேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இப்படிப்பட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது கைப்பேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தி ஆகியவற்றை காண்பித்த பின்னரே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.மற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

]]>
https://vskdtn.org/2022/01/10/tiruvannamalai-restriction/feed/ 0
குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம். https://vskdtn.org/2021/09/08/kuraintha-patsa-aatharavu-vilaiyai-sattamakka-bms/ https://vskdtn.org/2021/09/08/kuraintha-patsa-aatharavu-vilaiyai-sattamakka-bms/#respond Wed, 08 Sep 2021 13:13:03 +0000 https://vskdtn.org/?p=8501 பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திதிருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம் மாவட்ட ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் திரு.CS குமார் மாநிலசெயலாளர் திரு.கலியமூர்த்தி மாநில துணைத்தலைவர் திரு.கனகசபாபதி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://vskdtn.org/2021/09/08/kuraintha-patsa-aatharavu-vilaiyai-sattamakka-bms/feed/ 0
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கோடி அவமதிப்பு. https://vskdtn.org/2021/08/13/thiruvannamalai-atsiyar-aluvakathil-thesiya-kodi/ https://vskdtn.org/2021/08/13/thiruvannamalai-atsiyar-aluvakathil-thesiya-kodi/#respond Fri, 13 Aug 2021 06:24:07 +0000 https://vskdtn.org/?p=7951 திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கம்பத்தில் தேசிய கொடியை அவமதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடி தினசரி ஏற்றப்படுகிறது. காலையில் ஏற்றப்படும் தேசிய கொடி மாலையில் இறக்கப்படும். இந்நிலையில் நேற்று காலை தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. பின்னர், தேசிய கொடியின் மேல் பகுதியின் முடிச்சு, இறுக்கமாக கட்டாததால் அவிழ்ந்துள்ளது. இதனால் தேசிய கொடியால் பட்டொளி வீச முடியவில்லை. கம்பத்தின் உச்சியில் இருந்து சுமார் 1 அடிக்கு கீழே தேசிய கொடி இருந்தது.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றுவதில் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர் என தேச பற்றாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

]]>
https://vskdtn.org/2021/08/13/thiruvannamalai-atsiyar-aluvakathil-thesiya-kodi/feed/ 0
உலகம் குரோனா பிடியில் இருந்து தப்பிக்க திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்த பெண். https://vskdtn.org/2021/06/24/ulakam-corona-pidiyil-irunthu-thappaika/ https://vskdtn.org/2021/06/24/ulakam-corona-pidiyil-irunthu-thappaika/#respond Thu, 24 Jun 2021 12:48:34 +0000 https://vskdtn.org/?p=7021 குரோனா உலகம் முழுக்க பரவி கோரதாண்டவம் ஆடி வருகிறது. அதனை கட்டுப்படுத்த திருவண்ணாமலையில் பெண் ஒருவர் 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையை அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் பீமாவரம் பகுதியை சேர்ந்த கனுமுரி (45) ரமணமகரிஷி மீதுள்ள பற்றும், நாயன்மார்களின் வரலாறும் வெகுவாக கவர அந்த அம்மையார் திருவண்ணாமலை பக்கம் திரும்பி உள்ளார்.

கடந்த 15 ஆண்டுகள் திருவண்ணாமலையில் வசித்து கொண்டு பெரிய புராணம், நாயன்மார்கள் வரலாற்றை தனது தாய்மொழியில் மொழி பெயர்த்து அனைவரும் பயன்பெறும் வகையில் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தற்போது அம்மையார் உலகம் குரோனோ பிடியில் இருந்து விடுபட கிரிவல பாதையான 14 கி.மீ சுற்றினை முழுவதும் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார். இதுமாதியான தன்னலமற்ற செயல்கள் செய்பவர்கள் ஏராளம் ஏராளம்.

ஓம் நமச்சியவாய.

]]>
https://vskdtn.org/2021/06/24/ulakam-corona-pidiyil-irunthu-thappaika/feed/ 0