மதுரை – VSKDTN News https://vskdtn.org Sun, 29 Jan 2023 11:55:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மதுரை கேசவ சேவா கேந்திரம் சார்பாக மருத்துவமனைகளுக்குஉபகரணங்கள் வழங்கும் விழா https://vskdtn.org/2023/01/29/madurai-kesava-seva-kendra/ https://vskdtn.org/2023/01/29/madurai-kesava-seva-kendra/#respond Sun, 29 Jan 2023 11:32:33 +0000 https://vskdtn.org/?p=20010 மதுரை கேசவ சேவா கேந்திரம்  மற்றும் ஆர்.எஸ்.எஸ் மருத்துவர் பிரிவு இணைந்து மதுரை சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய 50 மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் பயன்பெறும் விதத்தில் ஆக்சிஜன் செறிவு (ம) ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் விழாவானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேசவ சேவா கேந்திர தலைவர் ஶ்ரீ. சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார் உடன் சேவா பாரதி மாவட்ட செயலாளர் ஜெய பாலன், ப்ராந்த்த சம்பர்க ப்ரமுக் ஶ்ரீ.சீனிவாசன், மதுரை ஆர்.எஸ்.எஸ் மருத்துவர் பிரிவு பொறுப்பாளர் ஶ்ரீ.விஸ்வநாதன், மதுரை ஆர்.எஸ்.எஸ் மருத்துவர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீ.ராம்பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர் மதுரை சார்ந்த  மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்


]]>
https://vskdtn.org/2023/01/29/madurai-kesava-seva-kendra/feed/ 0
மதுரையில் இந்து இயக்கங்கள் ஆர்பாட்டம் https://vskdtn.org/2022/02/01/indu-movement-protest/ https://vskdtn.org/2022/02/01/indu-movement-protest/#respond Tue, 01 Feb 2022 11:47:02 +0000 https://vskdtn.org/?p=11439 மதுரையில் கிறிஸ்தவ மதமாற்றக் கும்பலின் அனுமதியற்ற ஜெபக்கூடத்தை எதிர்த்த சுதேசி இயக்க மாநில அமைப்பாளர் ஆதிஷேஷன் உட்பட 7 ஹிந்து இயக்க பொறுப்பாளர்களை நேற்று அதிகாலையில் மதுரையில் காவல்துறை கைது செய்தது. இதை கண்டித்து ஹிந்து இயக்கங்கள் சார்பில் மதுரையில் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

]]>
https://vskdtn.org/2022/02/01/indu-movement-protest/feed/ 0
மதுரையில் பொங்கல் விழா: பிரதமர் பங்கேற்பு https://vskdtn.org/2021/12/31/madurai-pongal/ https://vskdtn.org/2021/12/31/madurai-pongal/#respond Fri, 31 Dec 2021 10:54:27 +0000 https://vskdtn.org/?p=10353 மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொங்கல் விழா வரும் ஜனவரி 12ம் தேதி நடைபெறும் என்றும் இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

]]>
https://vskdtn.org/2021/12/31/madurai-pongal/feed/ 0
ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா மதுரை https://vskdtn.org/2021/10/27/sri-naradhar-award-2/ https://vskdtn.org/2021/10/27/sri-naradhar-award-2/#respond Wed, 27 Oct 2021 13:55:01 +0000 https://vskdtn.org/?p=9118 விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றன.   

 

 

 

 

 

 

உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக கோவையில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், ஸ்ரீ வெங்கடேசன் கட்டுரையாளர் The organiser, ஸ்ரீ மேஜர் மதன்குமார் கட்டுரையாளர் & சமூக ஊடக எழுத்தாளர் , ஸ்ரீ கணேசன் கட்டுரையாளர் & எழுத்தாளர் ஆகியோர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது – 2021 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் .  எழுத்தாளர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் ஸ்ரீ ஞானசம்பந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். ஆர்எஸ்எஸ் தென்பாரத மக்கள் தொடர்பு பொறுப்பாளர் ஸ்ரீ பிரகாஷ் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை பின்தொடர்ந்து “The Tamil Week” என்கின்ற இணைய  ஆங்கில வார இதழ் மற்றும் “விஜயபாரதம்” தீபாவளி மலர்  வெளியீடப்பட்டது.

 

மேலும் நிகழ்ச்சியில்  தென்தமிழக ஊடகத்துறை பொருப்பாளர் ஸ்ரீ மோகன் ஜி, தென்தமிழக ஊடகத்துறை இணை பொருப்பாளர் ஸ்ரீ சூரியநாரயணன் ஜி மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://vskdtn.org/2021/10/27/sri-naradhar-award-2/feed/ 0
சேவாபாரதி தென்தமிழ்நாட்டின் புதிய மாநில தலைவர் நியமனம். https://vskdtn.org/2021/09/24/sevabharathi-then-tamillnattin-manila/ https://vskdtn.org/2021/09/24/sevabharathi-then-tamillnattin-manila/#respond Fri, 24 Sep 2021 08:10:24 +0000 https://vskdtn.org/?p=8730 சேவாபாரதி தென் தமிழ்நாடின் மாநில செயற்குழு கூட்டம் 23/09/2021 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மதுரை அமிர்தனந்தமயி மடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை திரு அரங்க ராமநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இச்செயற்குழு கூட்டத்தை பூஜ்ய ஸ்வாமி ஸ்வரூபானந்த, சிவானந்த ஸத்சங்கபவன், மதுரை திரு S.நடனகோபால் செயலர் மதுரை கல்லூரி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். மேலும் மாநில நிர்வாகிகளாக புரவலராக வெள்ளிமலை பூஜ்ய ஸ்வாமி சைதன்யானந்த மகராஜ், அவர்களும் திரு அரங்க ராமநாதன் அவர்கள் கௌரவ தலைவராகவும் மாநிலத்தின் புதிய தலைவராக மதுரை ராஜாஜி மருத்துவமணை முன்னாள் HODயும் பல்வேறு விதமான சேவை பணிகளை ஆற்றிவருபவருமான திரு டாக்டர் S வடிவேல்முருகன் அவர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

]]>
https://vskdtn.org/2021/09/24/sevabharathi-then-tamillnattin-manila/feed/ 0
ஆடை மாற்றத்திற்கு காரணமான மதுரை எனது தாய் நிலம் – காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரி https://vskdtn.org/2021/09/22/adai-marrathirku-karanamana-mdurai/ https://vskdtn.org/2021/09/22/adai-marrathirku-karanamana-mdurai/#respond Wed, 22 Sep 2021 07:49:35 +0000 https://vskdtn.org/?p=8696 காந்தியின் ஆடை மாற்றத்துக்குக் காரணமான மதுரை, எனது தாய் நிலம் போன்றது என்று காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரி தெரிவித்தார்.


சுதந்திரப் போராட்டத்தின் போது மதுரையில் 1921 செப்.22-இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்துக்கு வந்த மகாத்மா காந்தி இங்குள்ள மக்களின் நிலையைக் கண்டு தனது உடையை களைந்து அரையாடைக்கு மாறினார்.

இந்நிலையில் காந்தி அரையாடைக்கு மாறியதன் நினைவாக நூற்றாண்டு விழா நடத்த மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் சார்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரி செவ்வாய்க்கிழமை மதுரைக்கு வருகை தந்தார். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்துக்குச் சென்ற அவா் அங்குள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னா் மதுரை எனது தாய் நிலம். மதுரைக்கு வந்ததில் ஆசீா்வதிக்கப்பட்டதாக உணா்கிறேன். என் குடும்பத்துடன் இருப்பது போல உணா்வு ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தியை மாற்றிய மகத்தான நிலத்துக்கு எனது மரியாதையை காணிக்கையாகச் செலுத்துகிறேன். இந்திய ஏழை மக்களின் முகமாக வாழ்ந்த மகாத்மா காந்தி அரையாடைக்கு மாறிய நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது. மதுரையில் இருந்த விவசாயிகளின் தோற்றமே காந்தியின் ஆடை மாற்றத்துக்கு முக்கியக் காரணமானது. காந்தி ஆடையை மாற்றிக்கொண்டு இமயமலைக்கு சந்நியாசம் செல்லவில்லை. அவா் இங்கேயே ஏழை மக்களுடன் வாழ்ந்து, அவா்களுக்காக தன் வாழ்க்கையை அா்ப்பணித்தவா். எளிமையின் உதாரணமாக வாழ்ந்தவா் காந்தி. அவா் ஆன்மீகத்தைப் பற்றி பேசவில்லை. ஆனால் அவரது வாழ்க்கையே ஆன்மீக நெறியைக் கொண்டிருந்தது என்றார்.

]]>
https://vskdtn.org/2021/09/22/adai-marrathirku-karanamana-mdurai/feed/ 0
ஒரு மதத்தில் மட்டும் அனைத்து விஷயத்தையும் அரசு புகுத்துவது தவறு – மதுரை ஆதீனம். https://vskdtn.org/2021/09/06/oru-mathahil-mattum-anaithu-vishayathaiyum-arasu/ https://vskdtn.org/2021/09/06/oru-mathahil-mattum-anaithu-vishayathaiyum-arasu/#respond Mon, 06 Sep 2021 10:42:05 +0000 https://vskdtn.org/?p=8382 விநாயகர் சதுர்த்தி இன்றல்ல நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா. அதற்கு தடை விதித்திருப்பது சரியல்ல. ”விநாயகர் சதுர்த்தியை அரசு ஏற்று நடத்த வேண்டும்,” என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் தெரிவித்தார்.


மதுரை ஆதீனம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், வ.உ.சி., உருவச் சிலைக்கு மாலை அணிவித்த பின், செய்தியார்களை சந்தித்தார். வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிறது அரசு. இதே சூழலை மற்ற மதங்களிலும் செயல்படுத்த தயாரா? என கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு மதங்களிலும், பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவர்களுக்குள்ளும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆகவே, ஒரு மதத்தில் மட்டும் அனைத்து விஷயத்தையும் புகுத்துவது தவறு,

]]>
https://vskdtn.org/2021/09/06/oru-mathahil-mattum-anaithu-vishayathaiyum-arasu/feed/ 0
மதுரை ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார். https://vskdtn.org/2021/08/23/madurai-athinathin-srilasri-harihara-nana/ https://vskdtn.org/2021/08/23/madurai-athinathin-srilasri-harihara-nana/#respond Mon, 23 Aug 2021 12:31:22 +0000 https://vskdtn.org/?p=8137 293-வது மதுரை ஆதீனமாக ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதினத்தின் 292வது பீடாதிபதியாக இருந்துவந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த 13ஆம் தேதி முக்தி அடைந்தார்.
இதனையடுத்து 293-ஆவது மதுரை ஆதினமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகளுக்கு பட்டம் சூட்டப்பட்டது. இந்நிலையில் 10 நாள்கள் நிறைவடைந்த நிலையில் திங்கள் கிழமை பீடாதிபதியாக பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது.

]]>
https://vskdtn.org/2021/08/23/madurai-athinathin-srilasri-harihara-nana/feed/ 0
பாரத நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை. https://vskdtn.org/2021/07/24/bharatha-naattin-iraiyanmaikku/ https://vskdtn.org/2021/07/24/bharatha-naattin-iraiyanmaikku/#respond Sat, 24 Jul 2021 12:57:58 +0000 https://vskdtn.org/?p=7864 தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மதுரை, தேனி உள்ளிட்ட சில இடங்களில் தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தினர்.


தேனி மாவட்டம் சின்னமனூரில் யூசுப் அஸ்லாம் என்ற இஸ்லாமிய அடிபடைவாதியின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து இன்று (ஜூலை 24) காலை 5: 00 மணி முதல் அவரது வீடு மற்றும் கடைகளில் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போல் மதுரையில் ஒருவர் வீட்டில் என்ஐஏ., படையினர் சோதனை நடத்தினர். தெப்பக்குளம் தமிழன் தெருவில் வசித்தவர் இஸ்லாமிய அடிபடைவாதி அப்துல்லா இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பாக இன்றும் சோதனை நடந்தது.

]]>
https://vskdtn.org/2021/07/24/bharatha-naattin-iraiyanmaikku/feed/ 0
ஹிந்துக்களை பற்றி சர்ச்சை கிளப்பி விட்டு தலைமறைவான கிறித்துவ பாதிரியார் கைது. https://vskdtn.org/2021/07/24/hindukalai-parri-sarsai-kilappi-vitta/ https://vskdtn.org/2021/07/24/hindukalai-parri-sarsai-kilappi-vitta/#comments Sat, 24 Jul 2021 06:57:27 +0000 https://vskdtn.org/?p=7858 ஹிந்து கடவுளையும், பாரத தாயையும், பாரத பிரதமரையும் இழிவாக விமர்சித்த கிறித்துவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார்.


கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. அதனை கண்டித்து அருமனையில் கிறிஸ்தவ இயக்கம், முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஹிந்து கடவுள், பாரத தாய், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என ஹிந்து இயக்கங்கள் குரல் எழுப்பினர்.

இந்நிலையில் சென்னைக்கு காரில் 4 பேருடன் தப்பி செல்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை கருப்பாயூரணி அருகே சோதனை நடத்திய போது ஒரு காரில் பாதிரியார் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் கைது செய்தனர்.

அவரை கைது செய்தது ஹிந்துகளின் ஒற்றுமையால் கிடைத்த வெற்றி என சமூக வலைத்தளத்தில் ஹிந்து அமைப்பினர் கருதி வருகின்றனர்.

]]>
https://vskdtn.org/2021/07/24/hindukalai-parri-sarsai-kilappi-vitta/feed/ 24