தமிழகம் – VSKDTN News https://vskdtn.org Sun, 05 May 2024 11:42:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி https://vskdtn.org/2024/05/05/rss-8/ https://vskdtn.org/2024/05/05/rss-8/#respond Sun, 05 May 2024 11:42:28 +0000 https://vskdtn.org/?p=27569
திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள். சேவா கண்காட்சியை திறந்து வைத்து பாரத மாதா படத்திற்கு மலர் தூவி கண்காட்சியை பார்வையிட்டார்…
]]>
https://vskdtn.org/2024/05/05/rss-8/feed/ 0
ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை https://vskdtn.org/2024/05/04/abgp/ https://vskdtn.org/2024/05/04/abgp/#respond Sat, 04 May 2024 04:59:42 +0000 https://vskdtn.org/?p=27563 திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது.

ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும் அகில பாரத கிரஹ பஞ்சாயத் (ABGP) உள்ளிட்டோர் ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதன் எதிரொலியாக சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மெமு ரயில் சேவையை திருவண்ணாமலை வரை நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்தது.

இதையடுத்து, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இன்று(மே 3-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு மெமு ரயில் புறப்பட்டு சென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட ரயில் எஞ்ஜின் மீது மலர்களை தூவி ஆன்மிக அன்பர்கள், பொது நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிடோர் வழியனுப்பி வைத்தனர். ரயில் எஞ்ஜின் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு பயணிக்க கட்டணமாக ரூ.50 மட்டும் வசூலிக்கப்படுகிறது. அரசு பேருந்துகளுடன் ஒப்பிடும்போது நான்கில் ஒரு மடங்கு மட்டுமே உள்ளதால் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. எனவே, மெமு ரயிலை தடையின்றி தொடர்ந்து இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளன.

]]>
https://vskdtn.org/2024/05/04/abgp/feed/ 0
தென் தமிழகத்தில் 10,000 பண்பாட்டு வகுப்புகள் ! https://vskdtn.org/2024/04/29/10000-cultural-classes-in-south-tamil-nadu/ https://vskdtn.org/2024/04/29/10000-cultural-classes-in-south-tamil-nadu/#respond Mon, 29 Apr 2024 03:06:39 +0000 https://vskdtn.org/?p=27536 பண்பாட்டு வகுப்பு புத்தக வெளியீட்டு விழா

பாரத பண்பாட்டு கேந்திரம் சார்பாக திருச்சி சாதனா அறக்கட்டளை வளாகத்தில் பண்பாட்டு வகுப்பு புத்தக வெளியீட்டு விழாவானது நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திரு.சந்திரசேகர்   முதன்மை செயல் அலுவலர் இந்திராகாந்தி கல்லூரி  அவர்கள்  புத்தகத்தை வெளியிட  மருத்துவர் திரு. ஆனந்தரங்கசாமி  அவர்கள் பெற்றுக் கொண்டார்  திரு ஆறுமுகம் தென்தமிழக மாநில அமைப்பாளர் ஆர்.எஸ்.எஸ் சிறப்புரையாற்றினார் புத்தகத்தை பற்றி திரு பரமேஸ்வரன் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.எஸ் புத்தக விளக்கவுரை ஆற்றினார் உடன் திருச்சி மாநகர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்கள் உடன் இருந்தார்

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு திரு ஆறுமுகம் அவர்கள் பண்பாட்டு வகுப்பின் முக்கியத்துவம் குறித்தும் தென் தமிழகத்தில்  10,000 பண்பாட்டு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

 

 

]]>
https://vskdtn.org/2024/04/29/10000-cultural-classes-in-south-tamil-nadu/feed/ 0
ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் திரு.சங்கர சுப்பிரமணியன் காலமானார் ! https://vskdtn.org/2024/04/20/mr-shankara-subramanian-passed-away/ https://vskdtn.org/2024/04/20/mr-shankara-subramanian-passed-away/#respond Sat, 20 Apr 2024 04:51:52 +0000 https://vskdtn.org/?p=27512 சங்கத்தின் மூத்த பிரச்சாரக்கும், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத செயற்குழு உறுப்பினருமான திரு W.H. சங்கர சுப்பிரமணியன் நேற்று (19-04-2024) நள்ளிரவில் சென்னையில் மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

1961ல் பிறந்த அவர் வேலூரில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு வேலூர் ஜில்லா கார்யவாஹ் ஆக சங்க பணி புரிந்தார்.

பின் 1990ல் பிரச்சாரக்காக வந்தார். 1990 முதல் 93 வரை சென்னை பாக் பிரச்சாரக்; 93 முதல் 97 வரை வேலூர் ஜில்லா பிரச்சாரக்; 97 முதல் 99 வரை தர்ம ஜாக்கரன் மாநில அமைப்பாளர்; 97 முதல் பாரதிய மஸ்தூர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் தற்போது அகில பாரத செயற்குழு உறுப்பினராக (அமைப்பு சாரா பிரிவுகள் பொறுப்பு) இருந்தார்.

அன்னாரின் பூத உடலானது 20-04-2024 சனிக்கிழமை மதியம் 3 மணி வரை சென்னை சக்தி கார்யாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்

மதியம் 3.15 மணிக்கு தேக தானம் செய்யப்படும்.

]]>
https://vskdtn.org/2024/04/20/mr-shankara-subramanian-passed-away/feed/ 0
சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத் தாழ்வையும் வலியுறுத்தவில்லை; நாம் அனைவரும் ஒன்று என்றுதான் கூறுகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி https://vskdtn.org/2024/04/15/sanatana-dharma/ https://vskdtn.org/2024/04/15/sanatana-dharma/#respond Mon, 15 Apr 2024 05:35:57 +0000 https://vskdtn.org/?p=27501 ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் பொன்விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமி அனந்த மண்டபத்தில் நடைபெற்ற சங்கர விஜயம் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,

நமது ரிஷிகளும் சித்தர்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக பாரதம் ஒரு தேசம் என்ற எண்ணத்தையும் அடையாளத்தையும் விடாமுயற்சியுடன் முழு உலகையும் ஒரு குடும்பமாகக் கருதும் வாழ்க்கை, படைப்பு பற்றிய ஒருங்கிணைந்த பார்வையுடன் வளர்த்து வருகின்றனர்.

இது சனாதன தர்மத்தின் அடிப்படை மற்றும் பாரதத்தின் மரபணு ஆகும். ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் அமைப்புசார்ந்த முறையில் நாட்டின் பல்வேறு மூலைகளிலும் நான்கு புனித பீடங்களை உருவாக்கினார். இந்த அமைப்புகள் கடினமான காலங்களில் நமது முக்கிய மதிப்புகள் மற்றும் நமது தேசத்தின் அடையாளத்தை மேலும் ஒருங்கிணைத்து நிலைநிறுத்தியுள்ளன.

ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட சிருங்கேரி பீடம் கடுமையான அந்நிய தாக்குதல்களை எதிர்கொண்டு நமது தேசிய மதிப்புகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றியது. சுமார் 250 ஆண்டுகளாக கொடூரமான வெளித் தாக்குதல்களுக்கு எதிராக நமது தேசிய மதிப்புகளை வெற்றிகரமாகப் பாதுகாத்த விஜயநகரப் பேரரசை நிறுவியதில் மடத்தின் பங்களிப்பை மறக்க முடியாது. இன்று நம் நாடு விழித்தெழுந்து, சகாப்த மாற்றத்தின் வாசலில் நிற்கும் வேளையில், பாரதத்தை விஸ்வ குருவின் தெய்வீக இலக்குக்கு அழைத்துச் செல்வதில் ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம் போன்ற அமைப்புகளின் பொறுப்பு மகத்தானது” எனத் தெரிவித்தார்.

]]>
https://vskdtn.org/2024/04/15/sanatana-dharma/feed/ 0
சாதனா அறக்கட்டளை முப்பெரும் விழா  மற்றும் நூல் வெளியீட்டு விழா https://vskdtn.org/2024/04/15/book-launch/ https://vskdtn.org/2024/04/15/book-launch/#respond Mon, 15 Apr 2024 05:16:49 +0000 https://vskdtn.org/?p=27489 திருச்சியில் சாதனா அறக்கட்டளை கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சேவை பணிகளை சமுதாயத்திற்கு செய்து வருகிறது இதனுடைய ஆண்டு விழாவானது ஆண்டுதோறும் முப்பெரும் கொண்டாடப்படுகிறது   இந்த ஆண்டு திரு இரா.வன்னியராஜன்  அவர்களால் தமிழில் எழுதப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாறு நூல் மற்றும் திரு சுந்தர் அவர்கள் எழுதிய மனித குல மேன்மைக்கு மகத்தான ஐந்து வேள்விகள் நூல் வெளியீட்டு விழா   நடைபெற்றது. டாக்டர் ஜி வாழ்க்கை வரலாற்று நூலை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென் தமிழக மாநில செயலாளர் திரு சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட கோட்டத்தலைவர் திரு சம்பத்  பெற்றுக்கொண்டார். மற்றும் மனித குல மேன்மைக்கு மகத்தான ஐந்து வேள்விகள் நூலை சாதனா அறக்கட்டளை  அறங்காவலர் திரு அரங்கவரதராஜன் அவர்கள் வெளியிட திருச்சி நகர் தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

]]>
https://vskdtn.org/2024/04/15/book-launch/feed/ 0
டாக்டர் ஜி வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழா https://vskdtn.org/2024/04/10/dr-g-biography-book-launch/ https://vskdtn.org/2024/04/10/dr-g-biography-book-launch/#respond Wed, 10 Apr 2024 05:51:35 +0000 https://vskdtn.org/?p=27470 கோவையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாறு நுõல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. நுõலை ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோட்டத்தலைவர் சுகுமார் வெளியிட, மூத்த வக்கீல் சேதுராம் பெற்றுக்கொண்டார். அருகில் சங்கரா கண் மருத்துவமனை அறங்காவலர் பத்மநாபன், பொள்ளாச்சி சாந்தி கல்வி நிறுவன செயலாளர் சாந்தகுமாரி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத தலைவர் டாக்டர் வன்னியராஜன் ஆகியோர் உள்ளனர்

]]>
https://vskdtn.org/2024/04/10/dr-g-biography-book-launch/feed/ 0
பின்தங்கிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் ”சேவாபாரதி தமிழ்நாடு” ! https://vskdtn.org/2024/04/09/seva-bharati-2/ https://vskdtn.org/2024/04/09/seva-bharati-2/#respond Tue, 09 Apr 2024 12:48:57 +0000 https://vskdtn.org/?p=27467 கிராமப்புற பின்தங்கிய பகுதிகளில் பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு படித்து ஐ.டி. நிறுவனங்களில் வேலை தேடும் இளைஞர்களுக்கு சேவாபாரதி தமிழ்நாடு முறையான பயிற்சி அளித்து வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது. இதுதொடர்பாக சேவாபாரதி தமிழ்நாடு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

சேவாபாரதி தமிழ்நாடு, கிராமப்புற, புறநகர், பின்தங்கிய பகுதிகளில் பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு படித்து ஐ.டி. நிறுவனங்களில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ”சிற்பி” என்ற பெயரில் தொழில் முறைத்திறன், ஆங்கிலச் சொல்லகராதி, தகவல் தொடர்புத்திறன் ஆகிய பயிற்சிகள் அளித்து, அவர்களுக்கு ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கும் முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்து தருகிறது. இதன் மூலம், கடந்த ஆண்டு 100க்கும் அதிகமான நபர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த ஆண்டிற்கான பயிற்சிகளுக்கான துவக்க நிகழ்ச்சி, 07/04/2024 ஞாயிறு அன்று சென்னை பள்ளிக்கரணையிலுள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருமதி. நளினி பத்மநாபன், B.Com, FCA. DISA (ICAI), CISA (USA), பட்டயக் கணக்காளர், இயக்குநர், கனரா வங்கி, மங்களூர் SEZ லிமிடெட் மற்றும் திரு. சுப்ரமணியன், மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநர், யுபி (YUBI, Formerly Cred Avenue) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில், பேராசிரியர். திருமதி. M. மாலா, M.A., M.Phil., Ph.D., தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர், தாகூர் கல்வி அறக்கட்டளை, திரு. G. மணிகண்டன், செயலாளர், தாகூர் கல்வி அறக்கட்டளை மற்றும் திரு. ரமேஷ் செங்குட்டுவன், B.E., M.Tech., Ph.D., முதல்வர், ஜெருசலேம் பொறியியல் கல்லூரி ஆகியோரும் பங்கு பெற்றனர்.

திரு. ப்ரஷோப குமார், மாநில அமைப்பாளர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் மற்றும் திரு. B. ரபு மனோகர், மாநிலத் தலைவர், சேவாபாரதி தமிழ்நாடு ஆகியோரின் சிறப்புரை இடம்பெற்றது. வழக்கமாக, வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து பின்னர் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், இவ்வாண்டு அப்பயிற்சியுடன் புதியதாக முதலில் பயிற்சியும் பின்னர் வேலை வாய்ப்பும் என மாற்றி அமைக்கப்பட்ட பயிற்சியும் உண்டென்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://vskdtn.org/2024/04/09/seva-bharati-2/feed/ 0
சுவாமி தயானந்த கிருபா இல்லம் மனித குலத்துக்கு சிறப்பான சேவையை செய்து வருகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி ! https://vskdtn.org/2024/04/09/rnravi-2/ https://vskdtn.org/2024/04/09/rnravi-2/#respond Tue, 09 Apr 2024 07:17:35 +0000 https://vskdtn.org/?p=27461 ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுவாமி தயானந்த க்ருபா ஹோம் என்பது உடல் ஊனமுற்றோருக்கான காப்பகம். குறிப்பாக ஆட்டிசம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக. சிறப்புத் தேவையுடைய நபர்களுக்காக இந்த காப்பகம் செயல்பட்டு வருகிறது.

தோட்டக்கலை, விவசாயம் மற்றும் பால் பண்ணை ஆகியவற்றில் தொழில் பயிற்சி அளித்து பாதிக்கப்பட்டவர்களை சுயசார்புடையவர்களாக இந்கு மாற்றப்படுகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் தூபக் குச்சிகள், வாழ்த்து அட்டைகள் போன்ற பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஜெயா மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுவாமி தயானந்த க்ருபா ஹோம் மேம்படுத்தப்பட்ட வசதிகள் திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

இதுதொதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுவாமி தயானந்த கிருபா இல்லத்தில் மன வள சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் ஆட்டிசம் குறைபாடுடைய பெரியவர்களுக்கு நீண்டகால தனி கவனிப்பை வழங்கி மனிதகுலத்துக்கு குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றி வருகிறது. ஆழமான சனாதன தர்மம் மற்றும் பாரதியத்தின் சிறப்பியல்புகளாகவும் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் அமைப்புகள், சமுதாயத்தின் தாராளமான ஆதரவைப் பெறத் தகுதியானவை.” – சுவாமி தயானந்த கிருபா இல்லத்தில் ஆளுநர் ரவி

]]>
https://vskdtn.org/2024/04/09/rnravi-2/feed/ 0
ஆர்.எஸ்.எஸ். பற்றி அவதூறு : மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு ! https://vskdtn.org/2024/04/09/rss-defamation-about-if-you-do-not-apologize-the-case/ https://vskdtn.org/2024/04/09/rss-defamation-about-if-you-do-not-apologize-the-case/#respond Tue, 09 Apr 2024 07:13:07 +0000 https://vskdtn.org/?p=27458 “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதையே தாரக மந்திரமாக 99 வருடங்களாக தன்னலமற்ற சேவையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது செய்து வருகிறது. அடுத்த ஆண்டில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமானது வெற்றிகரமாக அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகிறது.

எத்தனையோ அமைப்புகள் ஆரம்பித்து அடையாளம் இல்லாமல் அழிந்து போய் உள்ளது. காரணம் அந்த அமைப்பினுடைய சித்தாந்தம் சரியில்லாமல் இருக்கும் இல்லை எனில் அதன் தலைவர்கள் சரியில்லாமல் இருப்பார்கள். இதனாலேயே பல அமைப்புகள் காணாமல் போன வரலாறு நமக்கு தெரியும்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ 1925 ல் ஆரம்பித்து எண்ணற்ற தடைகளையும் இன்னல்களையும் கடந்து இன்று வரை கம்பீரமாக வீறு கொண்டு நிற்கிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தவறான கருத்துக்களை பரப்பி வருகிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில ஊடகத்துறை செயலாளர் பா.நரசிம்மன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

ஆர்.எஸ்.எஸ். பற்றி ஏராளமான வதந்திகளையும் அவதூறுகளையும் சமூக விரோதிகள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். சங்கம் இது போன்ற அவதூறுகளுக்கு பதிலளிப்பது இல்லை என்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்து வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திருமதி வாசுகி, ஆதாரமற்ற ஒரு அவதூறைப் பரப்பியுள்ளார்.

புது தில்லியில் 3.5 லட்சம் சதுர அடியில் ரூ. 4500 கோடி செலவில் சங்கத்தின் பிரமாண்ட அலுவலகம் கட்டப்படுவதாக பொய்யான பிரசாரத்தை திருமதி வாசுகி ஆரம்பித்துள்ளார்.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

எந்தவித ஆதாரமும் இன்றிப் பரப்பப்படும் இந்த பொய்க் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திட்டமிட்ட அவதூறைப் பரப்பும் திருமதி வாசுகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்வோம் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2024/04/09/rss-defamation-about-if-you-do-not-apologize-the-case/feed/ 0