உலகம் – VSKDTN News https://vskdtn.org Fri, 26 Apr 2024 05:30:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ராமஜென்ம பூமி அறக்கட்டளை வழிகாட்டுதலுடன் இலங்கையில் ‘ராமாயண பாதை யாத்திரை திட்டம்’ https://vskdtn.org/2024/04/26/ramayana-trail-project/ https://vskdtn.org/2024/04/26/ramayana-trail-project/#respond Fri, 26 Apr 2024 05:30:38 +0000 https://vskdtn.org/?p=27524 ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரஅறக்கட்டளையின் வழிகாட்டுதலுடன், இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களைப்பிரபலப்படுத்த ‘ராமாயண பாதையாத்திரைத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பிறந்த ராமர், விதேக நாட்டின் (நேபாளம்) மன்னன் ஜனகனுக்கு மகளாகப் பிறந்த சீதையை மணம் முடித்தார். இலங்கை மன்னனான ராவணன் சீதையை இலங்கைக்கு் கடத்திச் செல்கிறார். இதனால் ராமாயண கதை இந்தியா, நேபாளம், இலங்கை என 3 நாடுகளில் பயணிப்பதுடன், மூன்று நாடுகளின் கலாச்சார உறவுகளையும் கொண்டது. இந்திய–இலங்கை ஆன்மிகமற்றும் கலாச்சார நட்புறவை வளர்ப்பதற்காகவும், இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகவும் அந்நாட்டில் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களைப் பிரபலப்படுத்த ‘ராமாயண பாதை யாத்திரைத் திட்டம் இந்தியாவில் உள்ள ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்டுள்ளது.

ராமாயண பாதை யாத்திரைத் திட்டத்துக்கு இலங்கையில் தலைமன்னார் ராமர் பாலம், சீதாஎலிய அசோகவனம், காலி ரூமஸ்ஸல, திருக்கோணேஸ்வரம் சிவன் கோயில், புத்தளம் மானாவரி சிவன்கோயில், வெலிமடை திவுரும்பொல, உஸ்ஸன்கொட தேசிய சரணாலயம், எல்ல இராவணன் குகை, கதிர்காமம் முருகன் கோயில்ஆகிய 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, யாத்திரை மற்றும் சுற்றுலாப் பயணத்துக்காக பிரபலப்படுத்தப்படும்.

திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 9 இடங்கள்

இந்த 9 இடங்களுக்குப் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வாய்ப்புக் கிடைப்பதுடன், அந்த இடங்கள் தொடர்புடைய பண்டைய ஆன்மிக நிகழ்வுகளை ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களின் மூலம் புதிய அனுபவத்தை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ராமாயண பாதை யாத்திரைத் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி,கொழும்புவில் உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, இலங்கை அதிபரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா, கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த திட்டம் ரூ.5 கோடியில் தொடங்கப்பட உள்ளது.

]]>
https://vskdtn.org/2024/04/26/ramayana-trail-project/feed/ 0
பாரதத்திலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி https://vskdtn.org/2024/04/22/brahmos-missile/ https://vskdtn.org/2024/04/22/brahmos-missile/#respond Mon, 22 Apr 2024 04:19:18 +0000 https://vskdtn.org/?p=27515 பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது.
பாரதம் – ரஷ்யா கூட்டு சேர்ந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை பாரதத்தில் தொடங்கி பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்தன. பாரதத்தின் பிரம்மபுத்ரா நதி மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதி ஆகிவற்றின் பெயர் சேர்க்கப்பட்டு பிரம்மோஸ் பெயர் உருவாக்கப்பட்டது.
நிலம், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர் விமானங்களில் இருந்து ஏவும் வகையிலான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. இந்த ஏவுகணை 2.8 மேக் வேகத்தில் (ஒலியைவிட 3 மடங்கு அதிகம்) சீறிப்பாய்ந்து 290 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது. தென்சீனக் கடல் பகுதியில் சீன கடற்படை ஆதிக்கம் செலுத்துவதால், எதிரிநாட்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியாவிடம் இருந்து வாங்க பிலிப்பைன்ஸ் முன்வந்தது. 3 யூனிட் பிரம்மோஸ் ஏவுகணை கருவிகள் மற்றும் ஏவுகணைகளை 375 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பாரதத்திடமிருந்து  வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் செய்யப்பட்டது.
அதன்படி பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பிரம்மேஸ் ஏவுகணைகளின் முதல் பேட்ஜ், பிலிப்பைன்ஸ்நாட்டுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. பாரத விமானப்படையின் ஜம்போ விமானம் சி-17 குளோப் மாஸ்டர் விமானத்தில், பிரம்மோஸ் ஏவுகணைகள் நேற்று பிலிப்பைன்ஸ் சென்றடைந்தன. இது பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் ஏற்றுமதி என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜென்டினா உட்பட இன்னும் சில நாடுகளும் பாரதத்திடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்துஉள்ளன.

]]>
https://vskdtn.org/2024/04/22/brahmos-missile/feed/ 0
எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினால் பாரதத்துக்கு வாருங்கள் https://vskdtn.org/2024/04/10/come-to-bharat-if-you-want-to-see-the-future/ https://vskdtn.org/2024/04/10/come-to-bharat-if-you-want-to-see-the-future/#respond Wed, 10 Apr 2024 10:31:56 +0000 https://vskdtn.org/?p=27487 டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பாரதத்திற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய பாரதத்திற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி,

நீங்கள் எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினால், பாரதத்திற்கு வாருங்கள். நீங்கள் எதிர்காலத்தை உணர விரும்பினால், பாரதத்திற்கு வாருங்கள். நீங்கள் எதிர்காலத்தில் வேலை செய்ய விரும்பினால், பாரதத்திற்கு வாருங்கள். பாரதத்தில் அமெரிக்க தூதரகத்தின் தலைவராக ஒவ்வொரு நாளும் அதைச் செய்யக்கூடிய பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கும் பாரதத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கார்செட்டி, டெல்லியுடனான அதன் கூட்டாண்மையை, ஜோ பைடன் நிர்வாகம் பாராட்டுவதாக கூறினார். “நாங்கள் இங்கு கற்பிக்கவும் பிரசங்கிக்கவும் வரவில்லை. நாங்கள் கேட்கவும் கற்றுக்கொள்ளவும் இங்கு வருகிறோம்,”என்று அவர் கூறினார், இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்துக்கள், முன்முயற்சிகளின் பரஸ்பர பரிமாற்றத்தை எடுத்துக் கூறினார்.

2024 நிதியாண்டில் பாரதத்தின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தொழில் மற்றும் சேவைத் துறைகளின் செயல்பாடுகளின் அதிகரிப்பு காரணமாக அரசாங்கத்தின் மதிப்பீட்டை விட அதிகமாக இருக்கும் என்று அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க-பாரதம் கூட்டாண்மையின் கீழ் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உட்பட பல துறைகள் வளர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://vskdtn.org/2024/04/10/come-to-bharat-if-you-want-to-see-the-future/feed/ 0
தேர்தலை நடத்துவது குறித்து ஐநா எங்களுக்கு சொல்லத் தேவையில்லை https://vskdtn.org/2024/04/05/jai-shankar/ https://vskdtn.org/2024/04/05/jai-shankar/#respond Fri, 05 Apr 2024 11:55:40 +0000 https://vskdtn.org/?p=27432 மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே, இந்தியாவில் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஐநா சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.

இந்நிலையில், தேர்தலை நடத்துவது குறித்து ஐநா எங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியாவில் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவது குறித்து ஐநா அமைப்பு எங்களுக்கு சொல்லத் தேவையில்லை. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்தியாவின் மக்கள் உறுதி செய்வார்கள். எனவே, அதைப் பற்றி ஐநா அமைப்பு கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.

]]>
https://vskdtn.org/2024/04/05/jai-shankar/feed/ 0
‘ஜெய் ஹனுமன்’ இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர்! https://vskdtn.org/2024/04/03/david-warner/ https://vskdtn.org/2024/04/03/david-warner/#respond Wed, 03 Apr 2024 10:15:07 +0000 https://vskdtn.org/?p=27398 இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துக் கொண்டுள்ளன.

இதற்காக வெளிநாட்டு வீரர்களும் இந்தியாவிற்கு வந்து அவர்கள் அணிகளுடன் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது.

இதற்காக இரண்டு அணி வீரர்களும் விசாகப்பட்டினத்தில் உள்ளனர். டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் விசாகப்பட்டினத்தில் ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்து தனது சமூக வலைத்தளத்தில் ஜெய் ஹனுமன் என்ற ஹாஷ்டகை பதிவிட்டுள்ளார்.

முன்னதாக உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமர் கோவில் திறக்கப்பட்டது போதும் ஜெய் ஸ்ரீ ராம் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://vskdtn.org/2024/04/03/david-warner/feed/ 0
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் நம்மை வழிநடத்துகிறது – ருசிரா காம்போஜ் https://vskdtn.org/2024/04/03/one-earth-one-family-one-future/ https://vskdtn.org/2024/04/03/one-earth-one-family-one-future/#respond Wed, 03 Apr 2024 10:12:12 +0000 https://vskdtn.org/?p=27396 ஐக்கிய நாடுகள் சபைக்கான பாரதத்தின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் கூறுகையில்,

வறுமையை ஒழிப்பதில் பாரதம் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்றைய நமது செயல்கள் நாளைய ஓவியத்தை சித்தரிக்கின்றன.

இது நம்பிக்கையின் பயணம், மாற்றத்திற்கான பயணம், நாங்கள் ஏற்கனவே வரலாற்றை உருவாக்கிவிட்டோம். பாரதத்தில் 415 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து வெளியேறியுள்ளனர்.  நாங்கள் இத்துடன் நிற்கவில்லை.

நமது மந்திரம், ‘வசுதைவ குடும்பகம்’ – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் நம்மை வழிநடத்துகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில், நமது பாரம்பரியப் பயிரான தினைகளை உலகுக்குக் காட்சிப்படுத்தினோம். பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் (PM POSHAN) யோஜனா திட்டம் பசி இல்லாத தேசமாக மாற்ற முயல்கிறது.

இது 1 மில்லியன் பள்ளிகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை வளர்க்கிறது, தினைகளை இணைத்து, பசிக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

பாரதம் அதன் பண்டைய ஞானத்தால் உந்தப்பட்டு, உலகளாவிய நல்வாழ்வுக்கான அதன்  அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்பது அக்ஷய பாத்ரா முயற்சி என்று நமது பிரதமர் மோடி கூறுகிறார்.

ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல், பலவற்றுடன், பசியைத் தீர்ப்பதற்கும் கல்வி இலக்குகளை அடைவதற்கும் அதன் புதுமையான அணுகுமுறைக்காக அங்கீகரிக்கப்பட்டது. அக்ஷய பத்ரா திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் 3 மில்லியன் குழந்தைகளுக்கு உணவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது பசித்தவர்களுக்கு உணவளிப்பதைத் தாண்டியது. இது இளைஞர்களுக்கு கல்வி கற்பது மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும்.  தரமான கல்வி மூலம் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதற்கு ஊக்கப்படுத்தும்.

பாரத பிரதமர் மோடி நமது மாபெரும் இதிகாசங்களைக் குறிப்பிட்டு, ஒருமுறை ஆழமாகச் சொல்லியிருக்கிறார், உற்சாகம்தான் நமது சக்தி வாய்ந்த சக்தி, ஆனால் அதை நமது சிந்தனை மற்றும் பகுத்தறிவால் வழிநடத்தினால், அதைக் கையாளும் ஒருவருக்கு அது இன்னும் பலமாகிறது, எந்த சவாலும் பெரியதல்ல எனத் தெரிவித்துள்ளார்.

]]>
https://vskdtn.org/2024/04/03/one-earth-one-family-one-future/feed/ 0
அமெரிக்காவில் மகளிர் சக்தி மாநாடு: MANASVINI – Nari Sakthi https://vskdtn.org/2024/03/23/manasvini-nari-sakthi/ https://vskdtn.org/2024/03/23/manasvini-nari-sakthi/#respond Sat, 23 Mar 2024 12:29:12 +0000 https://vskdtn.org/?p=27272 ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் (HSS) சார்பில் மனஸ்வினி என்ற பெயரில் மார்ச் 16 அன்று முதல் ஹிந்து மகளிர் மாநாடு அமெரிக்க பிட்ஸ்பர்க்கில் நகரில் நடை பெற்றது.
பிட்ஸ்பர்க்கில் உள்ள சின்மயா மிஷன, ஈஷா, ஹிந்து ஜெயின் மந்திர் & சேவா இன்டர்நேஷனல், ஸ்வாமி நாராயண் இயக்கம் போன்றவைகளும் இணைந்து இம்மாநாட்டை நடத்தின.
ஹிந்து தர்மத்தைக் கடைபிக்க, பாதுகாக்க ஹிந்து மகளிர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மாநாட்டில் பல தலைப்புகளில் குழுவாரி விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடை பெற்றன.
பல பின்னணிகளைக் கொண்ட பிரபல மான பெண்கள் – பல்வேறு ஹிந்து தர்ம அமைப்பினர்களும் மாநாட்டில் பங்கேற்ற னர்

]]>
https://vskdtn.org/2024/03/23/manasvini-nari-sakthi/feed/ 0
இந்தியா பூடான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! https://vskdtn.org/2024/03/22/important-agreements-signed-between-india-and-bhutan/ https://vskdtn.org/2024/03/22/important-agreements-signed-between-india-and-bhutan/#respond Fri, 22 Mar 2024 12:49:01 +0000 https://vskdtn.org/?p=27257 பூடான் சென்ற பிரதமர் மோடியை கர்பா நடனம் ஆடி இளைஞர்கள் வரவேற்றனர். இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமர் டிஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை வரவேற்றார். இதனைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பள்ளி சிறுவர், சிறுமிகள் இந்தியா, பூடான் தேசிய கொடிகளை அசைத்தபடி வரவேற்பு அளித்தனர்.பிரதமரை வரவேற்கும் விதமாக பாரோவில் இருந்து தேசிய தலைநகர் திம்பு வரை சுமார் 45 கிமீ தூரம் மக்கள் தெருக்களில் அணிவகுத்து நின்றனர். பிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு அவர்கள் நடனம் ஆடினர்.பின்னர் அங்கு கூடியிருந்த புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் பூடான் மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பூடான் பிரதமர் டிஷெரிங் டோப்கே முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

]]>
https://vskdtn.org/2024/03/22/important-agreements-signed-between-india-and-bhutan/feed/ 0
CAA – வுக்கு ஆதரவாக அமெரிக்கா பாடகி மேரி மில்பர்ன் கருத்து https://vskdtn.org/2024/03/16/america-in-support-of-caa/ https://vskdtn.org/2024/03/16/america-in-support-of-caa/#respond Sat, 16 Mar 2024 08:50:52 +0000 https://vskdtn.org/?p=27183 சமூகத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அண்மையில் இயற்றப்பட்ட சி. ஏ. ஏ. வுக்கு காங்கிரஸ் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் இந்த சூழலில் மோடி அரசை பாராட்டி வருகின்றனர். ஆப்பிரிக்க அமெரிக்க பாடகியான மேரி மில்பர்ன், பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வெளிப்படையாக பாராட்டியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த மோடியின் முன்னிலையில் இந்தியாவின் தேசிய கீதத்தை பாடி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் மேரி மிலேநியம். இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய அமெரிக்க பாடகி, சமூக ஊடகங்களில் நேர்மறையான பதிலை அளித்துள்ளார். CAA – வை அமல்படுத்துவது உண்மையான ஜனநாயகப் பணி என்று x வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுடனான தற்போதைய தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மேரி ஒரு வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறையை கேட்டுக் கொண்டுள்ளார்.

]]>
https://vskdtn.org/2024/03/16/america-in-support-of-caa/feed/ 0
இங்கிலாந்தில் காலிஸ்தானிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் https://vskdtn.org/2024/03/11/bank-accounts-of-khalistanis-frozen-in-uk/ https://vskdtn.org/2024/03/11/bank-accounts-of-khalistanis-frozen-in-uk/#respond Mon, 11 Mar 2024 12:10:49 +0000 https://vskdtn.org/?p=27075 இங்கிலாந்தில் ரிஷி சுனக் அரசாங்கம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் 300 க்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. 5,000 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் ஆராயப்படுகின்றன. இதுவரை முடக்கப் பட்டுள்ள தொகை ₹ 100 கோடிக்கும் அதிகம்.
காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவின் Sikh for Justice (SFJ) அமைப்பின் கணக்கும் இதில் அடக்கம். கனடா, அமெரிக்கா & ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ளவர்களுடன் சந்தேகத்திற்குரிய வகையில் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

]]>
https://vskdtn.org/2024/03/11/bank-accounts-of-khalistanis-frozen-in-uk/feed/ 0