bharat – VSKDTN News https://vskdtn.org Wed, 27 Sep 2023 08:42:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஐ.நா.சபையில் ‘பாரதம்’ என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர் https://vskdtn.org/2023/09/27/jaishankar-referred-to-bharat-in-the-un-assembly/ https://vskdtn.org/2023/09/27/jaishankar-referred-to-bharat-in-the-un-assembly/#respond Wed, 27 Sep 2023 08:42:54 +0000 https://vskdtn.org/?p=24735 ஜி-20 நாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அளித்த விருந்துக்கான அழைப்பிதழில், ‘இந்திய ஜனாதிபதி’ என்பதற்கு பதிலாக ‘பாரத ஜனாதிபதி’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், நாட்டின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றப்போவதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், நேற்று ஐ.நா. பொதுச்சபையிலும் ‘பாரதம்’ என்ற பெயர் எதிரொலித்தது. ஐ.நா. பொதுச்சபை மண்டபத்தில் ஐ.நா. பொதுச்பையின் உயர்மட்ட அமர்வு நடந்தது. அதில் நடந்த பொது விவாதத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவர் பேசத்தொடங்கும்போது, ”பாரதத்தின் வணக்கம்” என்று வணக்கம் தெரிவித்தார். தனது 17 நிமிட பேச்சின் முடிவிலும் பாரதத்தை குறிப்பிட்டார். ”நாங்கள் பாரம்பரியத்தை மட்டுமின்றி, தொழில்நுட்பத்தையும் சமமாக பின்பற்றி வருகிறோம். இந்த கலவைதான் இந்தியாவை அதாவது பாரதத்தை வரையறுக்கிறது” என்று கூறினார்.

]]>
https://vskdtn.org/2023/09/27/jaishankar-referred-to-bharat-in-the-un-assembly/feed/ 0
பாரதத்தின் முதல் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் நினைவு தினம் இன்று https://vskdtn.org/2023/02/28/rajendraprasad/ https://vskdtn.org/2023/02/28/rajendraprasad/#respond Tue, 28 Feb 2023 05:34:50 +0000 https://vskdtn.org/?p=20653

]]> https://vskdtn.org/2023/02/28/rajendraprasad/feed/ 0 குழந்தையை மீட்ட ஹிந்து அமைப்பினர் https://vskdtn.org/2022/10/22/hindu-organizations-rescued-the-child/ https://vskdtn.org/2022/10/22/hindu-organizations-rescued-the-child/#respond Sat, 22 Oct 2022 07:49:44 +0000 https://vskdtn.org/?p=18067 ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியின மக்கள் முட்மா கண்காட்சியை பார்க்க ஒரு சிறுபான்மையின குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு பழங்குடியின தம்பதியிடம் இருந்த கைக்குழந்தையை, அந்த சிறுபான்மையின குடும்பத்தினர் ரூ. 20.000 ஒப்பந்தம் போட்டு வாங்கியுள்ளார். கண்காட்சி முடிவடைந்த பிறகே கிராம மக்களுக்கு குழந்தை விற்கப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள், பஜ்ரங் தள் என்ற அமைப்பினருக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். இதனை விசாரித்த பஜ்ரங் தள் அமைப்பினர், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் குழந்தையை விற்கசொல்லி அதன் தந்தையிடம் கேட்டபோது குழந்தையின் தந்தை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் பின்னர் அவரை மது அருந்தவைத்து அவரது விரல் ரேகையை ஒப்பந்தத்தில் பதிய வைத்ததும் தெரிய வந்துள்ளது.

]]>
https://vskdtn.org/2022/10/22/hindu-organizations-rescued-the-child/feed/ 0
பாண்டியர் காலத்து பெருமாள் சிலை https://vskdtn.org/2022/10/18/perumal-idol-of-pandya-era/ https://vskdtn.org/2022/10/18/perumal-idol-of-pandya-era/#respond Tue, 18 Oct 2022 06:56:02 +0000 https://vskdtn.org/?p=17944 பாண்டிய மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளான மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற பகுதிகளில் முற்கால பாண்டியர்களின் தடயங்கள் பெருமளவு கிடைத்து வருகின்றன.அவற்றின் தொடர்ச்சியாக, பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பொருசுபட்டியில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த ஒரு பழமையான பெருமாள் சிற்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிற்பம் 3 துண்டுகளாக உடைந்து காணப்படுகிறது. மூன்றடி உயரம் கொண்ட இந்த சிற்பம் முற்கால பாண்டியர்களுக்கே உரித்தான கலைநயத்துடன், தலையில் மகுடம், மார்பில் ஆபரணங்கள், முப்புரி நூல், இடையில் இடைக்கச்சை, 2 கால்களிலும் வீரக்கழலைகள், சங்கு சக்கரம் ஆகியவற்றுடன் நின்ற கோலத்தில் உள்ளது. இந்த சிலை கிடைத்துள்ள இந்த பகுதியில் ஒரு காலத்தில் பெருமாள் கோயில் இருந்திருக்க வேண்டும். பின்னாளில் அந்நிய படையெடுப்பினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சிதைந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது.

]]>
https://vskdtn.org/2022/10/18/perumal-idol-of-pandya-era/feed/ 0
2030க்குள் 6ஜி அலைக்கற்றை https://vskdtn.org/2022/05/18/6g-spectrum-by-2030/ https://vskdtn.org/2022/05/18/6g-spectrum-by-2030/#respond Wed, 18 May 2022 12:47:19 +0000 https://vskdtn.org/?p=15135 இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் துவக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொலிகாட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘5ஜி அலைக்கற்றை சோதனையை துவக்கி வைத்தார். அப்போது பேசுகையில், ‘கடந்த 8 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தியுள்ளோம். 2ஜி சகாப்தம், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது. 3ஜியில் இருந்து 4ஜிக்கு பாரதம் வேகமாக முன்னேறியுள்ளது. தற்போதைய மத்திய அரசு, 4ஜி நெட்வொர்க் மற்றும் 5ஜி நெட்வொர்க்கில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்துள்ளது. அலைபேசி உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் 2ல் இருந்து 200 ஆக அதிகரித்துள்ளது. நமது நாடு தான் உலகின் மிகப் பெரிய அலைபேசி உற்பத்தி மையமாகத் திகழ்கிறது. தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது. பாரதத்தில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சுமார் 450 பில்லியன் டாலர் அளவிற்கு நாட்டின் பொருளாதாரத்திற்கு ‘5ஜி’ தொழில்நுட்பம் பங்காற்றும். இது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமையான விஷயம். இது இணைய வேகத்தை மட்டுமில்லாமல் நாட்டின் வளர்ச்சியின் வேகத்தையும் அதிகரிக்கும். வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கப்பட வேண்டும். வேளாண்மை, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, தளவாடங்கள் ஆகியவையும் இதனால் வளர்ச்சி பெறும். 21ஆம் நூற்றாண்டின் வளர்ச்சியை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும். வரும் 2030ம் ஆண்டுக்குள் 6ஜி நெட்வொர்க்கை நாட்டில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சிறப்பு குழு தனது பணியைத் தொடங்கிவிட்டது. தொலைத்தொடர்பில் ஆரோக்கியமான போட்டியை மத்திய அரசு ஊக்குவித்ததால் உலகிலேயே நமது தேசத்தில்தான் மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா கிடைக்கிறது’ என்று பேசினார்.

]]>
https://vskdtn.org/2022/05/18/6g-spectrum-by-2030/feed/ 0
உலகின் ஸ்டார்ட் அப் துறையில் பாரதம் தலைமை வகிக்கத் தயாராக உள்ளது. https://vskdtn.org/2022/04/04/bharat-is-poised-to-lead-the-world-in-start-ups/ https://vskdtn.org/2022/04/04/bharat-is-poised-to-lead-the-world-in-start-ups/#respond Mon, 04 Apr 2022 10:51:22 +0000 https://vskdtn.org/?p=13792 ஜம்முவில் உள்ளூர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு தொழில்துறை அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஸ்டார்ட் அப் துறையில் தொழில்துறை பங்கேற்பு என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகின் ஸ்டார்ட் அப் துறையில் பாரதம் தலைமை வகிக்கத் தயாராக உள்ளது. இத்துறையில் ஜம்மு காஷ்மீர் பின்னடைவை சந்தித்திருப்பது சற்று வருத்தம் அளிக்கிறது. நீடித்த சவாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கு தொழில்துறையும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும். 2015ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தது நாடு முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றது. பாரதத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2014ல் 1,100 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது’ என கூறினார்.

]]>
https://vskdtn.org/2022/04/04/bharat-is-poised-to-lead-the-world-in-start-ups/feed/ 0
உலகத் தலைமை ஏற்கும் பாரதம் https://vskdtn.org/2022/03/16/bharat-accepts-world-leadership/ https://vskdtn.org/2022/03/16/bharat-accepts-world-leadership/#respond Wed, 16 Mar 2022 07:06:32 +0000 https://vskdtn.org/?p=13092 எட்டாவது சர்வதேச யோகா தினத்திற்கு நூறு நாட்கள் இருக்கும் நிலையில், ‘யோகா மகோத்சவம் என்னும் 100 நாள் கௌன்ட் டௌன்’ நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கிவைத்தார். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், மற்றும் இணையமைச்சர்கள் டாக்டர் முன்ஜ்பாரா மகேந்திரபாய், மீனாட்சி லேகி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு சர்வதேச யோகா தின இயக்கம், உலகம் முழுவதும் 100 நாள் மையப்பொருள், 100 நகரங்கள், 100 அமைப்புகள் என வரும் ஜூன் 21 வரை நடைபெறும். 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு 75 பாரம்பரிய, கலாச்சாரப் பெருமை கொண்ட 75 நகரங்களில் ஜூன் 21ம் தேதி யோகா நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் உலகத்தலைமை ஏற்கும் உயரிய நிலையில் பாரதம் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலக மையம் பாரதத்தில் அமைக்கப்படவுள்ளது’ என்று தெரிவித்தார்.

]]>
https://vskdtn.org/2022/03/16/bharat-accepts-world-leadership/feed/ 0
மறக்கமுடியுமா இக்கொடுமைகளை https://vskdtn.org/2022/03/16/can-these-atrocities-be-forgotten/ https://vskdtn.org/2022/03/16/can-these-atrocities-be-forgotten/#respond Wed, 16 Mar 2022 05:31:44 +0000 https://vskdtn.org/?p=13083
யாசின் மாலிக் உத்தமபுத்திரன் என்று ‘இந்தியா டுடே’ கொண்டாடியது. கொலைகாரனை இளைஞர்களின் முன்மாதிரி என்று பாராட்டியது. இந்த உத்தமபுத்திரன் செய்த கொடுமைகள் எண்ணிலடங்கா.
1989 இல் நீதிபதி நீலகண்ட கட்ஜு படுகொலையில் பங்கு. முப்தி முகமது மகள் ரூபியா சையது கடத்தல் நாடகத்தின் சூத்திரதாரி.
1990 இல் ஜம்முவில் ராணுவ வாகனத் திற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 4 பாரத வாயு சேனா (IAF) வீரர்களை பொது மக்கள் முன்பு படுகொலை செய்தது. இதில் பெண்கள் உட்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
2005 ஆம் வருடம் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திட அரசின் ஆதரவுடன் பாகிஸ்தான் சென்று வந்தது.
2006 ஆம் வருடம் பிரதமர் மன் மோகன் சிங் விருந்தினராக தனது வீட்டிற்கு இக்கொலைகாரனை அழைத்தது,
2008 ஆம் வருடம் இந்தியா டுடே பத்திரிகை ஆண்டுதோறும் நடத்தி வரும் கான்க்லேவிற்கு அழைத்து இளைஞர்களின் முன் மாதிரி என்ற பட்டம் வழங்கி பாராட்டியதை தேசியவாதிகளால் எப்படி மறக்க முடியும்.
இக்கொலைக்கார யாசின் மாலிக் தற்போது சிறையில் உள்ளான்.
The Kashmir Files படம் பார்க்க செல்பவர்களுக்கு இவைகள் தெரியுமா?
]]>
https://vskdtn.org/2022/03/16/can-these-atrocities-be-forgotten/feed/ 0
ஜெனரல் வி.கே.சிங்கிற்கு வரவேற்பு https://vskdtn.org/2022/03/08/welcome-to-general-vk-singh/ https://vskdtn.org/2022/03/08/welcome-to-general-vk-singh/#respond Tue, 08 Mar 2022 02:21:42 +0000 https://vskdtn.org/?p=12762 உக்ரைனில் இருந்து மாணவர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்துவரச் சென்றிருந்த மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் அவர்களுக்கு அவரது தொகுதியில் (காஜியாபாத்) கிடைத்த பிரமாண்ட  வரவேற்பு.

Video link: https://fb.watch/bCtLJbPAft/

]]>
https://vskdtn.org/2022/03/08/welcome-to-general-vk-singh/feed/ 0
விமானக் கடத்தல்காரன் சுட்டுக் கொலை https://vskdtn.org/2022/03/08/hijacker-shot-dead/ https://vskdtn.org/2022/03/08/hijacker-shot-dead/#respond Tue, 08 Mar 2022 02:11:55 +0000 https://vskdtn.org/?p=12759 1999ஆம் வருடம் சி184 எனும் இந்தியன் ஏர்லைன்ஸை விமானக் கடத்தலில் முக்கிய பங்கு வகித்த 5 கடத்தல் காரர்களில் ஒருவன் சாஹூர் மிஸ்திரி. இவன் பாகிஸ்தான் கராச்சி நகரில் தனது பெயரை ஸாஹித் அஹுண்டு என்று மாற்றி வைத்துக்கொண்டு தலைமறைவாக இருந்து வந்தான். இந்த கடத்தல்காரனை நேற்று நண்பகல் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் தனது வீட்டிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டான். இது பாரத உளவு அமைப்பான ரா வின் செயல் என்று பாகிஸ்தானில் உள்ள ஊடகங்கள் வழக்கம் போல் ஒப்பாரி வைக்கின்றன.

]]>
https://vskdtn.org/2022/03/08/hijacker-shot-dead/feed/ 0