BKS – VSKDTN News https://vskdtn.org Wed, 05 Jan 2022 08:03:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அகில பாரத சமன்வய பைடக் https://vskdtn.org/2022/01/05/all-india-coordinating-byte/ https://vskdtn.org/2022/01/05/all-india-coordinating-byte/#respond Wed, 05 Jan 2022 08:02:42 +0000 https://vskdtn.org/?p=10544
சங்க ஸ்வயம்சேவர்கள் பல்வேறு தளங்களில் நாட்டின் முன்னேற்றத் திற்காக பல அமைப்புகளை துவங்கி நடத்தி வருகின்றனர். ABVP, BMS, VHP, BJP, Vanavasi Kalyan Ashram, Rashtra Sevika Samiti, Seva Bharati, Smaskrutha Bharati, Vidhya Bharati, Sahakar Barati, Samskar Bharati, Adivakta Parishad, Bharath Vikas Parishad போன்ற மேலும் பல அமைப்புகள் தேசிய அளவில் செயல் பட்டு வருகின்றன. இந்த அமைப்பு களின் தேசிய பொறுப்பாளர்களின் 3 நாள் கூடுதல் பாக்யநகரில் (ஹைதராபாத்) இன்று காலை துவங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் ப.பூ. டாக்டர் மோகன் பாகவத், பொது செயலாளர் (சர்கார்யவாஹ்) திரு. தத்தாத்ரேய ஹொசபலே மற்றும் சங்கத்தின் அகில பாரத பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இம்மாதிரி சமன்வயக் கூடுதல் ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெற்று வருகிறது.
 
தகவல்; சடகோபன் ஜி
]]>
https://vskdtn.org/2022/01/05/all-india-coordinating-byte/feed/ 0
பாரத பேரரசின் புதிய வேளாண் சட்டத்தினால் ஏற்பட்டுள்ள மாற்றம், வளர்ச்சி. https://vskdtn.org/2021/06/24/bharathiya-arsankathin-puthiya-velaan-sa/ https://vskdtn.org/2021/06/24/bharathiya-arsankathin-puthiya-velaan-sa/#respond Thu, 24 Jun 2021 06:47:58 +0000 https://vskdtn.org/?p=7008 விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக இந்திய ரயில்வே திகழ்கிறது. கிசான் ரயில்களின் அறிமுகம் மூலம் நாடு தழுவிய அணுகல் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. 2.7 லட்சம் டன் சரக்குகளை கிசான் ரயில்கள் மூலம் இதுவரை கொண்டு சென்றுள்ளன.

கிசான் ரயிலின் முக்கிய அம்சங்கள்
* பழங்கள், காய்கறிகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட அழுகக்கூடிய பொருட்களை உற்பத்தியாகும் அல்லது உபரியாக உள்ள பகுதிகளில் இருந்து நுகரும் அல்லது பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறது.

* விரைவான போக்குவரத்தின் காரணமாக குறைவான பாதிப்பு ஏற்படுகிறது.

* தொலைதூர, பெரிய மற்றும் கவர்ச்சிகரமான சந்தைகளுக்கு பொருட்களை அனுப்ப ரயில்வேயின் பரந்து விரிந்த வலைப்பின்னல் விவசாயிகளுக்கு உதவுகிறது.

* பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மானியம் (‘ஆப்பரேஷன் கிரீன் – டாப் டூ டோட்டல்’ திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது).

* பல பொருட்களை, பல இடங்களுக்கு எடுத்து செல்வதால், குறைந்த சரக்குகளுடன் கூடிய சிறிய விவசாயிகளும் தொலைதூர, பெரிய சந்தைகளை அணுக முடிகிறது.

* பயண நேரம் மற்றும் செலவு குறைவதால் (பெரிய நகரங்கள் மற்றும் நுகர்வு மையங்களில் உள்ள) நுகர்வோருக்கு குறைந்த விலையில், பண்ணை பசுமை பொருட்கள் கிடைக்கின்றன.

பாலசுந்தரம்
பாரதீய கிசான் சங்கம்

]]>
https://vskdtn.org/2021/06/24/bharathiya-arsankathin-puthiya-velaan-sa/feed/ 0