chennai – VSKDTN News https://vskdtn.org Sat, 15 Apr 2023 08:30:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தெற்கு ரயில்வேக்கு 15வது வந்தே பாரத் ரயில் ஒதுக்கீடு https://vskdtn.org/2023/04/15/south-to-railway-15th-st/ https://vskdtn.org/2023/04/15/south-to-railway-15th-st/#respond Sat, 15 Apr 2023 08:30:46 +0000 https://vskdtn.org/?p=21710 சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும், 15வது வந்தே பாரத் ரயில், தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை எந்த வழித்தடத்தில் இயக்குவது என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதுவரை, சென்னை ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்பட்டு, 14 வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்து தயாராகும், 15வது வந்தே பாரத் ரயிலை, தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கி, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுஉள்ளது.
‘ஐ.சி.எப்.,யில் மாதந்தோறும் இரண்டு அல்லது மூன்று வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்குகிறோம்’ என்றனர். தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ’15வது, வந்தே பாரத் ரயிலை, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கலாமா; கேரளா மாநிலம், திருவனந்தபுரம் – கண்ணுாருக்கு இயக்கலாமா என, ஆலோசித்து வருகிறோம். வழித்தடம் விரைவில் அறிவிக்கப்படும்’ என்றனர்.

]]>
https://vskdtn.org/2023/04/15/south-to-railway-15th-st/feed/ 0
பட்டு தேவானந்த் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றார். https://vskdtn.org/2023/04/10/pattu-thevanand-chennai-i/ https://vskdtn.org/2023/04/10/pattu-thevanand-chennai-i/#respond Mon, 10 Apr 2023 09:24:07 +0000 https://vskdtn.org/?p=21536 சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதன்மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது.

]]>
https://vskdtn.org/2023/04/10/pattu-thevanand-chennai-i/feed/ 0
திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து ரயில்கள் துவக்கிட வேண்டி   ABGP கையெழுத்து இயக்கம் https://vskdtn.org/2023/04/05/abgp-chennsi-thiruvannamalai/ https://vskdtn.org/2023/04/05/abgp-chennsi-thiruvannamalai/#respond Wed, 05 Apr 2023 11:46:38 +0000 https://vskdtn.org/?p=21411 திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து நேரடியாக வட்ட ரயில்கள் துவக்கிட வேண்டி ஒவ்வொருவரும் இந்த இணைப்பில் கையெழுத்திட வேண்டுகிறோம்.

பழம்பெருமை வாய்ந்த புனிதமான திருவண்ணாமலைக்கு நாள்தோறும் மற்றும் பௌர்ணமி தினங்களில் லக்ஷக் கணக்கிலும் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.பக்தர்கள் செல்ல வசதியாகவும் குறைந்த செலவிலும் கீழ்க்கண்ட  வட்டப் பாதையில் ரயில்கள் விட ரயில்வே வாரியத்திற்கு வேண்டுகோள் இதன் மூலம் விடுகின்றோம்.

*பாதை 1:

சென்னை கடற்கரை-காட்பாடி- திருவண்ணாமலை -விழுப்புரம் -எழும்பூர்- சென்னை கடற்கரை.

பாதை2)

சென்னை- எழும்பூர்- விழுப்புரம்- திருவண்ணாமலை -காட்பாடி- சென்னை கடற்கரை- எழும்பூர்.

 

நீங்கள் இங்கு இதற்கு  பதிவிடுவதால் இந்த பணி நிச்சயம் வெற்றி பெற்று, பல லட்சக்கணக்கான பக்தர்கள் நிச்சயம் பயனடைவர். உங்கள் ஒப்புதலை இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை தொட்டு உங்கள் விவரத்தை பதிவு செய்திட வேண்டுகிறோம்.

நாடு தழுவிய 483 கிளைகளைக் கொண்ட ஒரே ஒரு நுகர்வோர் அமைப்பான ABGP (அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, உங்களுக்கு இந்த வேண்டுகோளை விடுகின்றது. தாங்கள் தயவுசெய்து இந்த பணிக்கு ஆதரவு தருவது உடன் இல்லாமல் தங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் இந்த இணைப்பை அனுப்பி, இந்த இறைபணி வளர்ச்சிக்கு துணை புரிய ABGP கேட்டுக் கொள்கிறது. மிக்க நன்றி.

தொடர்புக்கு:9043517840🙏🏽

https://forms.gle/FZNJ8bZQ8eRUGeow6

]]>
https://vskdtn.org/2023/04/05/abgp-chennsi-thiruvannamalai/feed/ 0
மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா https://vskdtn.org/2022/04/23/language-first-come-first-served/ https://vskdtn.org/2022/04/23/language-first-come-first-served/#respond Sat, 23 Apr 2022 09:55:43 +0000 https://vskdtn.org/?p=14336 தமிழர்கள் மொழி அடையாளமிக்கவர்கள். மொழிக்காக முதலில் வருபவர்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 நிர்வாக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுததும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் நீதித்துறை கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது அவசியம். மக்களின் தேவையை நீதித்துறை பூர்த்தி செய்யும்.உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மாநில மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும். ஒருவர் நீதிபதியாக மொழி, இனம், மதம் ஆகியவை தடையாக இருக்கக்கூடாது. வழக்கு விசாரணை என்பது வழக்காடிகள் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைப்பது குறித்து சகநீதிபதிகளுடன் ஆலோசனை செய்யப்படும். கலந்து ஆலோசித்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வழக்குகளை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.’ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

]]>
https://vskdtn.org/2022/04/23/language-first-come-first-served/feed/ 0
நீர்நிலைகளில் தூய்மைப்பணி: சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்திக்கு பிரதமர் பாராட்டு https://vskdtn.org/2022/03/27/water-purifiers/ https://vskdtn.org/2022/03/27/water-purifiers/#respond Sun, 27 Mar 2022 11:47:03 +0000 https://vskdtn.org/?p=13532 மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி, தான் வசிக்கும் பகுதியில், குளங்கள் மற்றும் ஏரியை தூய்மைபடுத்துவதற்கு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 150க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்களை தூய்மைபடுத்தும் பணியை பொறுப்பாக எடுத்து கொண்டு அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்.

]]>
https://vskdtn.org/2022/03/27/water-purifiers/feed/ 0
தலித் ஹிந்துவா..கிறிஸ்துவரா? சென்னை மேயர் ப்ரியா ராஜன்., https://vskdtn.org/2022/03/13/dalit-hindu-christ/ https://vskdtn.org/2022/03/13/dalit-hindu-christ/#respond Sun, 13 Mar 2022 12:41:19 +0000 https://vskdtn.org/?p=13008 சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ப்ரியா ராஜன், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். தமிழக தேர்தல் கமிஷனுக்கு பொய் தகவலை கொடுத்துள்ளார். தலித் மக்களுக்கு அரசு வழங்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள், அவர்கள் மதம் மாறினால் கிடைக்காது என்ற நிலை இருப்பதால், மதம் மாறியவர்கள் தொடர்ந்து, ஹிந்து மதத்தில் நீடிப்பது போல காட்டி வருகின்றனர்.
பெரம்பூர் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. செங்கை சிவம், கிறிஸ்துவர். தன் அன்றாட வாழ்வில் அந்த மதத்தை பின்பற்றுபவர். ஞாயிறு தோறும் சர்ச்சுக்கு சென்று வருபவர் என்ற தகவல் தெரிய வர, அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
‘நான் கிறிஸ்துவர் அல்ல; ஹிந்து மதத்தை சேர்ந்தவன்; ஹிந்துவாக தான் இருக்கிறேன்’ என்று கூறிய செங்கை சிவம், ஆரிய சமாஜத்தில் இருந்து கடிதம் வாங்கி கொடுத்திருக்கிறார்.

]]>
https://vskdtn.org/2022/03/13/dalit-hindu-christ/feed/ 0
சென்னை விமான நிலையத்திற்கு சர்வதேச சான்றிதழ் https://vskdtn.org/2022/03/13/chennai-airport-airport/ https://vskdtn.org/2022/03/13/chennai-airport-airport/#respond Sun, 13 Mar 2022 10:02:35 +0000 https://vskdtn.org/?p=12990 பெரிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து,குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில், சென்னை விமான நிலையம், 89.32 சதவீதத்துடன், எட்டாவது இடம் பிடித்துள்ளது. மொத்தம், 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன. இதில், 70 வழித்தடங்களில், 81.90 சதவீத விமானங்கள் கண்காணிக்கப்பட்டு உள்ளன. 28 கோடி இருக்கைகள் என்ற அடிப்படையில், பெரிய விமான நிலையமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவில், சென்னை சர்வதேச விமான நிலையம் மட்டுமே, சரியான நேரத்தில் விமானங்கள் புறப்பாட்டை உறுதி செய்ததில், சர்வதேச அளவில் இடம் பிடித்தது.

]]>
https://vskdtn.org/2022/03/13/chennai-airport-airport/feed/ 0
பாரதிய மஸ்தூர் சங்க சென்னை கோட்ட தொழிலாளர் சந்திப்பு https://vskdtn.org/2022/02/28/bms-labourer-meeting/ https://vskdtn.org/2022/02/28/bms-labourer-meeting/#respond Mon, 28 Feb 2022 05:55:28 +0000 https://vskdtn.org/?p=12385 சென்னை அண்ணணூரில் சென்னை கோட்ட தொழிலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய மஸ்தூர் சங்க மாநில அமைப்பு செயலாளர தங்கராஜ்ஜி,துணை தலைவர் ஜெயகுமார்ஜி மற்றும் ராஜேஷ்ஜி, கோட்ட,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தனர்.

]]>
https://vskdtn.org/2022/02/28/bms-labourer-meeting/feed/ 0
கோவையில் பணியாற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அச்சம் :15 நாட்களில் 4 தேர்தல் பார்வையாளர்கள் மாற்றம் https://vskdtn.org/2022/02/16/coimbatore-ias-officer/ https://vskdtn.org/2022/02/16/coimbatore-ias-officer/#respond Wed, 16 Feb 2022 10:27:19 +0000 https://vskdtn.org/?p=11960 கோவை மாநகராட்சி தேர்தலில், அரசியல் ரீதியான மோதலும், அதன் தொடர்ச்சியாக பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 15 நாட்களில் நான்கு தேர்தல் பார்வையாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஒரு புறம் ஆளும்கட்சி, மற்றொரு புறத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் என, இரண்டு தரப்பினருக்கும் இடையில் அதிகாரிகள் சிக்கி, விழிபிதுங்கி நிற்கின்றனர். யாருக்கு சாதகமாக நடந்தாலும் பிரச்னை என்பதால், செய்வதறியாது தவிக்கின்றனர். இங்கு தேர்தல் பார்வையாளராக பணிக்கு வருவதற்கே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அச்சப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், 15 நாட்களுக்குள் நான்கு தேர்தல் பார்வையாளர்கள் கோவையில் மாற்றப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், கோவையில் அரசியல் கட்சியினரிடையே மோதலும், பதற்றமும் அதிகரித்து வருகிறது. அதனால் புதிய பார்வையாளரும் தேர்தல் முடியும் வரை தாக்குப்பிடிப்பாரா என்பது கேள்வியாக உள்ளது.

]]>
https://vskdtn.org/2022/02/16/coimbatore-ias-officer/feed/ 0
கூவம் ஆற்றில் தினமும் கலக்கும் 3.6 கோடி லிட்டர் சாக்கடை நீர்: அதிகாரிகள் மெத்தனம் https://vskdtn.org/2022/02/16/koovam-river/ https://vskdtn.org/2022/02/16/koovam-river/#respond Wed, 16 Feb 2022 10:20:27 +0000 https://vskdtn.org/?p=11956 ஆவடியில், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினசரி வெளியேறும் 3.6 கோடி லிட்டர் தண்ணீர் கருமை நிறத்தில் கூவம் ஆற்றில் கலப்பதால், மேலும் மாசடையும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி எல்லை வரை கூவம் ஆறு தெளிந்த நீராக வருகிறது. ஆவடி மாநகராட்சியை கடந்து செல்லும் போது, சாக்கடை போல கருமை நிறமாக மாறி மாசடைந்து, சென்னை மாநகருக்குள் செல்கிறது. இந்நிலையில், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கால், கூவம் ஆறு மேலும் மாசடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

]]>
https://vskdtn.org/2022/02/16/koovam-river/feed/ 0