In Tenkasi-Illegal-K – VSKDTN News https://vskdtn.org Tue, 16 May 2023 08:29:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தென்காசியில் சட்டவிரோத கிறிஸ்தவர்கள் சர்ச் கட்ட முயற்சி https://vskdtn.org/2023/05/16/in-tenkasi-illegal-k/ https://vskdtn.org/2023/05/16/in-tenkasi-illegal-k/#respond Tue, 16 May 2023 08:29:03 +0000 https://vskdtn.org/?p=22529 இந்து முன்ன்ணி அமைப்பின் மாநில செயலாளர் கா. குற்றாலநாதன் வெளியிட்டுள்ள பதிவில், “தென்காசி மாவட்டம் அச்சங்குட்டத்தில் 99.9 சதவீதம் ஹிந்துக்கள் வாழும் ஊரில் 4 வீட்டு கிறிஸ்தவர்கள் சர்ச் கட்ட முயன்றனர். அரசு இடத்தில் சர்ச் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் பொய்யான விஷயங்களை கூறி கிறிஸ்தவ தரப்பினர் உத்தரவு பெற்றனர். இதனையடுத்து அந்த ஊர் பொதுமக்கள், இந்துமுன்னணி அமைப்பின் தலைமையில் போராடி இந்த முயற்சியை தடுத்து நிறுத்தினர். மேலும் ஊரில் உள்ள TDTA கிறிஸ்தவ தொடக்க பள்ளிக்கு தங்கள் குழந்தைகள் படிக்க செல்வதையும் மக்கள் நிறுத்திவிட்டனர். கடந்த மாதம் இறுதி தேர்வை வீராணம் அரசு பள்ளியில் அந்த மாணவ மாணவிகள் எழுதினர். தற்போது தங்கள் பகுதியிலேயே அரசு தொடக்கப்பள்ளி அமைக்க ஊர் மக்கள் சார்பில் நிலம் வழங்கப்பட்டு உள்ளது. அரசு தொடக்கப்பள்ளி அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மக்கல் மனு அளித்துள்ளனர். அடுத்த கட்டமாக போராட்டங்களை எப்படி கொண்டு செல்வது என்று இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி தென்காசி எம்.எல்.ஏ , தி.மு.க எம்.பி என யாருமே உதவவில்லை கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மனதில் வேரூன்றியுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தமிழக முதல்வருக்கும் நெருக்கடி கொடுக்கிற வகையில் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டது. அச்சங்குட்டம் பகுதியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் மிகப்பெரிய ஹிந்து எழுச்சி கிராமங்களாக மாறி வருகிறது. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்து அது இன்னும் வேரூன்றும். அதற்கு வாய்ப்பினை ஆளும் அரசு ஏற்படுத்தி தரட்டும். ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும்” என தெரிவித்துள்ளார்.

]]>
https://vskdtn.org/2023/05/16/in-tenkasi-illegal-k/feed/ 0