Jaishankar – VSKDTN News https://vskdtn.org Wed, 27 Sep 2023 08:42:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஐ.நா.சபையில் ‘பாரதம்’ என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர் https://vskdtn.org/2023/09/27/jaishankar-referred-to-bharat-in-the-un-assembly/ https://vskdtn.org/2023/09/27/jaishankar-referred-to-bharat-in-the-un-assembly/#respond Wed, 27 Sep 2023 08:42:54 +0000 https://vskdtn.org/?p=24735 ஜி-20 நாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அளித்த விருந்துக்கான அழைப்பிதழில், ‘இந்திய ஜனாதிபதி’ என்பதற்கு பதிலாக ‘பாரத ஜனாதிபதி’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், நாட்டின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றப்போவதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், நேற்று ஐ.நா. பொதுச்சபையிலும் ‘பாரதம்’ என்ற பெயர் எதிரொலித்தது. ஐ.நா. பொதுச்சபை மண்டபத்தில் ஐ.நா. பொதுச்பையின் உயர்மட்ட அமர்வு நடந்தது. அதில் நடந்த பொது விவாதத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவர் பேசத்தொடங்கும்போது, ”பாரதத்தின் வணக்கம்” என்று வணக்கம் தெரிவித்தார். தனது 17 நிமிட பேச்சின் முடிவிலும் பாரதத்தை குறிப்பிட்டார். ”நாங்கள் பாரம்பரியத்தை மட்டுமின்றி, தொழில்நுட்பத்தையும் சமமாக பின்பற்றி வருகிறோம். இந்த கலவைதான் இந்தியாவை அதாவது பாரதத்தை வரையறுக்கிறது” என்று கூறினார்.

]]>
https://vskdtn.org/2023/09/27/jaishankar-referred-to-bharat-in-the-un-assembly/feed/ 0
மாலத்தீவு அதிபருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு https://vskdtn.org/2022/03/28/maldives-president-alcohol/ https://vskdtn.org/2022/03/28/maldives-president-alcohol/#respond Mon, 28 Mar 2022 07:43:06 +0000 https://vskdtn.org/?p=13557 வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, அண்டை நாடான மாலத்தீவுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் வரவேற்றார்.அப்துல்லாவுடன் ஜெய்சங்கர் இரு தரப்பு பேச்சு நடத்தினார். இருவரும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல் பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.அட்டு தீவுக்கு சென்ற ஜெய்சங்கர், அங்குள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியை ஜெய்சங்கர் சந்தித்தார்.அந்த சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை மாலத்தீவு அதிபரிடம் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

]]>
https://vskdtn.org/2022/03/28/maldives-president-alcohol/feed/ 0
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்ஷங்கர் பேச்சு https://vskdtn.org/2022/01/05/jaishnakar-with-us-ea/ https://vskdtn.org/2022/01/05/jaishnakar-with-us-ea/#respond Wed, 05 Jan 2022 11:01:04 +0000 https://vskdtn.org/?p=10527 இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் அமெரிக்க வெளியுரவ்துறை அமைச்சர் அந்தோனி ப்ளிங்கனுடன் ஜனவரி 4ம் தேதி தொலைபேசியில் உரையாடினார். இருதரப்பு உறவுகள்,இந்தோ பசிபிக்  நிலவரம் ஆகியவை குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது. வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தைகளுக்கு இரு நாடுகளும் தயார் ஆகி வருகின்றன. இது இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் நடைபெறும். அதற்கு முன்னேற்பாடாக இந்த பேச்சு வார்த்தை அமைந்துள்ளது. பாதுகாப்பு, உலகளாவிய பொது சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுத்தமான எரிசக்தி மற்றும் காலநிலை நிதி, முதலான அம்சங்கள் குறித்து இரு தரப்பினரும் ஆய்வு செய்தததாக . வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

]]>
https://vskdtn.org/2022/01/05/jaishnakar-with-us-ea/feed/ 0
விவசாயிகள் மீதுள்ள அக்கறையை பிரதிபலிக்கும் மடேரா தீர்மானம் – அமைச்சர் ஜெய்சங்கர். https://vskdtn.org/2021/07/02/vivasayikal-methulla-akkaraiyai-pirathipalikkum/ https://vskdtn.org/2021/07/02/vivasayikal-methulla-akkaraiyai-pirathipalikkum/#respond Fri, 02 Jul 2021 06:37:29 +0000 https://vskdtn.org/?p=7313 “சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன் மீது, இந்தியா வைத்துள்ள அக்கறையை பிரதிபலிக்கும் வகையில், ஜி – 20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, ‘மடேரா’ தீர்மானம் அமைந்துள்ளது,” என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


ஐரோப்பிய நாடான இத்தாலியின் மடேரா பகுதியில், ஜி – 20 உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாடு, நேற்று முன்தினம் (29.06.2021) நடைபெற்றது. அதில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

அந்த மாநாட்டில், மடேரா தீர்மானத்திற்கு, அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்தன. இந்த தீர்மானத்தின்படி, கொரோனா வைரசால், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய, ஒன்றிணைந்து முயற்சிகளை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து, வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2030ம் ஆண்டுக்குள், உலகில் பசி பட்டினியால் ஏற்படும் பஞ்சத்தை ஒழிக்க, அனைத்து அமைச்சர்களும் உறுதி ஏற்றனர்.

இந்நிலையில், அந்த மாநாடு குறித்து, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தன், சுட்டுரை பதிவில், ‘இத்தாலியில் நடந்த ஜி – 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில், உணவு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதற்கு என் பாராட்டுகள்.

சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன், உள்ளூர் உணவு கலாசாரங்களை ஊக்குவிக்க முடிவெடுக்கப்பட்டது. அதோடு, வேளாண் பன்முகத்தன்மையை அங்கீகரித்தல் உள்ளிட்டவற்றின்மீது, இந்தியா வைத்துள்ள அக்கறையை பிரதிபலிக்கும் வகையில், மடேரா தீர்மானம் அமைந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

]]>
https://vskdtn.org/2021/07/02/vivasayikal-methulla-akkaraiyai-pirathipalikkum/feed/ 0