Madurai Aadeenam – VSKDTN News https://vskdtn.org Thu, 07 Jul 2022 07:09:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மடங்கள் மற்றும் ஆதீனம் பொது நிறுவனம் அல்ல: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! https://vskdtn.org/2022/07/07/monasteries-and-athens/ https://vskdtn.org/2022/07/07/monasteries-and-athens/#respond Thu, 07 Jul 2022 07:09:30 +0000 https://vskdtn.org/?p=15648 உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் தாக்கல் செய்த மனு: ஆதீனம், மடம் என்பது பொது நிறுவனம் அல்ல; அரசின் நிதி உதவியில் இயங்கவில்லை; சொந்த நிதியில் செயல்படுகிறது.

தமிழ் பக்தி இலக்கியம், ஆன்மிகப் பணியில் ஈடுபடுகிறது. தமிழக அறநிலையத்துறை சட்டத்தின் சில விதிகள் ஆதீனத்திற்கு பொருந்தும். எனினும், விதிகள்படி ஆதீன நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்ய முடியாது.

ஆதீனம் மற்றும் அதன் கீழ் செயல்படும் மத நிறுவனங்கள் பற்றி சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விபரங்கள் கோரி தொந்தரவு செய்கின்றனர்.
சட்டப்படி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொது நிறுவனங்களிடம் மட்டுமே விபரங்கள் கோர முடியும். ஆதீனம் தன்னாட்சி பெற்ற அமைப்பு.
மடங்கள், கோவில்கள் பொது நிறுவனங்கள் அல்ல. அரசின் நிதி உதவி பெறாத தன்னாட்சி பெற்ற மத நிறுவனங்களுக்கு, தகவல் உரிமைச் சட்டம் பொருந்தாது என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் விதிகள் ஆதீனம் அல்லது அதன் மத நிறுவனங்களுக்கு பொருந்தாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,”ஆதீனம், மடம் பொது நிறுவனம் அல்ல. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் வழங்குமாறு ஆதீன மடத்திடம் கோர முடியாது. மனு அனுமதிக்கப்படுகிறது,” என உத்தரவிட்டார்.

]]>
https://vskdtn.org/2022/07/07/monasteries-and-athens/feed/ 0
ஆதீனத்தை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் https://vskdtn.org/2022/05/21/stpi-parties-who-met-athena/ https://vskdtn.org/2022/05/21/stpi-parties-who-met-athena/#respond Sat, 21 May 2022 06:59:38 +0000 https://vskdtn.org/?p=15206 மதுரை ஆதினத்தின் 293வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகளை, எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். இதில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், அப்துல் சிக்கந்தர் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது மதுரை ஆதீனம் தான் வைத்திருந்த முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை வாசித்துக் காட்டினார். மேலும் தன்னை சந்திக்க வந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினருக்கு திருநீறு, குங்குமம் கொண்ட பிரசாத பையை வழங்கினார்.

]]>
https://vskdtn.org/2022/05/21/stpi-parties-who-met-athena/feed/ 0