Tamil Nadu – VSKDTN News https://vskdtn.org Thu, 31 Mar 2022 09:13:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தேசிய அளவில் சிந்திக்க வேண்டும்: மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை https://vskdtn.org/2022/03/31/national-level-think-w/ https://vskdtn.org/2022/03/31/national-level-think-w/#respond Thu, 31 Mar 2022 09:13:12 +0000 https://vskdtn.org/?p=13675 திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லுாரியில், பி.வி.எஸ்சி., படிப்பில் முதலிடம் பிடித்த மாணவர் சங்கருக்கு, 26 பதக்கங்கள், இரண்டு பண விருதுகளை, கவர்னர் ரவி வழங்கினார்.எம்.வி.எஸ்சி., மாணவி தமிழினிக்கு ஆறு பதக்கங்கள், பி.எச்டி., ஆராய்ச்சி மாணவி ரஞ்சனி ராஜசேகரனுக்கு நான்கு பதக்கங்கள்; பி.டெக்., உணவு தொழில்நுட்பம் முடித்த பூர்விதாவுக்கு இரண்டு பதக்கங்களை, கவர்னர் வழங்கினார்.டில்லியில் உள்ள, தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் செயலர் பி.கே.ஜோஷி, பட்டமளிப்பு உரையாற்றினார்.

இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் தொழில் முனைவோராக மாற வேண்டும்.மத்திய அரசின் முயற்சிகளில், ‘ஸ்டார்ட் அப்’ தொழில் தொடங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நீங்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.முயற்சியை ஒருபோதும் கைவிட்டு விடக் கூடாது. புதிய புதிய சிந்தனைகளை வளர்க்க வேண்டும்.ஒவ்வொருவரும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் ஓர் இலக்கை நிர்ணயித்து, உழைக்க வேண்டும். அதற்காக பயிற்சியும், நிபுணத்துவமும் பெற வேண்டும். துவக்கத்தில் தோல்விகள் ஏற்படலாம். அதற்கெல்லாம் கவலைப்படாமல், தொடர்ந்து முன்னேறி சென்றால் வெற்றி நிச்சயம்.நம் நாடு இப்போது, அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது.தமிழகம், முன்னேறிய மாநிலம். ஆனால், இந்த வளர்ச்சி என்பது அனைத்து பகுதிகள், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

]]>
https://vskdtn.org/2022/03/31/national-level-think-w/feed/ 0
தமிழகத்தில் லவ் ஜிஹாத் https://vskdtn.org/2022/03/29/love-jihad-in-tamil-nadu/ https://vskdtn.org/2022/03/29/love-jihad-in-tamil-nadu/#respond Tue, 29 Mar 2022 09:53:07 +0000 https://vskdtn.org/?p=13609 தேனி மாவட்டம் கம்பம் அருகே கம்பம்மெட்டு காலனியைச் சேர்ந்தவர் ஷாஜகான் என்ற முஸ்லிம் நபர் கூலித்தொழிலாளியாக பணியார்றுகிறார். இவருக்கும், நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான என்ஜினீயரிங் மாணவிக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஷாஜகான் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை தேனிக்கு கடத்தி சென்றுள்ளார். மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இவ்வழக்கை விசாரித்த காவல்துறையினர், தேனியில் இருந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ஷாஜகானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

]]>
https://vskdtn.org/2022/03/29/love-jihad-in-tamil-nadu/feed/ 0
நதிகள் இணைப்பில் தமிழகம் https://vskdtn.org/2022/03/26/tamil-nadu-at-the-junction-of-rivers/ https://vskdtn.org/2022/03/26/tamil-nadu-at-the-junction-of-rivers/#respond Sat, 26 Mar 2022 05:53:20 +0000 https://vskdtn.org/?p=13463 மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜல் சக்தித் துறை இணையமைச்சர் விஷ்வேஸ்வர் துடு, ‘தேசிய முன்னோக்கு திட்டத்தின் கீழ் சாத்தியக்கூறு அறிக்கைகளை தயாரிப்பதற்காக 30 இணைப்புகளைத் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. எட்டு இணைப்புகளின் விரிவான திட்ட அறிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தார். அவரின் அறிக்கைப்படி தமிழகம் சார்ந்த நதிகளை இணைக்கும் திட்டங்களின் முன்மொழிவுகளின் விவரங்கள்: ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் தொடர்புடைய பென்னாறு, காவிரி இணைப்பிற்கான சாத்தியக்கூறு அறிக்கையும், விரிவான திட்ட அறிக்கையும் நிறைவடைந்துள்ளன. கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி தொடர்புடைய காவிரி, வைகை மற்றும் குண்டாறு இணைப்பிற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்துள்ளது. கர்நாடகா, தமிழகம், கேரளா தொடர்புடைய நேத்ராவதி மற்றும் ஹேமாவதி இணைப்பிற்கான சாத்தியக்கூறுக்கு முந்தைய அறிக்கை நிறைவடைந்துள்ளது. தமிழகம், கேரளா தொடர்புடைய பம்பா, அச்சன்கோவில் மற்றும் வைப்பாறு இணைப்பிற்கான சாத்தியக்கூறு அறிக்கை நிறைவடைந்துள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள 30 நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 8.44 லட்சம் கோடி ஆகும். இருப்பினும், இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் நேரத்தில் இது மாறுபடலாம்.

]]>
https://vskdtn.org/2022/03/26/tamil-nadu-at-the-junction-of-rivers/feed/ 0
தொடர்கதையாகும் கோயில் இடிப்பு https://vskdtn.org/2022/03/26/the-sequel-is-temple-demolition/ https://vskdtn.org/2022/03/26/the-sequel-is-temple-demolition/#respond Sat, 26 Mar 2022 05:45:25 +0000 https://vskdtn.org/?p=13456 தமிழகத்தில் ஹிந்து கோயில்களை மட்டும் தமிழக அரசு குறிவைத்து தொடர்ந்து இடித்து வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் உடுமலை பள்ளபாளையத்தில் இருக்கும் பழங்கால கோயிலை இடிக்க, தமிழக அரசின் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். ஆனால், ஊர் மக்கள் ஒன்று திரண்டு கோயிலை இடிக்க விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி போன்ற ஹிந்து அமைப்புகளும், பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டன.. இதனால், அதிகாரிகள் செய்வதறியாது விழித்தனர். தற்போது ஊர் மக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதேபோல, தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மேலூர் பகுதியிலுள்ள 2 கோயில்களை இடிக்க அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாகவும் பொதுமக்கள் ஆதரவுடன் போராட்டம் நடத்த ஹி்ந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதுபோல தொடர்ந்து கோயில்கள் இடிக்கப்படுவது தி.மு.க ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி என்ற அடிப்படையிலேயே மக்களால் பார்க்கப்படுகிறது. திராவிட, நாத்திக, கம்யூனிச சதித் திட்டங்களால் தொடர்ந்து பல விஷயங்களில் ஏமாந்துவிட்ட ஹிந்துக்கள், தங்கள் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் காக்க கோயில்கள் விஷயத்திலாவது ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும் என்ற கருத்து தற்போது வலுப்பெற்று வருகிறது.

]]>
https://vskdtn.org/2022/03/26/the-sequel-is-temple-demolition/feed/ 0
இந்திய தேசிய கொடிக்கு மரியாதை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவன் நெகிழ்ச்சி https://vskdtn.org/2022/03/07/respect-for-the-indian-national-flag/ https://vskdtn.org/2022/03/07/respect-for-the-indian-national-flag/#respond Mon, 07 Mar 2022 06:48:44 +0000 https://vskdtn.org/?p=12734 உக்ரைனில் நம் நாட்டு தேசியக்கொடியை காட்டினால் மரியாதை கொடுக்கின்றனர்.

நம் நாட்டுக்கு வருவதற்கான முயற்சி மேற்கொண்டபோது இந்திய துாதரக உதவியால் பாதுகாப்புடன் வெளியேறினோம்.

பிரதமர் மோடியின் முழு முயற்சியால் நாங்கள் உயிருடன் நாடு திரும்பி உள்ளோம் என தமிழகத்தை சேர்ந்த திருப்பூர் மாணவர் ஸ்ரீதர் மத்திய அரசுக்கு நன்றி கூறினார்.

]]>
https://vskdtn.org/2022/03/07/respect-for-the-indian-national-flag/feed/ 0
மாணவர் மேம்பட ‘நீட்’ அவசியம் https://vskdtn.org/2022/03/07/student-need/ https://vskdtn.org/2022/03/07/student-need/#respond Mon, 07 Mar 2022 06:36:02 +0000 https://vskdtn.org/?p=12728 மாணவர்களின் திறன் சர்வதேச தரத்திற்கு மேம்பட, ‘நீட்’ தேர்வு அவசியம்.

அனைத்து வகையான படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு உண்டு
அதன்படி மாணவர்களின் திறன் சர்வதேச தரத்திற்கு மேம்பட நீட் தேர்வு அவசியம்.

தமிழகத்தில் 11 மருத்துவ கல்லுாரிகள் திறப்பதால் கூடுதல் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் முருகன் தெருவித்தார் .

]]>
https://vskdtn.org/2022/03/07/student-need/feed/ 0
தமிழகத்தில் விடுமுறை நாட்களில் பள்ளி நடத்த தடை https://vskdtn.org/2021/12/28/tamilnadu-not-to-run-school/ https://vskdtn.org/2021/12/28/tamilnadu-not-to-run-school/#respond Tue, 28 Dec 2021 11:37:06 +0000 https://vskdtn.org/?p=10174 தமிழகத்தில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன.இந்த நாட்களில் சில பள்ளிகள் வகுப்பு நடத்துவதாக புகர் வந்ததை அடுத்து கண்டிப்பாக வகுப்புகள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்ப்ட்டுளது.

]]>
https://vskdtn.org/2021/12/28/tamilnadu-not-to-run-school/feed/ 0
தமிழகத்தில் லாக்டவுன் இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் https://vskdtn.org/2021/12/25/no-lockdown-in-tn/ https://vskdtn.org/2021/12/25/no-lockdown-in-tn/#respond Sat, 25 Dec 2021 11:20:40 +0000 https://vskdtn.org/?p=10102 தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அரசு எந்த நேரத்திலும் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதிக்கும் என்ற கருத்தை நிராகரித்தார்.

         அதிகரித்து வரும் ஓமிக்ரான் வழக்குகளுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியதை அடுத்து, அவர் கூறுகையில், “சோதனை செய்தவர்களில் 10 சதவீதமாக உள்ள நபர்களுக்கு மேல் நோய் தொற்று இருப்பது தெரிய வந்தாலோ அல்லது 40 சதவீத மருத்துவமனை படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்திருந்தலோ மட்டும் உள்ளூர் அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்க மையத்தின் நிபுணர் குழு உத்தரவிட்டுள்ளது,உலக சுகாதார நிறுவனம் அல்லது மையமோ முழுமையான முடக்கத்தை பரிந்துரைக்கவில்லை என்று அவர் கூறினார்

]]>
https://vskdtn.org/2021/12/25/no-lockdown-in-tn/feed/ 0
தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? https://vskdtn.org/2021/11/06/what-is-the-tamil-nadu-government-going-to-do/ https://vskdtn.org/2021/11/06/what-is-the-tamil-nadu-government-going-to-do/#respond Sat, 06 Nov 2021 09:42:34 +0000 https://vskdtn.org/?p=9146 சர்வதேச கச்சா எண்ணை விலை உயர்வு, பெட்ரோல் டீசலுக்காக கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வாங்கப்பட்ட பல லட்சம் கோடி கடன், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, இலவச தடுப்பூசி, இலவச உணவு தானியங்கள், தேச பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைக்க முடியாமல் இருந்த பெட்ரோல் டீசல் விலையை, மத்திய அரசு, பொதுமக்களின் நலன் கருதி தற்போது பெட்ரோலுக்கு குறைத்த ரூ. 5, டீசலுக்கு ரூ. 10 என கணிசமாக குறைத்துள்ளது. இதனையடுத்து உத்தர பிரதேச அரசு மேலும் ரூ. 12 குறைத்துள்ளது. இதேபோல, புதுச்சேரி, கர்நாடகா, அசாம், கோவா, திரிபுரா, உத்தராகண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீது தலா ரூ. 7 குறைத்துள்ளன. ஆனால், தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு, அதுதான் ஏற்கனவே பெட்ரோல் விலையை 2 ரூபாய் தாராளமாக குறைத்துவிட்டோமே என கருதி இதுவரை வாய் திறக்காமல் உள்ளது. பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பெட்ரோல் டீசல், எரிவாயு விலைகளை குறைக்கவில்லை, ஜி.எஸ்.டிக்குள்ளும் அவற்றை கொண்டுவர மனமில்லை, எரிவாயு மானியத்தையும் தருவதாக இல்லை. இப்படி, ஆட்சியில் இல்லாதபோது ஒன்றாக பேசுவதும் ஆட்சிக்கு வந்த பிறகு வேறொன்றாக செயல்படுவதும் தி.மு.கவிற்கு வாடிக்கைதான் என்பது அதன் முந்தைய வரலாறு. தாங்கள் சிறிதும் மாறவில்லை என்பதை ஸ்டாலின் தலைமையிலான இன்றைய தி.மு.கவும் மெய்ப்பித்து வருகிறது.

]]>
https://vskdtn.org/2021/11/06/what-is-the-tamil-nadu-government-going-to-do/feed/ 0
உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஆர்.என்.ரவி தமிழக புதிய ஆளுநராக நியமனம். https://vskdtn.org/2021/09/10/ulavuthuraiyil-neenda-anupavam-perra-rn-ravi/ https://vskdtn.org/2021/09/10/ulavuthuraiyil-neenda-anupavam-perra-rn-ravi/#respond Fri, 10 Sep 2021 05:49:41 +0000 https://vskdtn.org/?p=8550 தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். தற்போது அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி, 1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்ததும், சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.

அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.

மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

அந்த பணியில் இருந்தபோது, இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டார். உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தபோது, ஐ.பி இயக்குநராக இருந்தவர் அஜித் தோவால். அவர்தான் தற்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவாலுக்கும் ஆர்.என். ரவிக்கும் நெருக்கமான புரிந்துணர்வு உள்ளது.

அந்த பணியின்போது தெற்காசியாவில் மனிதர்களின் பூர்விக குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றார். எல்லையோர மக்களின் அரசியல், சமூகவியலில் ஏற்படும் தாக்கங்களை அவர் காவல் நோக்கில் ஆராய்ந்து அரசு பல திட்டங்களை வகுக்க காரணமாக இருந்தார்.

இனக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் அவர் முக்கியப்பங்காற்றினார்.

2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தேசிய நாளிதழ்களில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளை தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார்.

பின்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்,

அங்கு புலனாய்வு சமூகத்தின் தலைவராகவும், நாட்டின் உளவுத்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வழிகாட்டியாக செயல்பட்டார்.

2014ஆம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோதி தலைமையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அவர் தமிழக ஆளுநராக தற்போது இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

]]>
https://vskdtn.org/2021/09/10/ulavuthuraiyil-neenda-anupavam-perra-rn-ravi/feed/ 0