tamilnadu government – VSKDTN News https://vskdtn.org Fri, 25 Mar 2022 12:54:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு:மக்கள் போராட்டம்:போலீஸ் தடியடி https://vskdtn.org/2022/03/25/demolish-temples-heavy-a/ https://vskdtn.org/2022/03/25/demolish-temples-heavy-a/#respond Fri, 25 Mar 2022 12:54:53 +0000 https://vskdtn.org/?p=13438 திருப்பூர் மாவட்டம், உடுமலை பள்ளபாளையம் செங்குளம் பகுதியிலுள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் பணி, நேற்று காலை துவங்கியது. முதற்கட்டமாக, 300க்கும் மேற்பட்ட போலீசாருடன், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம், 22 வீடுகளை அகற்றினர்.தொடர்ந்து, அங்கிருந்த ஆதிகருவண்ணராயர் வீரசுந்தரி கோவிலை இடிக்க சென்ற போது, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.’ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் இக்கோவில், பல நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. நீர் வழித்தடத்திற்கும், கோவிலுக்கும் தொடர்பு இல்லை. மின் இணைப்பு, வரி செலுத்துவது உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளது. கோவிலை இடிக்க அனுமதிக்கமாட்டோம்’ என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

]]>
https://vskdtn.org/2022/03/25/demolish-temples-heavy-a/feed/ 0
அரியலூர் மாணவி தற்கொலை விசாரணை: தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் குற்றச்சாட்டு https://vskdtn.org/2022/01/29/lavanya-case/ https://vskdtn.org/2022/01/29/lavanya-case/#respond Sat, 29 Jan 2022 08:55:27 +0000 https://vskdtn.org/?p=11353 அரியலூர் மாணவி தற்கொலை விசாரணையில் போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தமிழக அரசு மீது தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் குற்றச்சாட்டி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இந்த ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு வரும் 30,31 தேதிகளில் பள்ளி அமைந்துள்ள மைக்கேல்பட்டி வர இருக்கிறது. இதன் விசாரணைக்கு உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஆணையம் கூறி உள்ளது.இருப்பினும் திட்டமிட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என ஆணையம் கூறி உள்ளது.

]]>
https://vskdtn.org/2022/01/29/lavanya-case/feed/ 0
இதுவா அனைவருக்குமான அரசு? https://vskdtn.org/2021/11/06/is-this-a-government-for-everyone/ https://vskdtn.org/2021/11/06/is-this-a-government-for-everyone/#respond Sat, 06 Nov 2021 09:53:26 +0000 https://vskdtn.org/?p=9152 தீபாவளிக்கு விடுமுறைவிட கிறிஸ்தவ நாடான அமெரிக்காவின் நாடாளூமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் உட்பட பல உலகத் தலைவர்களும் தீபாவளி வாழ்த்து சொல்கின்றனர். பாரதத்தில் ஜனாதிபதி, பிரதமர், ஆளுனர் என அனைவரும் வாழ்த்து சொல்கின்றனர். ஆனால், தி.மு.க அரசின் முல்வராக உள்ள ஸ்டாலின் மட்டும் வாழ்த்து சொல்லவில்லை.

தீபாவளி மட்டுமல்ல, அனைத்து ஹிந்து பண்டிகைகளுக்கும் இவர் வாழ்த்து சொல்வதில்லை. அவர் வாழ்த்து சொல்லி இங்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம். எனினும், கிறிஸ்தவ முஸ்லிம் பண்டிகைகளுக்கு ஓடோடி சென்று வாழ்த்து தெரிவிப்பதும் விழாக்களில் கலந்துகொண்டு குல்லா போட்டு கஞ்சி குடிப்பது, கேக் உண்பது எல்லாவற்றையும் செய்யும் ஸ்டாலின், ஹிந்துக்கள், ஹிந்து பண்டிகைகள் என்று வந்தால் மட்டும் நாத்திகராகி விடுகிறார். சமீபத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில்கூட அவர் திருநீற்றை தவிர்த்தது நினைவில் இருக்கலாம். சரி, இதெல்லாம் அவரின் கட்சி கொள்கையாகவே இருக்கட்டும், அக்கட்சியில் உள்ள ஹிந்துக்களுக்கு அது உரைக்கவில்லை என்றால் போகட்டும்.

ஸ்டாலினின் மனைவி ஹிந்து கோயில்களுக்கு செல்கிறார் என்றால் அது அவரின் குடும்ப விஷயம். ஒரு கட்சித் தலைவராக ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்றால் அது அவரின் கட்சி சார்ந்த விஷயம். ஆனால், ஸ்டாலின் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல, அவர் தமிழகத்தின் முதல்வரும்கூட. அனைவருக்குமான ஆட்சி என சொல்லி பதவி ஏற்றவர். அப்படியெனில், அனைவருக்கும் பொதுவான அவர், ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் திட்டமிட்டே புறக்கணிக்கிறார் என்றால் அது அவர் ஏற்றுக்கொண்ட பதவி பிரமாணத்தை மீறுவதாகத்தானே அர்த்தம், இது சட்டப்படி குற்றம்தானே? அவர் மீது இதற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் வழிவகைகள் உள்ளன. அது எப்படியோ போகட்டும். ஆனால், இவற்றை எல்லாம் சாமானிய ஹிந்துக்களான நாம் புரிந்துகொள்வதுதான் இங்கு மிகவும் அவசியம்.

]]>
https://vskdtn.org/2021/11/06/is-this-a-government-for-everyone/feed/ 0
சிதம்பரம் நடராஜர் கோவிலில் குரோனாவை காரணம் காட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு. https://vskdtn.org/2021/08/14/chitambaram-nadarajar-kovilil-kuronavai/ https://vskdtn.org/2021/08/14/chitambaram-nadarajar-kovilil-kuronavai/#respond Sat, 14 Aug 2021 09:29:01 +0000 https://vskdtn.org/?p=7902 குரோனா பரவலை காரணம் காட்டி ஹிந்து கோவில்களை மட்டும் அதுவும் குறிப்பாக ஆடி மாதம் என்பதால் பொதுமக்கள் செல்லும் கோவில்களை குறிவைத்து திருவிழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை தடை செய்து பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரண்டு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாமிய, கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களுக்கு எப்போதும்போல சர்வ சாதாரணமாக சென்று வருகின்றனர். அங்கு குரோனா பரவாதோ?

]]>
https://vskdtn.org/2021/08/14/chitambaram-nadarajar-kovilil-kuronavai/feed/ 0