Tamilnadu – VSKDTN News https://vskdtn.org Thu, 17 Aug 2023 11:08:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது மத்திய அரசு https://vskdtn.org/2023/08/17/madurai-aiims-building-p/ https://vskdtn.org/2023/08/17/madurai-aiims-building-p/#respond Thu, 17 Aug 2023 11:08:16 +0000 https://vskdtn.org/?p=24216 மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2015ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் துவங்கவில்லை. இதனால் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து, மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசும், மத்திய அரசும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில், மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் செப்டம்பர் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

]]>
https://vskdtn.org/2023/08/17/madurai-aiims-building-p/feed/ 0
TheKeralaStory – திரைப்படத்திற்கு தடை கோரிய பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது https://vskdtn.org/2023/05/05/thekeralastory-high-court-chennai/ https://vskdtn.org/2023/05/05/thekeralastory-high-court-chennai/#respond Fri, 05 May 2023 11:08:43 +0000 https://vskdtn.org/?p=22242 சென்னை. “தி கேரளா ஸ்டோரி” என்ற பன்மொழி திரைப்படத்தை வெளியிட தடை கோரிய பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

]]>
https://vskdtn.org/2023/05/05/thekeralastory-high-court-chennai/feed/ 0
புதுச்சேரியில் 216 பேருக்கு கலைமாமணி விருது https://vskdtn.org/2023/04/29/puducherry-216-berukka/ https://vskdtn.org/2023/04/29/puducherry-216-berukka/#respond Sat, 29 Apr 2023 12:35:27 +0000 https://vskdtn.org/?p=22076 கலைமாமணி விருதுபுதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம் மற்றும் சிற்பம், நாட்டுப்புறக்கலை ஆகிய துறைகள் சார்ந்த வல்லுனர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. 2022, 2023-ம் ஆண்டுக்களுக்கான கலைமாமணி விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வருகிற 1.6.2023 முதல் புதுச்சேரி கலை, பண்பாட்டுத்துறையில் வழங்கப்படுகிறது.

]]>
https://vskdtn.org/2023/04/29/puducherry-216-berukka/feed/ 0
கங்கை காவிரி சங்கமத்திற்கு ஒப்பானது https://vskdtn.org/2022/12/01/the-ganga-is-similar-to-the-cauvery-confluence/ https://vskdtn.org/2022/12/01/the-ganga-is-similar-to-the-cauvery-confluence/#respond Thu, 01 Dec 2022 02:20:31 +0000 https://vskdtn.org/?p=18874 காசி தமிழ் சங்கமம் என்பது கங்கை காவிரி சங்கமத்திற்குஒப்பானது என்று காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் கே. வெங்கட்ரமண கனபாடிகள் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து காசி சென்று 5வது தலைமுறையாக அங்கு வாழ்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த இவர், முதன் முறையாக காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினராக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காசி தமிழ் சங்கமத்தையொட்டி பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி அரசு, முதன் முறையாககாசி தமிழ் சங்கமத்திற்கு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. காசியில் கங்கை இருக்கிறது, விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காலபைரவர், சோயி அம்மன்இருக்கிறார்கள். கங்கையில், புனித நீராடவும், கடவுள்களை தரிசிக்கவும், தமிழகத்தின் கிராமங்களில் உள்ளவர்கள் கூட ஒரு முறையாவது வரவேண்டும் என்று விரும்புவார்கள். ஏற்கனவே வந்தவர்களைவிட இப்போதுகூடுதலாக வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் மக்கள் வருகையால் காசிக்கும் தமிழகத்துக்கும் இடையேயான உறவும் அதிகரிக்கும். காசிநாதர் ஆலயம் மிகக் குறுகலாக சுமார் 1,000 பேர் வரைதான் ஏற்கெனவே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், தமிழகத்தில் இருந்தும் தென்மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் காசிக்கு வருகிறார்கள் என்பதை அறிந்த பிரதமர் மோடி, விஸ்வநாதர் ஆலயத்தை விரிவாக்க உறுதி மேற்கொண்டார். தற்போது இதனை கடல் போல் பரந்த பிரகாரமாக விரிவுப்படுத்தியுள்ளார். இதனால் இப்போது தினமும் இரண்டு லட்சம் பேர் வரை தரிசனம் செய்யமுடியும். முன்பெல்லாம் அன்னதானம் இல்லை, கடந்த ஆறு மாதமாக கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுவதோடு பிரசாதமும் வழங்கப்படுகிறது. உலகத்திலேயே கிடைக்காத மணிகர்னிகா தீர்த்தம், விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகிலேயே உள்ளது. இந்த தீர்த்தத்தை கையில் எடுத்து வந்து நேரடியாக விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பிரமாண்டமான கலையரங்கு கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோயில்களில் பாராயணங்களும், கச்சேரிகளும் நடப்பது போல, காசியிலும் நடத்துவதற்கு வசதியாக இந்தக் கலையரங்கு அமைந்துள்ளது” என பெருமையாகக் குறிப்பிட்டார்.

]]>
https://vskdtn.org/2022/12/01/the-ganga-is-similar-to-the-cauvery-confluence/feed/ 0
கிராம கோயில்களில் திருவிழா நடத்த போலீசார் அனுமதி வேண்டியதில்லை மதுரை ஐகோர்ட் உத்தரவு https://vskdtn.org/2022/08/16/tamilnadu-police-temple/ https://vskdtn.org/2022/08/16/tamilnadu-police-temple/#respond Tue, 16 Aug 2022 09:46:57 +0000 https://vskdtn.org/?p=16748 சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பிருந்தால், ஸ்பீக்கர்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வைப்பதற்கு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். ஏனைய சாதாரண கிராம கோயில்களில் திருவிழா நடத்த அனுமதி பெற அவசியம் இல்லை என நீதிபதி கூறினார். விருதுநகர், வலையபட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கினார்.

]]>
https://vskdtn.org/2022/08/16/tamilnadu-police-temple/feed/ 0
கோவில் சொத்து அறநிலையத்துறைக்கு சொந்தம் அல்ல ஐகோர்ட் அதிரடி https://vskdtn.org/2022/08/13/temple-property-charity/ https://vskdtn.org/2022/08/13/temple-property-charity/#respond Sat, 13 Aug 2022 12:37:54 +0000 https://vskdtn.org/?p=16680 ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அறநிலையத்துறை உரிமை கோர தடை விதிக்க வேண்டும் என கோரிய மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதி வழங்கிய உத்தரவில் கோயில் சொத்துக்களை குத்தகை மற்றும் வாடகைக்கு விட மட்டுமே உரிமை உள்ளது. இருப்பினும் இது தொடர்பாக அறங்காவலர்களின் கருத்தையும், ஆலோசனையையும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.கோவில் சொத்துக்களை அறநிலையத்துறை சொத்தாக கருதக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

]]>
https://vskdtn.org/2022/08/13/temple-property-charity/feed/ 0
தமிழக காவல்துறைக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி https://vskdtn.org/2022/07/31/tamilnadu-police/ https://vskdtn.org/2022/07/31/tamilnadu-police/#respond Sun, 31 Jul 2022 08:03:52 +0000 https://vskdtn.org/?p=16297 தமிழக போலீஸ் துறைக்கு மிக உயிரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது.
விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு , சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெங்கையா நாயுடுவை, டிஜிபி, கமிஷனர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.இந்த கொடியை, இதுவரை இந்தியாவில் 10 மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட வெங்கையா நாயுடுவுக்கு சதுரங்க அட்டையை தமிழக முதல்வர் பரிசாக வழங்கினார்.
தமிழக போலீஸ் நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது. முன்னோடி மட்டுமல்ல முன்னணியிலும் உள்ளது. ஜனாதிபதியின் விருது பெற்றது தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பெருமை. உயிரை பொருட்படுத்தாமல் தமிழக காவல் துறை சேவைக்கான அங்கீகாரம். ஜாதி மத கலவரங்கள் துப்பாக்கிச்சூடுகள் இல்லை. போலீஸ் ஸ்டேசனில் மரணங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது. டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு முதல் காவலர் பதக்கங்கள் வழங்கப்படும். இவ்வாறு தமிழக முதல்வர் பேசினார்.

]]>
https://vskdtn.org/2022/07/31/tamilnadu-police/feed/ 0
விண்வெளி ஆராய்ச்சியில் மதிப்புமிக்க நாடு இந்தியா : இஸ்ரோ துணை இயக்குனர்  https://vskdtn.org/2022/07/30/in-space-exploration-m/ https://vskdtn.org/2022/07/30/in-space-exploration-m/#respond Sat, 30 Jul 2022 08:47:16 +0000 https://vskdtn.org/?p=16276 ‘விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை புறம் தள்ளிய மேலை நாடுகள் மத்தியில்  தற்போது இந்தியா மதிப்பு மிக்க நாடாக உயர்ந்துள்ளது” என இஸ்ரோ துணை இயக்குனர் ஆர்.வெங்கட்ராமன் பேசினார்.
திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் நிறுவனர் தின விழா தாளாளர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது.
செவ்வாய் கிரகத்தில் விண்வெளி மையத்தை முதல் முயற்சியிலேயே கொண்டு சேர்த்தோம். ஆனால் பல நாடுகள் 30 முதல் 50 முயற்சிகளை மேற்கொண்டனர். மாணவர்கள் நிறைய கற்று புதிய சிந்தனைகளுடன் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் உங்களை சுற்றி ஒரு புதிய உலகம் இயங்கும். தலைமை பண்பு தேடி வரும். மாணவர்களுக்கு தேடல் மிகவும் அவசியம்.
அறிவியல் நுட்ப வளர்ச்சிக்கு கணிதம், இயற்பியல் முக்கிய பங்காற்றுகிறது என்றார்.

]]>
https://vskdtn.org/2022/07/30/in-space-exploration-m/feed/ 0
தமிழகத்தில் NIA குழுவினரால் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு https://vskdtn.org/2022/07/28/in-tamil-nadu-it-is-the-nia-group/ https://vskdtn.org/2022/07/28/in-tamil-nadu-it-is-the-nia-group/#respond Thu, 28 Jul 2022 08:56:16 +0000 https://vskdtn.org/?p=16164 ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நில புரோக்கர் மகபூப் மகன் ஆசிப் முசாப்தீன் 28; ஈரோடு பி.பெ.அக்ஹாரம் நஞ்சப்பா நகரைச் சேர்ந்த யாசின் 33 ஆகிய என்.ஐ.ஏ. குழுவினர் ஜூலை 26ம் தேதி மதியம் இருவரையும் கைது செய்தனர்.இருவரது வீடுகளில் இருந்த அலைபேசி, லேப்டாப், சிம் கார்டு, வங்கி பாஸ் புக், துண்டு பிரசுரம், டைரிகள், ஆவணங்கள், ஆதார் கார்டுகளை கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்து சென்றனர். விசாரணையில் ஆசிப் முசாப்தீனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ஆசிப் முசாப்தீன் மீது உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.யாசினிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

]]>
https://vskdtn.org/2022/07/28/in-tamil-nadu-it-is-the-nia-group/feed/ 0
தமிழக விவசாயிகளிடம் தோற்று போன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் https://vskdtn.org/2022/06/30/marxist-communist-among-the-peasants-of-tamil-nadu/ https://vskdtn.org/2022/06/30/marxist-communist-among-the-peasants-of-tamil-nadu/#respond Thu, 30 Jun 2022 10:38:41 +0000 https://vskdtn.org/?p=15480 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு திட்டமிட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 27ம் தேதி நேரடி நெல் விதைப்பு பணியை தடுக்க முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை ஆர்டிஓ யுரேகா சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144(3)ன்படி மேலபருத்திக்குடி மற்றும் கீழப்பருத்திக்குடி, காலனித்தெரு உள்ளிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.அப்பகுதியில் ஏடிஎஸ்பி தங்கவேல் தலைமையில் 3 டிஎஸ்பிகள், 8 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 150 போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனையடுத்து காலை 9 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் தங்கள் வயல்களில் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.

]]>
https://vskdtn.org/2022/06/30/marxist-communist-among-the-peasants-of-tamil-nadu/feed/ 0