temple – VSKDTN News https://vskdtn.org Tue, 16 Aug 2022 09:46:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கிராம கோயில்களில் திருவிழா நடத்த போலீசார் அனுமதி வேண்டியதில்லை மதுரை ஐகோர்ட் உத்தரவு https://vskdtn.org/2022/08/16/tamilnadu-police-temple/ https://vskdtn.org/2022/08/16/tamilnadu-police-temple/#respond Tue, 16 Aug 2022 09:46:57 +0000 https://vskdtn.org/?p=16748 சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பிருந்தால், ஸ்பீக்கர்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வைப்பதற்கு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். ஏனைய சாதாரண கிராம கோயில்களில் திருவிழா நடத்த அனுமதி பெற அவசியம் இல்லை என நீதிபதி கூறினார். விருதுநகர், வலையபட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கினார்.

]]>
https://vskdtn.org/2022/08/16/tamilnadu-police-temple/feed/ 0
கோயிலில் ஹலால் போர்டுகள் அகற்றம் https://vskdtn.org/2022/05/27/removal-of-halal-boards-in-the-temple/ https://vskdtn.org/2022/05/27/removal-of-halal-boards-in-the-temple/#respond Fri, 27 May 2022 10:54:15 +0000 https://vskdtn.org/?p=15340 தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெத்தம்மாதல்லி கோயிலில் உள்ள பிரசாதக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஹலால் பொருட்களையும் ஹலால் விளம்பரப் பலகைகளையும் அகற்ற பக்தர்களும் ஹிந்து அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், கோயில் நிர்வாகம் இதற்கு செவிசாய்க்க மறுத்தது. இதனையடுத்து, அதிரடியாக அங்கு சென்ற ஹிந்து ஐக்கிய முன்னணி கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் அந்த கோயிலில் வைக்கப்பட்டிருந்த ஹலால் விளம்பரப் பலகைகளை அகற்றினர். மேலும், எந்த ஒரு ஹிந்து கோவில் வளாகத்திலும் ஹலால் போன்ற ஹிந்து அல்லாத செயல்களை ஊக்குவிப்பது அனுமதிக்கப்படாது என்றும், ஆந்திரா, தெலுங்கானா என்ற இரு தெலுங்கு மாநிலங்களில் உள்ள எந்த கோயில்களிலும் இனி ஹலால் போர்டு வைக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். விலங்குகளை அறுக்கும் ஹலால் நடைமுறையை சில அமைப்புகள் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வேண்டுமென்றே கோயில்களில் வைக்க ஊக்குவிக்கின்றன என அவர்கள் தெரிவித்தனர். ஹிந்துத்துவா அமைப்புகளின் தலையீட்டையடுத்து, பெத்மம்மா தல்லி கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஹலால் முறையைத் தடைசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

]]>
https://vskdtn.org/2022/05/27/removal-of-halal-boards-in-the-temple/feed/ 0
பாண்டியர் கால கோயில் கண்டுபிடிப்பு https://vskdtn.org/2022/03/28/discovery-of-the-pandya-period-temple/ https://vskdtn.org/2022/03/28/discovery-of-the-pandya-period-temple/#respond Mon, 28 Mar 2022 08:30:21 +0000 https://vskdtn.org/?p=13567 கோயிலின் கர்ப்பகிரகம், அர்த்த, மகா மண்டபங்கள் சிதைந்துள்ளன. பிற்கால கட்டட, சிற்பக் கலைகளை பார்க்கும் போது பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களின் பங்களிப்பு தெரிகிறது. கருவறையில் எந்த சிலையும் இல்லை. வைணவ தலம் என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன.
கோயில் நுழைவாயில்துாண்களில், நான்கு அடி உயர கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள்வைணவ தலம் தான் என்பதை தெளிவுபடுத்துகின்றன.
துாண்களில் வைணவ திருநாமம், சங்கு, சக்கரம், நரசிம்மர் சிற்பங்கள் உள்ளன. நடன மங்கையர், பெண் பேறுகால நிகழ்வை குறிக்கும் புடைப்பு சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளது.முன் மண்டப இடது ஓரம் செவ்வக கல்லில் உள்ள ஆட்டுக்கல் மருந்து தயாரிக்கப்பட்ட ஆதாரத்தை காட்டுகிறது. இங்கே விழுந்து கிடக்கும் ஒரு கல்லில் இரண்டு மீன்களின் உருவங்களுக்கு நடுவில் செண்டு பொறித்த சின்னம் காணப்படுகிறது.

]]>
https://vskdtn.org/2022/03/28/discovery-of-the-pandya-period-temple/feed/ 0
ஆன்மிக தலைநகர் தமிழகம் https://vskdtn.org/2022/03/28/spiritual-capital-tamil-nadu/ https://vskdtn.org/2022/03/28/spiritual-capital-tamil-nadu/#respond Mon, 28 Mar 2022 08:20:01 +0000 https://vskdtn.org/?p=13561 ”இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழகம் விளங்குகிறது,” என கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் துாக்க திருவிழா கொடியேற்று விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.செப்புமொழி பதினெட்டுடையாள், சிந்தனையில் ஒன்றுடையாள் என்பது போன்று இந்திய மக்கள் ஒரே சிந்தனை கொண்டவர்களாக காலம் காலமாக பத்ரகாளியை வழிபடுகின்றனர். சுதந்திரத்துக்கு பிறகும் நமது நாடு பல பகுதிகளாக பிரிந்து கிடக்கிறது. பல மாநிலங்கள் வளர்ந்துள்ளன..அதில் நிறைய ஏழைகள் உள்ளனர். இந்தியா வளர்ந்த நாடமாக மாற வேண்டும் எனில் வடக்குக்கும் தெற்குக்கும் உள்ள வேறுபாடுகள் களையப்பட வேண்டும். அனைவருக்கும் கவுரமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட்டால் நாடு மேலும் வளரும், என்றார்.

]]>
https://vskdtn.org/2022/03/28/spiritual-capital-tamil-nadu/feed/ 0
கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு:மக்கள் போராட்டம்:போலீஸ் தடியடி https://vskdtn.org/2022/03/25/demolish-temples-heavy-a/ https://vskdtn.org/2022/03/25/demolish-temples-heavy-a/#respond Fri, 25 Mar 2022 12:54:53 +0000 https://vskdtn.org/?p=13438 திருப்பூர் மாவட்டம், உடுமலை பள்ளபாளையம் செங்குளம் பகுதியிலுள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் பணி, நேற்று காலை துவங்கியது. முதற்கட்டமாக, 300க்கும் மேற்பட்ட போலீசாருடன், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம், 22 வீடுகளை அகற்றினர்.தொடர்ந்து, அங்கிருந்த ஆதிகருவண்ணராயர் வீரசுந்தரி கோவிலை இடிக்க சென்ற போது, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.’ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் இக்கோவில், பல நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. நீர் வழித்தடத்திற்கும், கோவிலுக்கும் தொடர்பு இல்லை. மின் இணைப்பு, வரி செலுத்துவது உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளது. கோவிலை இடிக்க அனுமதிக்கமாட்டோம்’ என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

]]>
https://vskdtn.org/2022/03/25/demolish-temples-heavy-a/feed/ 0
கோயில் மீது பொய் வழக்கு https://vskdtn.org/2021/11/20/lying-case-on-the-temple/ https://vskdtn.org/2021/11/20/lying-case-on-the-temple/#respond Sat, 20 Nov 2021 05:30:22 +0000 https://vskdtn.org/?p=9308 அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர் என்ற ஹிந்து கோயில் அதன் கட்டுமானப் பணிகளுக்காக, மனித கடத்தல், கட்டுமான தளத்தில் கட்டாயமாக வேலை செய்யவைத்து உழைப்பை சுரண்டுதல், கோயிலைக் கட்டும் பணியில் 1 அமெரிக்க டாலருக்கும் குறைவான கூலியில் வேலை செய்யத் தள்ளப்பட்ட பணியாட்கள் போன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள கோயில் நிர்வாகம், ‘சேவையின் மூலம் வழிபாடு பக்தியின் ஒருங்கிணைந்த பகுதி. மேலும் கோயில் கட்டும் பணியில் உலகம் முழுவதிலுமிருந்து தன்னார்வலர்கள் விரும்பியே பங்களிக்கின்றனர். கோயில் கட்ட R-1 விசாவின் மூலம் பணியமர்த்தப்பட்ட கைவினைஞர்களில் பலர் வீடு திரும்பிவிட்டனர். சிலர் அமெரிக்காவில் உள்ள மற்ற கோவில்களில் பணி செய்ய விரும்பி அங்கு சென்றுள்ளனர். வழிபாட்டாளர்கள், பார்வையாளர்கள், தன்னார்வலர்களின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட பாதுகாப்பு வேலிகளும் காவலர்களும் இதுவரை கைவினைஞர்கள் உட்பட யாரும் வெளியேறுவதை தடுத்தது இல்லை. கோயில் நிர்வாக எந்த மனித கடத்தலிலும் ஈடுபடவில்லை’ என தெரிவித்துள்ளது.

]]>
https://vskdtn.org/2021/11/20/lying-case-on-the-temple/feed/ 0
கோயில் இடத்தில் வாடகை பாக்கி https://vskdtn.org/2021/11/15/rent-arrears-at-the-temple-site/ https://vskdtn.org/2021/11/15/rent-arrears-at-the-temple-site/#respond Mon, 15 Nov 2021 07:15:07 +0000 https://vskdtn.org/?p=9270 விழுப்புரத்தில் ஆஞ்சநேயசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில், டாக்டர் தியாகராஜன் என்பவர் கிளினிக் நடத்துகிறார். 2014 முதல் அவர் ஒரு ரூபாய்கூட வாடகை செலுத்தவில்லை. இதனால், குத்தகையை ரத்து செய்து வெளியேற்ற நிர்வாக அதிகாரி, 2013ல் உத்தரவு பிறப்பித்தாலும், அதை அமல்படுத்தவில்லை. 2021 செப்டம்பரில் அவரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை கோயில் நிர்வாகம் எடுத்தது. உடனே வாடகை பாக்கி, உயர்த்தப்பட்ட வாடகை என 3.56 லட்சம் ரூபாயை, கோயில் நிர்வாகத்திடம் தியாகராஜன் செலுத்தினார். வெளியேற்றப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த, நீதிபதி, ஒரு மாதம் வாடகை பாக்கி என்றாலும், சொத்தின் உரிமையாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்ததால் அவரை ஆக்கிரமிப்பாளராகக் கருதி குத்தகையை ரத்து செய்ய கோயில் நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. ஆக்கிரமிப்பாளரை சட்டப்படி அகற்றிக் கொள்ளலாம். வாடகை பாக்கியையும் சட்டப்படி வசூலித்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

]]>
https://vskdtn.org/2021/11/15/rent-arrears-at-the-temple-site/feed/ 0
கோயிலின் வெள்ளி கருவூலத்தில் https://vskdtn.org/2021/10/12/silver-treasury/ https://vskdtn.org/2021/10/12/silver-treasury/#respond Tue, 12 Oct 2021 12:50:29 +0000 https://vskdtn.org/?p=8914 ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜகந்நாத் கோயிலின் நிர்வாகம், 500 கிலோ மதிப்பிலான கோயிலுக்கு தானமாக தரப்பட்ட வெள்ளி பொருட்களை 11 பெட்டிகளில் வைத்து பூரி மாவட்ட அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பதற்காக கொண்டு சென்றது. இந்த வெள்ளி, கோயிலின் 12ம் நூற்றண்டை சேர்ந்த எட்டு வாயில் கதவுகளுக்கு வெள்ளித் தகடு பதிப்பிக்கும் பணிக்காக பயன்படுத்தப்படும். தெய்வங்கள் தற்போது கோயிலுக்குள் இருப்பதாலும் பொதுமக்கள் அதிகம் வருவார்கள் என்பதாலும் சாதாரண நாட்களில் வெள்ளி பூசும் வேலையை மேற்கொள்வது கடினம். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வருடாந்திர பூரி ரத யாத்திரையின்போது இந்த திருப்பணி நடத்தப்படும். அதுவரை வெள்ளியை கோயிலுக்குள் வைத்து பாதுகாப்பது புத்திசாலித்தனம் அல்ல என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

]]>
https://vskdtn.org/2021/10/12/silver-treasury/feed/ 0
கோவில் நிலத்திற்கு நியமான குத்தகை நிர்ணயிக்க வேண்டும். அறநிலையத்துறை கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு. https://vskdtn.org/2021/09/28/kovil-nilathirkku-niyamaana/ https://vskdtn.org/2021/09/28/kovil-nilathirkku-niyamaana/#respond Tue, 28 Sep 2021 05:35:47 +0000 https://vskdtn.org/?p=8745 கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பெருந்துறையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 4.02 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று, 1982ல் பள்ளி துவங்கப்பட்டது. குத்தகை நிலம் தவிர்த்து, கூடுதலாக 2.50 ஏக்கர் நிலத்தையும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகத்துக்கு, 2018 ஜூலையில், ‘நோட்டீஸ்’ அனுப்பினார். இதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அறநிலையத்துறை சார்பில், வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையை, அறநிலையத்துறை கமிஷனர் பிறப்பிக்க வேண்டும். வாடகை மறு நிர்ணயம்; கூடுதல் வாடகையை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்வதை, கமிஷனர் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

]]>
https://vskdtn.org/2021/09/28/kovil-nilathirkku-niyamaana/feed/ 0
வழிபாட்டுத்தலங்களின் சொத்துகளை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல். https://vskdtn.org/2021/07/22/valipaattuthalankalil-soththukalil/ https://vskdtn.org/2021/07/22/valipaattuthalankalil-soththukalil/#comments Thu, 22 Jul 2021 09:17:11 +0000 https://vskdtn.org/?p=7814 ஹிந்து கோவில் உட்பட வழிபாட்டுத்தலங்களின் சொத்துகளை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய்.


உச்சநீதிமன்றதில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர், முஸ்லிம், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களைப் போல இந்து, ஜெயின், சீக்கிய மற்றும் புத்த மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களையும் பக்தர்கள் நிர்வகிக்க உரிமை வழங்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்து, ஜெயின், சீக்கிய மற்றும் புத்த வழிபாட்டுத் தளங்களை நிர்வாகிக்க உருவாக்கப்பட்டுள்ள மாநிலச் சட்டங்கள் தன்னிச்சையானவை என்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை என்றும் அறிவிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தளங்களையும் நிர்வகிக்க் ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தளங்கள் கடவுள் மறுப்பாளர்களால் நிர்வகிக்கப்படுவது நகை முறணாக உள்ளது என்றும் வழிபாட்டுத் தளங்களின் நிதி ஆதாரங்களை மாநில அரசுகள் சீரழித்துள்ளது என்றும் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து அறநிலையத்துறை சுமார் 30 ஆயிரம் கோவில்களை அதன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது என்றும் இவ்வளவு கோவில்களை நிர்வகிக்க போதுமான ஊழியர்களையும், அதிகாரிகளையும் தமிழ்நாடு அரசு கொண்டிருக்கவில்லை என்றும், இதனால் அந்த பழமை வாய்ந்த கோவில்கள் பாழடைந்து வருகின்றன என்றும் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
https://vskdtn.org/2021/07/22/valipaattuthalankalil-soththukalil/feed/ 2